உங்க குழந்தை தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கணுமா? வீட்டுல இதை மட்டும் பண்ணிடுங்க.. சூப்பர் மார்க் கிடைக்கும்
தேர்வுகளை பொறுத்தவரை குழந்தைகள் மட்டுமல்ல பெற்றோரும் பதற்றமாக தான் இருக்கின்றனர்.
தேர்வு காலத்தில் வீட்டில் சில வாஸ்து குறிப்புகளை பின்பற்றினால் பிள்ளைகள் படிப்பு தடையில்லாமல் இருக்கும். அதாவது சில திசைகளில் கவனம் வைக்க வேண்டும். அப்படி செய்தால் தரமான மதிப்பெண்கள் கிடைக்கும். இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகளின் படிப்புக்கு முக்கியமாக உதவுவது புத்தகங்கள் தான். அவர்களுடைய புத்தகங்கள், படிப்புப் பொருட்களை வீட்டின் தென் மேற்கு வாஸ்து திசையில் வைத்துவிடுங்கள். உங்கள் குழந்தைகளின் படிப்பு அட்டவணையையும் (Study schedule) அதே திசையில் வைத்து படிக்க வைப்பது சிறந்தது. இந்த மண்டலம் சமநிலையில் இருந்தால் குழந்தைகளின் படிப்பு குறைந்த முயற்சியில் கூட செம்ம சூப்பராக மாறும்.
வீட்டின் வடகிழக்கு, தென்மேற்கு வாஸ்து திசை எப்போதும் நன்றாக வைத்து கொள்ளுங்கள். வடகிழக்கு என்பது தெளிவு மற்றும் மனது தொடர்புடையது. இந்த திசையில் ஏதேனும் ஒழுங்கீனம் இருந்தால், உங்கள் குழந்தை, தேர்வுகளுக்கு தயாராகும் போது ரொம்ப குழப்பி போய்விடுவார்கள்.
தென்மேற்கு பகுதியானது திறமைகளின் மண்டலமாக இருக்கிறது. உங்கள் வீட்டில் இந்த திசையில் ஏதேனும் பாதிப்போ, ஒழுங்கீனமோ காணப்பட்டால் குழந்தை தனது முழுத் திறனையும் படிப்பில் பயன்படுத்த முடியாமல் இருப்பார்கள். அதனை பயன்படுத்த முடியாமல் போக திசைகளின் பாதிப்பு தான் காரணம்.
மாணவர்கள் படிக்கும்போது தென்மேற்கு திசையை எதிர்கொள்ள வேண்டும். அப்படி செய்ய முடியாவிட்டால் மேற்கு மற்றும் வடக்கு, கிழக்கு திசைகளை பயன்படுத்தலாம். வீட்டின் வடகிழக்கு திசையில் இருக்கும் அட்டவணை உங்கள் குழந்தைக்கு புதிய நுண்ணறிவுகளை கொடுக்கும். வடகிழக்கு பகுதியில் படிக்கும் அறையை வைக்க முடியாவிட்டால், அந்த பகுதியை ஒட்டியபடி வடக்கு அல்லது கிழக்கு பகுதியில், கிழக்கு நோக்கி அமர்ந்து படிக்கும் வகையில் அறையை ஏற்படுத்தி கொடுக்கலாம்.
இதையும் படிங்க: உங்க கைக்கு பணம் வந்த வேகத்தில்.. ஒன்னும் இல்லாமல் விரயமா போகுதா? அப்போ வீட்டில் இந்த தவறுகளை செய்யுறீங்களா?
குழந்தைகள் படிக்கும் அறை வெளிச்சமும் காற்றோட்டமும் கொண்டதாக இருக்க வேண்டும். கழுகு சிலை வாங்கி அதை தென்மேற்கு திசையில் வைத்தால் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், கல்வியில் கவனம் குவிக்கவும் உதவும். புத்தகங்கள் அல்லது படிப்பு அட்டவணை தென்கிழக்கு, கிழக்கு. தெற்கு, மேற்கு, வடமேற்கு திசையில் வைக்கப்படக் கூடாது. குழந்தைகளுக்கு படிக்க நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுப்பது பெற்றோரின் கடமை. உங்கள் குழந்தைகளின் தேர்வுக்கு வாழ்த்துக்கள்.
இதையும் படிங்க: செவ்வாய் கிழமை நல்ல காரியம் பண்ணக்கூடாது என்பது உண்மையா? இந்த விஷயம் மட்டும் தெரிந்தால் செல்வ செழிப்பு தான்