MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • ராகு-கேது பெயர்ச்சி 2023 : இந்த 5 ராசிகளுக்கு நல்ல நேரம்.. வீட்டில் பண மழை கொட்டி தீர்க்கும்!

ராகு-கேது பெயர்ச்சி 2023 : இந்த 5 ராசிகளுக்கு நல்ல நேரம்.. வீட்டில் பண மழை கொட்டி தீர்க்கும்!

தற்போது ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் சஞ்சரித்து வருகின்றனர். அதன் காரணமாக 5 ராசிக்காரர்கள் பலன் அடையவுள்ளார்கள். 

2 Min read
maria pani
Published : May 15 2023, 03:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சனிக்குப் பிறகு மனதில் பயத்தை உண்டாக்கும் கிரகங்களின் பெயர் ராகுவும், கேதுவும் தான். இந்த இரண்டு கிரகங்களும் ஜோதிட சாஸ்திரத்தில் எந்த ராசியாலும் ஆளப்படவில்லை. எந்தெந்த கிரகங்கள் அவற்றுடன் அமைந்தாலும் அதற்கேற்ப பலன்களைத் தருகின்றன. ராகு மற்றும் கேது வருடத்திற்கு ஒரு முறை ராசி மாறுகிறார்கள். இந்த இரண்டு கிரகங்களும் இந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ராசியை மாற்றும். ஜோதிட சாஸ்திரப்படி ராகு-கேது தோஷம் மட்டுமின்றி நல்ல பலனையும் தரும். தற்போது ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் சஞ்சரித்து வருகின்றனர். ஜோதிட ரீதியாக, ராகு-கேது பெயர்ச்சியின் செல்வாக்கின் கீழ் 5 ராசிகளுக்கு, அடுத்த ஐந்தரை மாதங்கள் ரொம்பவும் பயனுள்ளது. இது நன்மைகள் பெருகும் காலம். அந்த ராசிகளை இங்கு காணலாம். 

26

ரிஷபம் 

ராகு - கேது பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுப்படும். உங்கள் அதிர்ஷ்டம் மேம்படும். செல்வத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் புதிய வீடு அல்லது வாகனம் வாங்கலாம். கடினமாக உழைத்தால் கூடுதலாக அதிர்ஷ்டமும் உங்களைத் தேடி வரும். கல்வியில் ஈடுபாடு கொண்டவர்களுக்கும், மாணவர்களுக்கும் இந்த நேரம் மிகவும் நல்லது. 

36

மிதுனம்

இந்த ராசிக்காரர்கள் பொறுமையாக செயல்பட்டால் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறலாம். பொருளாதார பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். மேலும் உங்கள் கௌரவம் உயரும். எல்லோரும் உங்களை புகழ்வார்கள். உங்கள் துணையுடன் நேரத்தை செலவிடுங்கள். அது உங்கள் உறவை வலுப்படுத்தும். உங்கள் அன்பை அதிகரிக்கும். 

46

சிம்மம்

ராகு - கேது பெயர்ச்சி காலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு உகந்தது. இந்த நேரத்தில், எதிரி உங்கள் முன்னால் நிற்க கூட முடியாது. உங்கள் நிதி நிலைமை வலுவாக மாறும். உங்கள் புகழ் எங்கும் பரவும். வெற்றி பெருகும். பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்பு காணப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் மதரீதியான சடங்கு, சுப காரியங்களில் ஈடுபடலாம். உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், இந்த நேரத்தில் அவை நீங்கும். 

இதையும் படிங்க: வாஸ்துபடி இந்த தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க.. மீறினா வாழ்க்கையில் ஒருநாளும் வெற்றி பெறவே முடியாது!

56

கன்னி 

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் நல்ல செய்தி கிடைக்கும். அனைத்து வகையான நிதி சிக்கல்களிலிருந்தும் விடுபட முடியும். வருமான வளர்ச்சி வலுவாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். கன்னி ராசியின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் ஈடுபடுபவர்களுக்கு இந்தக் காலம் மிகவும் நல்லது. நீங்கள் வேறு இடத்தில் முதலீடு செய்தால், அதன் மூலம் நீங்கள் பயனடைவீர்கள். 

66

தனுசு 

ராகு-கேதுவின் தற்போதைய சஞ்சாரம் தனுசு ராசியின் வருமானத்தை பெருக்கும். இந்த ராசிக்கு வேலையில் வெற்றி தான். பணியிடத்தில் மரியாதை கிடைக்கும். எந்த வேலையாவது முடியாமல் தாமதமானால், இந்த நேரத்தில் செய்யுங்கள். தனுசு ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் எதைச் செய்தாலும் அதில் வெற்றி தான் என உறுதியாக சொல்கிறது ஜோதிடம். 

இதையும் படிங்க: பணக்கஷ்டமே வராது! ரோஜா மலர்களால்.. லட்சுமிக்கு இந்த பூஜை செய்யுங்க! கைநழுவி சென்ற பணம் கூட வந்து சேரும்!!

About the Author

MP
maria pani
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved