MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • கெட்ட நேரம் கூட நல்ல நேரமா மாறும்! 1 வெற்றிலை, நெய் தீபம் வைத்து நம்பிக்கையோடு நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

கெட்ட நேரம் கூட நல்ல நேரமா மாறும்! 1 வெற்றிலை, நெய் தீபம் வைத்து நம்பிக்கையோடு நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

கெட்ட நேரம் கூட நல்ல நேரமாக மாறி வாழ்க்கை மகிழ்ச்சியாக செய்ய வேண்டிய பரிகாரம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

2 Min read
Author : maria pani
| Updated : May 15 2023, 05:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

 வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்கும் போது நம்முடைய நேரத்தை தான் குறிப்பிட்டு பேசுவோம். ஏதேனும் நல்ல விஷயங்கள் நடக்கும் போது நல்ல நேரம் என்றும், மோசமான விளைவுகளை சந்தித்தால் கெட்ட நேரம் என்றும் மனித மனங்கள் புலம்பி தவிக்கும்.

பணம், பெயர், புகழ் என எது இருந்தாலும் வாழ்வில் நடக்கும் ஏதோ ஒரு பிரச்சனை நம்முடைய மனநிம்மதியை எடுத்துக் கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் வரும்போது, "என் வாழ்க்கையில் நேரமே சரியில்லை" என புலம்புவோம். இப்படிப்பட்ட உங்களுடைய கெட்ட நேரத்தையும், நல்ல நேரமாக மாற்ற இறைவனிடம் சரணாகதி அடைந்தால் போதும். அதற்காக செய்ய வேண்டிய பரிகாரத்தை இங்கு காணலாம். 

 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

சில பரிகாரங்களை நாம் வாரம்தோறும், மாதம்தோறும் என தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இந்த பரிகாரத்தை ஒரே ஒரு தடவை செய்தால் கூட நல்ல பலன் கிடைக்கும். நாம் புலம்பும் கெட்ட நேரங்கள் கூட விலகி, மகிழும் நல்ல நேரம் தொடங்கிவிடும். 

வெற்றிலை பரிகாரம் 

இந்த பரிகாரத்தை செய்வதற்கு எந்த சேதமும் இல்லாத நல்ல வெற்றிலை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வெற்றிலையில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றையும், ஒரு ஏலக்காய், ஒரு விரலி மஞ்சள் ஆகியவற்றையும் வைத்து நூலால் வெற்றிலை கிழியாமல் கட்டிக் கொள்ளுங்கள். இதனை உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் அல்லது உங்களுக்கு நன்கு தெரிந்த இடத்தில் வெகுகாலமாக பூஜைகள் செய்யப்படும் மரத்தில் கொண்டு வைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அரச மரத்தடியில் விநாயகருக்கு காலம் காலமாக பூஜை செய்வதை பார்த்திருப்பீர்கள். அது மாதிரியான மரங்களில் நூலால் கட்டிய அந்த வெற்றிலையை சமர்ப்பிக்க வேண்டும். 

34

வெற்றிலையை வைத்ததோடு பரிகாரம் முடியவில்லை. அந்த மரத்தடியில் வீற்றிருக்கும் தெய்வத்திற்கு 1 நெய்விளக்கு ஏற்றி உங்களுடைய பிரச்சனைகள் விரைவில் தீர வேண்டும், எல்லா கெட்ட நேரமும் முடிந்து நல்ல நேரமாக மாற வேண்டும் என மனதிற்குள் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் ஒரு நெய் விளக்கை ஏற்றி இப்படி வேண்டிக் கொள்ளும்போது உங்களுடைய கெட்ட நேரங்கள் விலகிவிடும். இந்த வெற்றிலை பரிகாரத்தை செய்வதற்கு குறிப்பிட்ட நாள், கிழமை என்றெல்லாம் கிடையாது. எந்த நாளிலும், எந்த நேரத்திலும் கூட இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். நீங்கள் இதை முழுமையாக நம்ப வேண்டும். 

இதையும் படிங்க: வாஸ்துபடி இந்த தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க.. மீறினா வாழ்க்கையில் ஒருநாளும் வெற்றி பெறவே முடியாது!

44

வெற்றிலை பரிகாரம், நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதால் மரத்தில் இருந்து உங்களுக்கு அருளப்படும் தெய்வீக சக்தி நல்ல நேரம் வரச் செய்யும். நமது வாழ்க்கையிலும் இருக்கும் தடைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் எல்லாமே நினைத்தப்படியே நடக்கும். 

இதையும் படிங்க: ராகு-கேது பெயர்ச்சி 2023 : இந்த 5 ராசிகளுக்கு நல்ல நேரம்.. வீட்டில் பண மழை கொட்டி தீர்க்கும்!

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology : குருவின் உச்சத்தால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 'அந்த' ராசி எது?
Recommended image2
Rose Flower Astrology: ரோஜா பூவை இப்படி யூஸ் பண்ணுங்க, உங்க தலைவிதியே மாறும்! டக்குன்னு வேலை கிடைக்கும்.!
Recommended image3
Vastu Tips: வீட்ல இந்த 5 இடத்துல மட்டும் பணத்தை வைக்கவே வைக்காதீங்க.! இந்த ரகசியம் உங்களை கோடீஸ்வரன் ஆக்கும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved