MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குஷி.! போக்குவரத்து துறை வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குஷி.! போக்குவரத்து துறை வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு

தமிழக அரசு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. சென்னை, திருச்சி, மதுரை போன்ற முக்கிய நகரங்களிலிருந்து பம்பைக்கு செல்லும் இந்த பேருந்துகளுக்கு ஆன்லைன் முன்பதிவு மற்றும் குழு வாடகை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

2 Min read
Author : Ajmal Khan
Published : Oct 28 2025, 03:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : our own

சபரிமலைக்கு ஆண்டு தோறும் பல லட்சம் பக்தர்கள் சென்று வருகிறார்கள், அதிலும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சபரிமலையில் விழாக்கோலமாக இருக்கும். இதனையொட்டி மகரஜோதி பார்ப்பதாக விரதம் இருந்து பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வார்கள். எனவே சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து மற்றும் தனியாக வாடகைக்கு பேருந்தை பொக்குவரத்து கழகம் இயக்கவுள்ளது. 

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகா விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது,

24
Image Credit : our own

தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டும் 16.11.2025 முதல் 16.01.2026 வரையில், (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி. மதுரை மற்றும் புதுச்சேரி /கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, 

அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் (Ultra Deluxe) குளிர்சாதன பேருந்து (AC) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (NSS) சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன. (சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2025 முதல் 30.12.2025 மாலை 5.00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2025 முதல் 29.12.2025 வரை இச்சிறப்புப் பேருந்து இயக்கப்படமாட்டாது)

Related Articles

Related image1
பெண் புகாரில் திடீர் திருப்பம்! இருவரும் சம்மதத்துடன் நெருக்கம்! சென்னை ரேபிடோ பைக் ஓட்டுநர் பகீர்!
Related image2
கிரீன் கார்டு, விசா இருந்தாலும் பத்தாது.. வெளிநாட்டினருக்கு குடைச்சல் கொடுக்கும் டிரம்ப்!
34
Image Credit : our own

இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றினை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதா இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும்.

44
Image Credit : our own

மேலும், 60 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு Online மூலமாக. www.tnstc.in மற்றும் TNSTC Official app ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு. 9445014452. 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
சபரிமலை
சபரிமலை காப்பீட்டு திட்டம்
தமிழ்நாடு அரசு பேருந்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
தவெக கூறுவது அத்தனையும் பொய்! விதியை மீறிய விஜய் மீது நடவடிக்கையா? உண்மையை புட்டு புட்டு வைத்த காவல்துறை
Recommended image2
தோழர் நல்லக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு..! மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு
Recommended image3
1.5 லட்சம் பேர் கலந்த திருமணம்.. 6 முறை ஆட்சி செய்த இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் மறுபக்கங்கள்
Related Stories
Recommended image1
பெண் புகாரில் திடீர் திருப்பம்! இருவரும் சம்மதத்துடன் நெருக்கம்! சென்னை ரேபிடோ பைக் ஓட்டுநர் பகீர்!
Recommended image2
கிரீன் கார்டு, விசா இருந்தாலும் பத்தாது.. வெளிநாட்டினருக்கு குடைச்சல் கொடுக்கும் டிரம்ப்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved