புயல் வெள்ள நிவாரண நிதி! அரசு கொடுக்கும் ரூ.5,000 எப்போது கிடைக்கும்? வெளியான குட்நியூஸ்!
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்ததால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்ததைத் தொடர்ந்து, விரைவில் ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
Cyclone Fengal
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஃபெஞ்சல் புயல் உருவானது. இந்த புயல் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ., 20 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் 49 செ.மீ., மழை பதிவாகி இருந்தது. காரைக்காலில் 16.9 செ.மீ. மழை பெய்தது.
Puducherry Floods
இதனால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்ததும் மட்டுமல்லாமல் பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்தனர். அறுவடைக்கு தயாரான பயிர்களும் தண்ணீர் மூழ்கி நாசமானது. மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு படகுகளில் சென்று, வீடுகளில் தத்தளித்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: School Holiday: பொங்கலுக்கு முந்தைய நாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மொத்தம் 6 நாட்கள் லீவு!
CM Rangasamy
இதனையடுத்து புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்தார். அதில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என்றார். மேலும் விளை நிலத்தில் பயிர்கள் சேதமடைந்ததால் ஹெக்டேருக்கு ரூ. 10,000, சேதம் அடைந்த கூரை வீடு ஒன்றுக்கு ரூ.10,000, பலியான மாட்டிற்கு ரூ.40,000, கன்றுக் குட்டிக்கு ரூ.20,000, சேதம் அடைந்த படகு ஒன்றுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
Flood Relief Fund
இந்நிலையில், புயல் வெள்ள நிவாரண நிதி தொடர்பாக கணக்கெடுக்கப்பட்டது. இதனையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எப்போது நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்து கிடந்தனர்.
இதையும் படிங்க: இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும்! எந்தெந்த தேதிகளில் தெரியுமா?
Puducherry Government
இந்நிலையில், புயல் வெள்ள நிவாரண நிதி அவரவர் வங்கி கணக்கில் இரு நாட்களில் ரூ.5000 செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 3 லட்சத்து 54 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.177 கோடி வழங்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.