MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • Kaattaan Review : விஜய் சேதுபதியின் காட்டான் வெப் சீரிஸ் மிரட்டலா? சொதப்பலா? விமர்சனம் இதோ

Kaattaan Review : விஜய் சேதுபதியின் காட்டான் வெப் சீரிஸ் மிரட்டலா? சொதப்பலா? விமர்சனம் இதோ

மணிகண்டன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழில் நடித்த முதல் வெப் தொடரான முத்து என்கிற காட்டான் சீரிஸின் ட்விட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Mar 27 2026, 10:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Muthu Engira Kaattaan Web Series Twitter Review
Image Credit : X

Muthu Engira Kaattaan Web Series Twitter Review

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் வெப் சீரிஸ் தான் முத்து என்கிற காட்டான். இந்த வெப் தொடரை காக்கா முட்டை, கடைசி விவசாயி போன்ற மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்த இயக்குநரான மணிகண்டன் தான் இயக்கி உள்ளார். இந்த வெப் தொடரில் விஜே பார்வதி, சிங்கம்புலி, மிலிந்த் சோமன், அபி நட்சத்திரா, முத்துக்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மொத்தம் 10 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸ் இன்று முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இந்த வெப் தொடரின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
காட்டான் வெப் சீரிஸ் ட்விட்டர் ரிவ்யூ
Image Credit : X

காட்டான் வெப் சீரிஸ் ட்விட்டர் ரிவ்யூ

நல்ல கான்செப்ட், கரெக்டான கேஸ்டிங் உடன் வந்திருக்கிற கிரைம் சீரிஸ் இது. அனைவரின் நடிப்பும் சூப்பர், முக்கியமாக விஜய் சேதுபதி, முத்துக்குமார் மற்றும் வடிவேல் கோடாங்கி ஆகியோர் தனித்து தெரிகிறார்கள். பின்னணி இசை படத்திற்கு உறுதுணையாக உள்ளது. ஆனால் முக்கியமான பிரச்சனையே இதனுடைய மந்தமான நரேஷன் தான். புலனாய்வு கதைக்கு தேவையான பிடிப்பும், ஒவ்வொரு எபிசோடின் ட்விஸ்டும் இதில் இல்லை. நிறைய இடங்களில் டல் அடிக்கிறது. நீளத்தை குறைத்து, இன்னும் விறுவிறுப்பான காட்சிகளை வைத்திருந்தால், நல்லா வந்திருக்கும். மொத்தத்தில் இது ஒரு ஆவரேஜ் சீரிஸ் தான் என குறிப்பிட்டுள்ளார்.

.#Kaattaan (5hr 18mins - 10Episodes)
நல்ல concept & correct ஆன casting உடன் வந்திருக்குற crime series. All Performances Neat & clean, முக்கியமாக #Vijaysethupathi & #Muthukumar & Vadivel Kodangi standout Performance👌👏
BGM decent support 👍👍
ஆனா main issue – slow narration.… https://t.co/RA9b82JkMQ pic.twitter.com/kZt0TPOYQK

— Sugan Krish (@Im_Sugan07) March 27, 2026

34
காட்டான் வெப் சீரிஸ் விமர்சனம்
Image Credit : X

காட்டான் வெப் சீரிஸ் விமர்சனம்

காட்டான் என்கிற முத்து - விலங்கு சீரிஸ்ல வர மாதிரி தலை தனியாக ஒரு இடத்தில் கிடைக்கிறது. அவன் யார் என்று விசாரிக்க போனால் மலையாள படமான சார்லி போல ஒவ்வொரு ஆட்களும் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள். கடைசி வரை அவன் யார் என முழுக்க சொல்லாமல், அவன் வாழ்க்கையில் நடந்த ஒரு பாதியை மட்டுமே சொல்லி முடிவுக்கு வருகிறது காட்டான். சீரிஸ் முழுக்க நெறய நெகிழ வைக்கும் தருணங்கள் உண்டு. ஆனா அது போக போக இப்படி தான் போகும் என்று யூகிக்க முடிகிறது. கடைசி 2 எபிசோடில் ஒரு கதை சொல்லி காரணம் சொல்லி முடிக்கிறார்கள்.

ஆனால் இந்த வாழ்க்கை எப்படிப்பட்டது தெரியுமா கோஷ்டி, மெய்யழகன், கடைசி விவசாயி ரசிக கோஷ்டியாக இருந்தால் உங்களுக்கான சீரிஸ் தான் இது. விஜய் சேதுபதி தவிர்த்து இதுல நம்மை கவர்வது 2 எபிசோட் வந்தாலும் கலைவாணி பாஸ்கர், பின்னர் ரிக்ஷா ஜேக்கப்ஸ் இருவருமே சிறப்பாக செய்து இருக்காங்க. மிலிந்து சோமனை இன்னும் சிறப்பாக காட்டி இருக்கலாம். ஒரு வாட்டி நிச்சயம் பார்க்கலாம் என பதிவிட்டுள்ளார்.

44
காட்டான் வெப் சீரிஸ் எப்படி இருக்கு?
Image Credit : X

காட்டான் வெப் சீரிஸ் எப்படி இருக்கு?

காட்டான் என்பது மர்மம், வன்முறை மற்றும் உளவியல் கூறுகளை ஒரே நேரத்தில் கோர்த்து, நான் லீனியர் கதை சொல்லல் முறையில் வழங்கப்படும் ஒரு டார்க் கிராமத்து த்ரில்லர் சீரிஸ். விஜய்சேதுபதி இந்தத் தொடரை தன் தனித்துவமான ஸ்கிரீன் பிரசன்ஸால் தாங்கி நிறுத்துகிறார். அவரது தோற்றமே இந்தத் தொடரின் மிகப்பெரிய பலம். மிலிந்த் சோமன் ஆளுமை, அதிகார உணர்வை கொண்டு வருகிறார், கதைக்கு வேறொரு பரிமாணத்தை சேர்க்கிறார்.

சுதேவ் நாயர் திடமான துணை நடிப்பை வழங்கி, முக்கியமான மோதல் காட்சிகளில் கதையை வலுப்படுத்துகிறார்.விஜேபார்வதி இயல்பான நடிப்பால் கதைக்கு உணர்வு ஆழத்தை கொண்டு சேர்க்கிறார். தொடரின் இருண்ட மற்றும் கரடுமுரடான தொனி, வலுவான சூழல் உணர்வு மற்றும் காட்சி வடிவமைப்பு இவை அனைத்தும் பாராட்டத்தக்கவை. மர்மங்களும் திருப்பங்களும் உங்களை ஈர்த்துக்கொண்டே போகும், இருந்தாலும் சில பகுதிகள் சற்று குழப்பமாக தோன்றலாம். ஒட்டுமொத்தமாக, காட்டான் நம்பகமாக நிற்கும் ஒரு தரமான த்ரில்லர் என குறிப்பிட்டுள்ளார்.

#Kaattaan - REVIEW #Kaattaan Is A Dark Rural Thriller🙂 That Blends Mystery, Violence And Psychological Elements🔥 With A Non-Linear Narrative⚡.#VijaySethupathi Delivers A Strong Performance👏🔥 Carrying The Series With Unique Screen Presence And Intensity🙂.#MilindSoman… pic.twitter.com/nQhiMruyKb

— Cinemy (@HdUpdatesMovie1) March 27, 2026

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் சேதுபதி
விமர்சனம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jailer 2 First Review : வந்தாச்சு ஜெயிலர் 2 முதல் விமர்சனம்... படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா?
Recommended image2
Sigma Review by Blue Sattai : சிக்மா படத்தின் மிகப்பெரிய மைனஸ் இதுதான்... விமர்சனத்தில் புட்டு புட்டு வைத்த ப்ளூ சட்டை மாறன்
Recommended image3
Sigma Review : இயக்குநராக ஜெயித்தாரா ஜேசன் சஞ்சய்? சிக்மா முழு விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
ஹாப்பி ராஜ் முதல் காட்டான் வரை... மார்ச் 27ந் தேதி தியேட்டர் & OTT-ல் செம விருந்து வெயிட்டிங்
Recommended image2
"முத்து என்கிற காட்டான்".. டைட்டிலே கோளாறா இருக்கே.. புதிய வெப் தொடரில் மணி - கூட நடிக்கப்போவது யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved