MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 15th Mar 2023: எந்த ராசிக்கார்கள் தொட்டது துலங்கும்..? இன்றைய தினம் இளைஞர்களுக்கானது..!

Today Rasipalan 15th Mar 2023: எந்த ராசிக்கார்கள் தொட்டது துலங்கும்..? இன்றைய தினம் இளைஞர்களுக்கானது..!

மார்ச் 15ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
Published : Mar 15 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

உறவினர்களுடனான கருத்து வேறுபாடு நீங்கும். தனிப்பட்ட விஷயங்களை வெளிநபர்களிடம் பகிராதீர்கள். கோபப்படாமல் நிதானத்தை கடைபிடிக்கவும். 
 

212

ரிஷபம்:

குடும்ப நிகழ்வுகளில் நீங்கள் இருப்பது அவசியம். ஆதாயம் தரக்கூடிய முக்கியமான சந்திப்பு நிகழும். வீட்டில் இருக்கு மூத்தவர்களின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

312

மிதுனம்:

இன்றைய நாள் உங்களுக்கு இனிமையான நாள். சொத்து மற்றும் பண பரிமாற்றம் குறித்து முக்கியமான திட்டமிடுவீர்கள். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ளவும். 
 

412

கடகம்:

உங்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் நிகழும். சாதனை படைப்பீர்கள். உங்கள் கோபம் பிரச்னையை ஏற்படுத்தும். எனவே கோபத்தை தவிர்க்கவும். தொழிலில் ஏற்பட்ட தடை அகலும். பழைய நண்பரை சந்தித்து நினைவுகளை அசைபோடுவீர்கள்.
 

512

சிம்மம்:

பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். இளைஞர்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து சுறுசுறுப்பாக இயங்குவார்கள். புதிய வருவாய்க்கான வழி பிறக்கும். பிரச்னைகளை கோபப்படாமல் நிதானமாக தீர்க்கவும். இன்று தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவி உறவு மிகச்சிறப்பாக இருக்கும்.

உங்க குழந்தை தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கணுமா? வீட்டுல இதை மட்டும் பண்ணிடுங்க.. சூப்பர் மார்க் கிடைக்கும்
 

612

கன்னி:

இன்றைய உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். சொத்து வாங்கும், விற்கும் விஷயங்களில் அதிக கவனம் தேவை. ஏற்றுமதி - இறக்குமதி தொழிலில் இழப்பு ஏற்படலாம். மூத்தவர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும்.

712

துலாம்:

கிடப்பில் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அரசியலில் முக்கியமான நபர்களுடனான தொடர்பு பலப்படும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நேர்மறையாக சிந்தியுங்கள். எதிர்ம்றை சிந்தனை உடல்நலனை பாதிக்கும்.
 

812

விருச்சிகம்:

உங்கள் செயல் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இளைஞர்கள் நேரத்தை வீணடிப்பார்கள். கணவன் - மனைவி இடையேயான பரஸ்பர நம்பிக்கை உறவை வலுப்படுத்தும். 
 

912

தனுசு:

கிடப்பில் கிடந்த வேலைகள் முடியும். உங்கள் கோபமும் நிதானமின்மையும் வேலையை பாதிக்கும். கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். உங்கள் வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும்.
 

1012

மகரம்:

இளைஞர்கள் இன்றைய தினம் சாதிப்பார்கள். நிதானமாக இருந்து சாமர்த்தியமான முடிவுகளை எடுங்கள். குடும்ப பிரச்னைகள் தொழிலை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இன்சூரன்ஸ், கமிஷன் ரீதியான தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 
 

இதுவரை யாரும் அறிந்திராத ரகசியம் ! கருப்பு கயிறை நமது உடம்பில் எங்கு கட்டினால் ,வீட்டில் பண மழை பொழியும்!

1112

கும்பம்:

திட்டமிட்டு உங்கள் இலக்குகளை அடைவீர்கள். குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறையும் கவனமும் செலுத்துவார்கள். பயணங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

1212

மீனம்:

உறவுகள் மேம்படும். நேர்மறையான சிந்தனை உங்கள் செயல்பாடுகளை பக்குவப்படுத்தும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மூத்தவர்கள் மற்றும் அனுபவஸ்தர்களின் அறிவுரையை கேட்டு செயல்படவும்.  கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கந்த சஷ்டி 2026: முருகன் அருள் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரத முறை என்ன?
Recommended image2
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Recommended image3
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved