MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • செவ்வாய் கிழமை நல்ல காரியம் பண்ணக்கூடாது என்பது உண்மையா? இந்த விஷயம் மட்டும் தெரிந்தால் செல்வ செழிப்பு தான்

செவ்வாய் கிழமை நல்ல காரியம் பண்ணக்கூடாது என்பது உண்மையா? இந்த விஷயம் மட்டும் தெரிந்தால் செல்வ செழிப்பு தான்

செவ்வாய் கிழமை அன்று நல்ல காரியங்களை செய்யாமல் தவிர்க்க வேண்டும் என சொல்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : maria pani
| Updated : Mar 14 2023, 12:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஒரு வாரத்தை எடுத்துக் கொண்டால், அதில் மங்களகரமான நாள், இறை வழிபாட்டிற்கு ஏற்ற நாள் என்றால் அதற்கு செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளை தான் பரிந்துரைப்பார்கள். அதுவே நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை, புதன்கிழமை ஆகிய இரு நாட்களை தான் தேர்ந்தெடுப்பார்கள். அப்போது தெளிவாக செவ்வாய்க்கிழமை தவிர்த்து விடுவார்கள். செவ்வாய் அன்று நல்ல காரியங்களை தொடங்கினால் அது நன்றாக இருக்காது என்ற கருத்து பரவலாக நம்பப்பட்டு வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

உண்மையில் செவ்வாய்க்கிழமை அன்று எந்த நல்ல காரியங்களையும் செய்யக்கூடாதா? ஏன் செய்யக் கூடாது? எந்த காரியங்களை செய்யலாம்? என்பது குறித்து பலருக்கு குழப்பங்கள் இன்றளவும் உள்ளது. அந்த குழப்பங்களை இன்று தீர்த்து கொள்ளுங்கள். வாங்க பதிவிற்குள் போகலாம்.

36

புதியதாக நகை, ஆடைகள் ஆகிவற்றை வாங்குவதாக இருந்தாலும் சரி.. ஏதேனும் சுப காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் சரி.. செவ்வாய்க்கிழமை ஏற்றதாக இல்லை என்று பலரும் அதனை தவிர்த்து வருகிறார்கள். ஆனால் புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகியவற்றில் புதிய உடை, நகை ஆகியவற்றை வாங்கி சேர்த்தால் அவை பல மடங்கும் பெருகும் என்பது நம்பிக்கை. செவ்வாய் கிரகத்தை மங்களகாரகன் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. 

46

செவ்வாய் பகவான் தான் போரின் கடவுள். பூமா தேவியுடைய புத்திரன். இவருக்கு கருணையும், ஆளுமையும் உண்டு. முருகனுக்கு ஏற்ற நாளும் செவ்வாய்கிழமை என்பார்கள். செவ்வாய் பகவான், முருகன், பூமாதேவி ஆகியோரை வணங்கி செவ்வாய் அன்று மங்கலப் பொருட்கள் வாங்குவோருக்கு செல்வம் பல மடங்கு பெருகிவரும் என்பது ஐதீகம். 

செவ்வாய் தோஷ பரிகாரம், துர்கா ஹோமம், ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, பூமி பூஜை போன்ற பூஜை வழிபாடுகளை செவ்வாய் கிழமை அன்று செய்யலாம். எந்த தோஷ பரிகார பூஜையானாலும் செய்ய செவ்வாய் கிழமை சரியான நாளாகும். 

56

​செவ்வாய்கிழமை தவிர்க்க என்ன காரணம்? 

செவ்வாய் கிரகத்தின் அம்சங்களாக கூறப்பட்டுள்ள விஷயங்களை பார்த்தால், செவ்வாய் பகவான் விசுவாசம் கொண்ட பணியாளராக இருக்கிறார். அவரிடம் விசுவாசம் இருந்தாலும் மூர்க்க குணமும் சேர்ந்து இருக்கிறது. செவ்வாய் பகவான் மூர்க்க குணம் கொண்டிருப்பதால் பின் விளைவுகளை குறித்து சிந்திக்காமல் செயல்படுவார். ஆகவே செவ்வாய்க்கிழமை அன்று செய்யப்படும் காரியங்களுக்கு வேகம் ரொம்ப இருக்கும். அந்த வேகத்தில் பின் விளைவுகளும் ஏதேனும் ஏற்பட்டு பாதிப்பு வரக்கூடாது என்ற எச்சரிக்கையால் தான் அன்றைய தினத்தில் நல்ல காரியங்களை தவிர்க்கிறார்கள் என சொல்லப்படுகிறது. 

66

செவ்வாய் கிழமை அன்று என்ன செய்யலாம்?​ 

செவ்வாய் கிழமை அன்று நாம் வாங்கிய கடனை திரும்ப கொடுத்தால், மொத்த கடனும் விரைவில் அடைபடும். செவ்வாய்க்கிழமை மௌன விரதம் இருப்பவர்களுக்கு யாகம் செய்வதற்கு சமமான பலன்கள் கிடைக்கும். செவ்வாய்க்கிழமையில் எவரேனும் விவாதத்தில் ஈடுபட்டார்கள் என்றால் அது தீமையில் கொண்டு விடும். கிழக்கு திசை பயணங்களுக்கு செவ்வாய்க்கிழமை ஏற்றது. அந்த காரியங்கள் நிச்சயம் வெற்றிதான். 

இப்போது உங்களுக்கு ஏன் செசெவ்வாய்க்கிழமையன்று சுப காரியங்கள் செய்ய வேண்டாம் என பெரியோர்கள் கூறியுள்ளார்கள் என்பது நன்றாக புரிந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் தகவலுக்கு ஏசியாநெட் நியூஸோடு இணைந்திருங்கள்.  

இதையும் படிங்க: வெள்ளி மோதிரம் இந்த விரலில் அணிந்து கொண்டால் போதும்.. உங்களுக்கு புகழும் அதிர்ஷடமும் தேடி வரும்..

இதையும் படிங்க: காரடையான் நோன்பு முறை.. எப்போது விரதமிருந்து தாலி கயிறு மாற்றினால் அம்பாள் தீர்க்க சுமங்கலி வரம் அருளுவாள்..!

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Guru Peyarchi: 12 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பெயரும் குரு பகவான்.! கோடிகளில் புரளும் யோகம் பெறும் 4 ராசிகள்.!
Recommended image2
Vastu Tips: வீட்டில் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்.! உங்களுக்கு ராகு தோஷம் புடிக்கும்.!
Recommended image3
Vastu Plant for Wealth : சனிதோஷம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும் செடி.. உங்கள் வீட்டில் இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved