- Home
- Spiritual
- சபரிமலை பக்தர்களின் கவனத்திற்கு..! கேரள அரசு போட்ட கண்டிஷன்..! தப்பித் தவறி கூட இதை செய்யாதீங்க!
சபரிமலை பக்தர்களின் கவனத்திற்கு..! கேரள அரசு போட்ட கண்டிஷன்..! தப்பித் தவறி கூட இதை செய்யாதீங்க!
Kerala Warning for Sabarimala Pilgrims on Water Safety: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் நீர்நிலைகளில் குளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த நிலையில், மண்டல விளக்கு, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட உள்ளது. பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட உள்ளனர். முதல் சில நாட்களுக்கான முன்பதிவு முடிந்துவிட்டது.
பக்தர்களுக்கு கேரள அரசு அறிவுறுத்தல்
பம்பையிலிருந்து பக்தர்கள் மதியம் முதல் சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இன்று ஆன்லைன் மூலம் முப்பதாயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், சபரிமலை வரும் பக்தர்களுக்கு கேரள அரசு முக்கியமான கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.
அதாவது நீர் நிலைகளில் வாழும் அமீபாவால் கேரளாவில் மூளையை தின்னும் அமீபா காய்ச்சல் பரவி வருகிறது. ஆகவே சபமரிமலைக்கு வரும் பக்தர்கள் கேரளாவில் உள்ள நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்
அப்படி ஆறு, குளங்களில் குளித்தால் மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடி குளிக்க வேண்டும் என அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மூளையை தின்னும் அமீபா நீர்நிலைகளில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் வழியாக உடலுக்குள் நுழைந்து பாதிப்புகளை ஏற்படுத்துவதால் மூக்கு மற்றும் வாய் மூடி குளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக சுத்தம் செய்து முகம், கை, கால்கள் துடைக்க பயன்படுத்த வேண்டும்.
கொதிக்க வைத்த தண்ணீரை குடியுங்கள்
கேரளாவில் எங்கு சென்றாலும் பக்தர்கள் கொதிக்க வைத்த தண்ணீரையே குடிக்க பயன்படுத்த வேண்டும். பம்பை பகுதியில் திறந்தவெளியில் மலம் கழிக்கக் கூடாது. சுகாதாரமான கழிப்பறைகளையே பயன்படுத்த வேண்டும். பம்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குப்பை கொட்டாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத்துறை கூறியுள்ளது.
24 மணி நேரமும் சிகிச்சை மையங்கள்
மேலும் மலை ஏறும் போது மார்பு வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் 04735-203232 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அவசர உதவியை நாட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் சிகிச்சை பெற வசதியாக கொன்னி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கு மேற்பட்ட சிறப்பு படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிலக்கல், பம்பையில் இலவச சிகிச்சை மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்.