முதல்வர் சூப்பர் அறிவிப்பு! 1000 ரூபாய் மதிப்புள்ள 10 பொருட்கள் ரூ.500 மட்டுமே! என்னென்ன இருக்கு தெரியுமா?
அரசு ஊழியர்களுக்கு ரூ.7000 தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகையும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1500 போனஸும் வழங்கப்படும்.
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி போனஸ் மத்திய, மாநில அரசு வழங்குவது வழக்கம். அதன்படி தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மத்திய மாநில அரசுகள் தீபாவளி போனஸ் அறிவித்துள்ளனர். அந்த வரிசையில் புதுச்சேரி அரசு தங்கள் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 7000 ரூபாய் அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 30 கடைகள் மட்டுமே திறக்கப்படவில்லை. அந்த பகுதிகளில் அங்கன்வாடிகள், பள்ளிகளில் இலவச அரிசியை சிரமமின்றி பெறலாம்.
இதையும் படிங்க: Co-Optex: வேற லெவலில் கோ-ஆப்டெக்ஸ்! ஆஃபர்களை அள்ளி வீசியது மட்டுமல்லாமல்! இதுவும் இருக்காம்!
கான்பெட் நிறுவனம் மூலம் தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி மக்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள 10 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மானிய விலையில் ரூ.500க்கு விற்பனை செய்யப்படும். ரேஷன் கார்டுகளை காட்டி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். விரைவில் அந்த 10 பொருட்கள் பற்றிய விவரம் தெரிவிக்கப்படும்.
இதையும் படிங்க: BHEL job Vacancy: பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை வாய்ப்பு! 695 காலி பணியிடங்கள்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
புதுச்சேரி தீபாவளியை முன்னிட்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5,000 மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,500 போனஸ் வழங்கப்படும். அரசின் வடி சாராய ஆலை லாபத்தில் இயங்கி வருகிறது. 2017 முதல் 2021 வரை 4 ஆண்டுகளுக்கு லாப ஈவுத் தொகையாக ரூ.1.45 கோடி வழங்கியுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.