ராமநவமி 2023 எப்போது? அன்றைய தினம் ராம நாமம் 1 முறை சொன்னால்... இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்..!
ராமநவமியில் ஸ்ரீராமனின் நாமத்தை உச்சரித்தால் பாவங்களில் விலகி நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கை.
திருமாலின் அவதாரங்களில் முக்கியமானது ஸ்ரீ ராம அவதாரம். ஏனெனில் இறைவன் மகாவிஷ்ணு, மண்ணில் மனிதராக அவதரித்து, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய அவதாரம் தான் 'ராம அவதாரம்'. அவரிடம் இல்லாத குணங்களே இல்லை எனலாம். பாசம், பக்தி, வீரம், அறம், சகோதரத்துவம் போன்ற எல்லா குணங்களும் கொண்ட ராமன் அவதரித்த தினத்தை "ஸ்ரீ ராமநவமி" என்கிறார்கள். இந்த நாளில் ராம பக்தர்கள் அகமகிழுவார்கள். காலையில் எழுந்து விரதம் இருப்பார்கள். நாளை ஆலயங்களில் ராமருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
சில ஊர்களில் ராமன், சீதா கல்யாண நிகழ்வுகளை கூட செய்வார்கள். பக்தர்களில் சிலர் அதிகாலையில் எழுந்து விரதம் இருப்பார்கள். ராமநவமி அன்று திருக்கல்யாணத்தை தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். எல்லாவித நன்மைகளையும் அருளும் ஸ்தோத்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் என ஆன்மீகப் பெரியோர்கள் சொல்வார்கள்.
ஸ்ரீராம நவமி 2023 எப்போது?
ஸ்ரீராமநவமி இந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது. ஸ்ரீராம நவமி அன்று பூஜை செய்ய வேண்டிய முஹூர்த்த நேரம் என்பது காலை 11:11 மணி முதல் மதியம் 01:40 மணி வரை உள்ளது.
விஷ்ணு சகஸ்ரநாமம்
ராம நவமி அன்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அப்படி சொல்ல முடியாதவர்கள்,"ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே, ஸகஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வராணணே"என்ற இருவரி மந்திரத்தை சொல்ல வேண்டும். இதை சொல்வதால் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுமையாக சொன்னால் கிடைக்கும் பலனை பெறலாம் என்பது நம்பிக்கை.
ராம நாமத்தின் மகிமை..!
'ராம' என்ற நாமம் சொன்னால் எல்லா பாவமும் விலகும். ராம நவமி நாளில், ஶ்ரீராமரை சீதை, லட்சுமணன், அனுமன் சமேதராக தான் வழிபட வேண்டும். அப்போது தான் அந்த நாளின் வழிபாடு முழுமை பெறும். இன்றைய தினத்தில் மற்றொரு 'ராம நாமம்' சொன்னாலும் பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: முடி, நகம் வெட்ட எந்த நாள் சிறந்தது என்று தெரியுமா?
"ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே… ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே" இந்த மந்திரத்தை 1 முறை உச்சரித்தால் 16 தடவை ராம நாமம் உச்சரித்த பலனை பெறலாம்.
இதையும் படிங்க: புஷ்பராகம் அணிந்தால் செம்ம அதிர்ஷ்டம்... யார் அணியலாம்?