- Home
- Spiritual
- Spiritual: ஜாதகம் இல்லாதவர்களின் தோஷங்களை நீக்கும் பரிகாரம்! எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் தெரியுமா?
Spiritual: ஜாதகம் இல்லாதவர்களின் தோஷங்களை நீக்கும் பரிகாரம்! எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் தெரியுமா?
ஜாதகம் இல்லாதவர்கள் சந்திக்கும் துன்பங்கள், தடைகள் விலக சில எளிய பரிகாரங்கள் உள்ளன. ஜீவராசிகளுக்கு உதவுவது, பெரியோரை மதிப்பதுடன், விருத்தாசலத்தில் உள்ள 18 அடி ஆழத்து விநாயகரை வணங்குவதன் மூலம் தோஷங்கள் நீங்கி, வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

துன்பங்கள் விலகி நலமான வாழ்க்கை அமையும்
ஜாதகம் இல்லாதவர்கள் வாழ்க்கையில் எதிர்நீச்சல், தடை, மனக் கலக்கம் போன்ற பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. ஆனால், சில எளிய பரிகாரங்களைச் செய்தாலே இத்தகைய துன்பங்கள் விலகி நலமான வாழ்க்கை அமையும். முதலில், பசுமாடுகளுக்கு தீவனம் அளித்தல், நாய்களுக்கு உணவு போடுதல், பறவைகளுக்கு நவதானியம் வைப்பது போன்ற கருணை செயல்கள் முக்கியம். அதோடு பெற்றோருக்கும், மூத்தோர்களுக்கும் மரியாதை கொடுத்து அவர்களின் ஆசியை பெறுதல் அவசியம்.
கிரக தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்
ஜாதகம் இல்லாதவர்கள் ஒரு நல்ல முற்றிய தேங்காயில் பேரீச்சம் பழம், முந்திரி, கரும்புச் சர்க்கரை சேர்த்து அரச மரத்தின் அடியில் புதைத்தால் துன்பங்கள் குறையும் என கூறப்படுகிறது. அதேபோல் பச்சரிசி, தேங்காய் துருவல், வாழைப்பழம் ஆகியவற்றை நாகாத்தம்மன் சிலை முன்பு வைத்து வணங்கினால் கிரக தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
அருள் தரும் பாதாள விநாயகர்
ஜாதகம் இல்லாதவர்களுக்கு மிக முக்கியமான தீர்த்தஸ்தலம் விருத்தாசலத்தில் உள்ள பழமலைநாதர் கோயில் ஆகும். இங்கு 18 அடி ஆழத்தில் அமைந்துள்ள ஆழத்து விநாயகர் மிகவும் சக்திவாய்ந்தவர். இவரை “பாதாள விநாயகர்” என்றும் அழைக்கின்றனர். இவரை வணங்கினால் 21 பிறவிகளில் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும், திருமணத்தடை நீங்கி, கல்வி, செல்வம், குழந்தை பாக்கியம் அனைத்தும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
ஆழத்து விநாயகரை வணங்கி வாழ்வில் நன்மைகளைப் பெறலாம்
சங்கடஹர சதுர்த்தி நாளில் வநாயகரை வழிபட்டால் அனைத்து சங்கடங்களும் விலகும். உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் 108 தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்த வருகின்றனர். திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும் பெருகும் ஆழத்துப் பிள்ளையாரைப் பேணுவோம்என்ற பாடல் இவரின் அருளை எடுத்துரைக்கிறது. ஆகவே, ஜாதகம் இல்லாதவர்கள் ஆழத்து விநாயகரை வணங்கி வாழ்வில் நன்மைகளைப் பெறலாம்.