- Home
- Spiritual
- சகுன சாஸ்திரம் (Omens Signs): முன்னெச்சரிக்கை செய்யும் பறவைகள், விலங்குகள்.! எந்த விலங்கை பார்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?
சகுன சாஸ்திரம் (Omens Signs): முன்னெச்சரிக்கை செய்யும் பறவைகள், விலங்குகள்.! எந்த விலங்கை பார்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?
சகுன சாஸ்திரத்தின்படி, காகம் போன்ற உயிரினங்கள் நம் எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே எச்சரிக்கின்றன. காகம் குடத்தின் மீது அமர்வது பணவரவையும், தலையைத் தொடுவது தடையையும் குறிக்கும், அதேபோல் பாம்பு, நாய் போன்றவையும் பல்வேறு சகுனங்களைக் காட்டுகின்றன.

எச்சரிக்கும் விலங்குகள்
சகுன சாஸ்திரம் (Omen Science) மனித வாழ்க்கையின் நிகழ்வுகளோடு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இதில் காகம் மிக முக்கியமான பறவையாக கருதப்படுகிறது. முன்னோர்களின் பிரதிநிதியாகக் காணப்படும் காகம், பல அறிகுறிகளின் மூலம் நம்மை எச்சரிக்கவும் ஆசீர்வதிக்கவும் செய்கிறது என்று நம்பப்படுகிறது.
பணவரவு காத்திருக்கு உங்களுக்கு
காகம் தினமும் அன்னம் உண்டால் முன்னோர் திருப்தியடைவார்கள் என கூறப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் அதன் நடத்தை எதிர்கால நிகழ்வுகளைப் பறைசாற்றும். உதாரணமாக, குடத்தின் மேல் காகம் அமர்ந்தால் அது பணவரவு குறிக்கிறது, ஆனால் தண்ணீரில் அலகை அலம்பினால் நஷ்டம் வரும் என நம்பப்படுகிறது.
பஞ்சம் வருவதை முன்கூட்டியே சொல்லும் காகம்
காரணமின்றி காகங்கள் கரையத் தொடங்கினால், அது பஞ்சம் அல்லது துன்பம் வரப்போகும் அறிகுறி என பழமொழிகள் கூறுகின்றன. அதே சமயம், காகங்கள் தண்ணீரில் குளித்தால் அந்த இடத்தில் மழை பெய்யும்.இரவு நேரங்களில் காகங்கள் பறப்பது அல்லது கரையுவது ஒரு அபாயச் சின்னம் என்று சகுன நூல்கள் குறிப்பிடுகின்றன. இது யுத்தம், விபத்து அல்லது திடீர் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டும். மேலும், காகம் நல்ல மரங்களில் கூடு கட்டினால் நற்பலன், ஆனால் உலர்ந்த மரங்களில் கூடு கட்டினால் அதிர்ஷ்டம் குறையும்.
பரிகாரம் செய்தால் நிம்மதி கிடைக்கும்
சில நேரங்களில் காகம் தலையைக் கடந்து பறக்கலாம் அல்லது தொடலாம். இது சுபகாரியங்களுக்கு தடையாகவும் வீட்டில் சிறிய சிரமங்களை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு. இதனை நீக்க சனிக்கிழமையன்று சனிபகவானை வழிபடுவது, எள் தீபம் ஏற்றுவது நல்ல பலன் தரும்.
வழிகாட்டும் பாம்புகள்
அதேபோல், நாய் மற்றும் பாம்புகள் கூட சகுன அறிகுறிகளைக் காட்டுகின்றன. நாய் வழியை மறைத்தால் பயணத்தில் தடை, வாயில் கயிறு கொண்டால் செல்வம், பாம்பு பச்சை மரத்தில் ஏறுவது முன்னேற்றம், இறங்குவது தடை.
எச்சரிக்கும் விலங்குகள்
இவ்வாறு இயற்கையின் உயிரினங்கள் மனித வாழ்க்கையை எச்சரிக்கும் சகுனச் சின்னங்களாகவே இன்று வரை மக்கள் நம்புகின்றனர்.