MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Puducherry
  • புதுச்சேரியை உலுக்கப் போகும் பிரம்மாண்ட திருவிழா: பொருளாதாரத்தை உயர்த்தப் போகும் பாண்டி மெலாஞ்ச்!

புதுச்சேரியை உலுக்கப் போகும் பிரம்மாண்ட திருவிழா: பொருளாதாரத்தை உயர்த்தப் போகும் பாண்டி மெலாஞ்ச்!

Pondi Melange 2027: புதுச்சேரியின் ‘பாண்டி மெலாஞ்ச் 2027’ லோகோ வெளியிடப்பட்டது. ஜனவரியில் மாநாடுகளும், பிப்ரவரியில் கலை விழாக்களும் நடைபெற உள்ளன. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து, புதுச்சேரியின் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 17 2026, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பாண்டி மெலாஞ்ச் 2027
Image Credit : X

பாண்டி மெலாஞ்ச் 2027

கலை, பண்பாடு, ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், ‘பாண்டி மெலாஞ்ச் 2027’ (Pondi Melange 2027) நிகழ்வுக்கான அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் அறிமுக சின்னம் வெளியீட்டு விழா புதுச்சேரி காந்தி திடலில் சிறப்பாக நடைபெற்றது. புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி இந்த லோகோவை வெளியிட்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.

விழா சிறப்புகள்

புதுச்சேரி சுற்றுலாத் துறையும், டெக் ஷாட் (Tech Shot) நிறுவனமும் இணைந்து இந்த பிரம்மாண்ட நிகழ்வை முன்னெடுத்துள்ளன. அறிமுக விழாவில், சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், ‘பாண்டி மெலாஞ்ச் 2027’ நிகழ்வுகளின் சிறப்புக் காணொளியை வெளியிட்டார். விழாவில் பல்வேறு பாரம்பரிய மற்றும் நவீன கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன, இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
‘பாண்டி மெலாஞ்ச் 2027’ சிறப்பம்சங்கள்
Image Credit : x

‘பாண்டி மெலாஞ்ச் 2027’ சிறப்பம்சங்கள்

பல்வேறு துறைகளின் சங்கமம்: பண்பாடு, படைப்பாற்றல் மற்றும் கொண்டாட்டத்தை மையமாகக் கொண்டுள்ள இந்நிகழ்ச்சி, கலை, இசை, பேஷன், பாரம்பரிய உணவு வகைகள், நல்வாழ்வு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல அம்சங்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது.

மாநாடுகள்: இதன் முதற்கட்டமாக, வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கல்வி, ஆன்மிகம் மற்றும் மருத்துவம் சார்ந்த மாநாடுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து துறை சார்ந்த நிபுணர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.

கலாசாரக் கொண்டாட்டங்கள்: மாநாடுகளைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள், சர்வதேச நடனத் திருவிழா மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் புதுச்சேரியின் பல முக்கிய இடங்களில் நடைபெறவுள்ளன.

34
முதலமைச்சர் ரங்கசாமி பேசியது என்ன?
Image Credit : Google

முதலமைச்சர் ரங்கசாமி பேசியது என்ன?

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரி மாநிலம் எப்போதும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாக விளங்கி வருகிறது. கலை நிகழ்ச்சிகள் மற்றும் இது போன்ற சர்வதேச நிகழ்வுகள் மூலம் சுற்றுலா மேலும் வளர்க்கப்படும். இதன் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து, நமது மாநிலத்தின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும்" எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகள் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் விமரிசையாக நடத்தப்படும்'' என்று தெரிவித்தார்.

44
புதுச்சேரி பொருளாதார வளர்ச்சி
Image Credit : stockphoto

புதுச்சேரி பொருளாதார வளர்ச்சி

சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சி: புதுச்சேரியில் இது போன்ற தொடர் கலாச்சார மற்றும் கல்விசார் நிகழ்வுகள் நடத்தப்படுவதால், ஹோட்டல் துறை, கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் உள்ளூர் வியாபாரம் மிகப்பெரிய அளவில் ஊக்கம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரெஞ்சு பாரம்பரியக் கட்டடக் கலை: புதுச்சேரியின் தனிச்சிறப்பான பிரெஞ்சு காலனி கட்டிடக்கலை மற்றும் கடற்கரைச் சூழல், இதுபோன்ற உலகளாவிய கலை விழாக்களுக்கு மிகவும் பொருத்தமான இடமாக இதனை மாற்றுகிறது.

சர்வதேச சுற்றுலாத் தலம்: ஏற்கெனவே ஆரோவில் மற்றும் அரவிந்தர் ஆசிரமம் மூலம் ஆன்மிக சுற்றுலா மையமாகத் திகழும் புதுச்சேரி, இந்த ‘பாண்டி மெலாஞ்ச்’ நிகழ்வுகள் மூலம் சர்வதேச அளவில் ஒரு கலாச்சார மற்றும் கலை மையமாகவும் தன் அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
புதுச்சேரி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Free Grocery Kit: தீபாவளி கிப்ட்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மளிகை தொகுப்பு..! அரசு அதிரடி அறிவிப்பு
Recommended image2
Ration Card: ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்காவிட்டால் உதவித்தொகை நிறுத்தம்! அத்தனை சலுகைகளும் ரத்தாகுமா?
Recommended image3
Govt Scheme: பெண்களுக்கு ஜாக்பாட்..! E-Bike வாங்க ரூ.1 லட்சம் மானியம்..! எங்கு, எப்படி விண்ணப்பிக்கனும் தெரியுமா?!
Related Stories
Recommended image1
இது தமிழகம் அல்ல; விஜய்யை ஏமாற்றிய புதுச்சேரி! தளபதி அலைக்கு அணை போட்ட அந்த 4 காரணங்கள்!
Recommended image2
புதுச்சேரி மக்களுக்கு குட்நியூஸ்! ரூ.2157 கோடி திட்டத்துக்கு பச்சைக்கொடி காட்டிய மத்திய அரசு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved