- Home
- Tamil Nadu News
- Puducherry
- ரேஷன் கடையில் கால்கடுக்க நிற்க வேண்டாம்.. வீடு தேடி வரும் ரூ.3,000.. சூப்பர் அறிவிப்பு!
ரேஷன் கடையில் கால்கடுக்க நிற்க வேண்டாம்.. வீடு தேடி வரும் ரூ.3,000.. சூப்பர் அறிவிப்பு!
மாநிலத்தில் உள்ள 3.40 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3.000 பொங்கல் பரிசுடன் ரூ.750 மதிப்பு கொண்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசு ரூ.3,000
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்களுடன் ரூ.3,000 பொங்கல் பரிசுத்தொகையையும் அறிவித்தது.
பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியிலும் ரூ.3,000 பொங்கல் பரிசு
அதாவது புதுச்சேரியில் உள்ள 3.40 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3.000 பொங்கல் பரிசுடன் ரூ.750 மதிப்பு கொண்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதிகளில் வசிக்கும் 3.40 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்கும். இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக தமிழகத்தை போல் ரூ.3,000 பணத்தை கையில் வழங்காமல் மக்களின் வங்கிக் கணக்கிலேயே பணம் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
வங்கி அக்கவுண்ட்டில் பணம் வந்து விடும்
இதனால் ரேஷன் கடைகளில் கால்நடுக்க நின்று பணம் பெற தேவையில்லை. மக்களின் அக்கவுண்ட்வுக்கே பணம் வந்து விடும். அதே வேளையில் வங்கி விடுமுறை காரணமாக பொங்கல் பண்டிகை முடிந்த பிறகே ரூ.3,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என புதுச்சேரி அரசு கூறியுள்ளது. புதுச்சேரி அரசு பொங்கல் பரிசு அறிவித்துள்ளதால் அந்த மாநில மக்கள் குஷியாகியுள்ளனர்.
ரூ.4,000ல் இருந்து ரூ.3,000க்கு இறங்கிய ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பொங்கல் பரிசு ரூ.4,000 வழங்கப்படும் என முதலில் தெரிவித்து இருந்தார். இதற்காக ஆளுநரிடம் ரூ.140 கோடி நிதி ஒதுக்க ஆளுநரிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மாநிலத்தில் ஏற்கெனவே நிதிச்சுமை காரணமாக ஆளுநர் அதற்கு மறுத்து விட்டார். இதனால் வேறு வழியின்றி புதுச்சேரி அரசு ரூ.3,000 கொடுப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

