புரட்டாசி செவ்வாயில் இணைந்த அஸ்வினி நட்சத்திரம்..இந்த ஒரு பரிகாரம் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபடலாம்
Sani Dosha Remedies: ஜோதிட சாஸ்திரத்தில், சனி தோஷத்திலிருந்து விடுபட செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் இணைந்த நாள் ரொம்பவே விசேஷமானது.
Perumal Telpe
ஜோதிட சாஸ்திரத்தில், சனி தோஷத்திலிருந்து விடுபட செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் இணைந்த நாள் ரொம்பவே விசேஷமானது. இந்தநாளில், எளிய வழிபாட்டின் மூலம் சனி தோஷத்தைப் போக்கிக் கொண்டு நிவர்த்தி பெறலாம் என்பது ஐதீகம். சனியின் கோபத்தில் இருந்து விடுபட செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் இணைந்த இந்த நாளில் சில பரிகாரங்களை செய்தால் போதும்.
பொதுவாகவே செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வதற்கும் முருக வழிபாடு செய்வதற்கும் உகந்த நாட்கள் என்கிறார்கள். காலையும் மாலையும் அம்மனை வணங்கி வழிபடலாம். அதோடு துர்க்கை வழிபாடும் சிறந்த ஒன்றாகும்.
அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தின் படி, செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் இணைந்த நாள் மகத்துவம் மிக்கது. புரட்டாசி மாதத்தில், செவ்வாய்க்கிழமையும் அஸ்வினியும் இணைந்த பவுமாஸ்வினி நன்னாளில், பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது ரொம்பவே நல்ல பலன்களைத் தரக் கூடியது. அதேபோல், பன்னிரு ஆழ்வார்களுக்கு மாலைகள் சார்த்தி வணங்கலாம்.
சனி தோஷம் நீங்க, இந்த நாளில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று,பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது சிறந்த பலனைத் தரும். இந்தநாளில், பெருமாள் தரிசனம் செய்வது நற்பலன்களை வழங்கவல்லது. பெருமாளுக்கு மண்பானையில் தயிர்சாதம் நைவேத்தியமாக படைக்கலாம். அதனை ஏழை எளியோருக்கு அன்னதானமாக கொடுக்கலாம்.
நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் இருந்து பாடல்களைப் பாராயணம் செய்யலாம். ஆழ்வார் பாசுரங்களைச் சொல்லி பாராயணம் செய்து வழிபடலாம். விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வேண்டிக்கொள்ளலாம். அதோடு, சனிபகவானின் முன் எள் தீபம் ஏற்ற வழிபட்டு, தானம் செய்வது சிறந்த பலனைக் கொடுக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் சனி கிரக தோஷம் நீங்கும். மேலும், சனி பகவான் மனம் குளிர்ந்து அருளை அள்ளி வழங்குவார் என்பது நம்பிக்கை.