- Home
- Politics
- சாதிக் கட்சி நடத்தும் நீ பிரபாகரனை இழிவாகப் பேசலாமா? திருமாவை கிழித்தெடுத்த இலங்கை தமிழர்..!
சாதிக் கட்சி நடத்தும் நீ பிரபாகரனை இழிவாகப் பேசலாமா? திருமாவை கிழித்தெடுத்த இலங்கை தமிழர்..!
‘‘14 பேரை கொன்றுவிட்டு பிரபாகரன் மதிவதனியை திருமணம் செய்து கொன்றார் என இழிவாகப் பேச உனக்கென்ன துணிச்சல்’’ என விசிக கட்சி தலைவர் திருமாவளவனை கடுமையாக விமர்சித்துள்ளார் இலங்கை தமிழர் ஒருவர்.

‘‘14 பேரை கொன்றுவிட்டு பிரபாகரன் மதிவதனியை திருமணம் செய்து கொன்றார் என இழிவாகப் பேச உனக்கென்ன துணிச்சல்’’ என விசிக கட்சி தலைவர் திருமாவளவனை கடுமையாக விமர்சித்துள்ளார் இலங்கை தமிழர் ஒருவர்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘நமது தேசியத் தலைவர் மேதகு பிரபாகநகர்கள் காதல் மனைவிக்காக 14 பேரை கொன்றுவிட்டு தனது காதல் மனைவியை கைப்பிடித்ததாகச் சொல்கிறார் திருமாவளவன். இப்படிச் சொல்கிற நீ எவ்வளவு கேவலமான மனுஷனா இருப்பார். தமிழீல விடுதலைப் புலிகளின் தலைவர் மீது பிரபாகரன் தனது காதல் மனைவியை கைப்பிடிக்கும் சமயத்தில் சில பல எதிர்ப்புகள் வந்ததாகவும், அதனால் தனது காதல் மனைவியை கைப்பிடிப்பதற்காக 14 பேரை சுட்டுக்கொன்று விட்டுத்தான் தனது காதல் மனைவியை கைப்பிடித்ததாகவும், அது வல்வெட்டித்துறையில் நடந்ததாகவும் சொல்லி இருக்கிறார். அந்த மண்ணில், a to z என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியும்.
அப்படி இருக்க, இந்த திருமாவளவன் சொன்ன இந்த கருத்து எனக்கு ஒரு இனம் தெரியாத கோபத்தை ஏற்படுடத்தி இருக்கிறது. ஒரு காட்டமான பேச்சுக்கு இடம் கொடுத்து இருக்கிறது. திருமாவளவன் உனக்கு தெரியுமா? நீ ஒரு சாதி கட்சி நடத்துகிற ஒரு மிக மோசமான, மட்டமான மனிதர். நமது தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் காதல் மனைவிக்காக 14 பேரை அழித்துவிட்டு, தனது காதல் மனைவியை கைப்பிடித்ததாக சொல்கிற நீ எவ்வளவு கேவலமான மனுஷனா இருப்பாய். காலத்துக்கும் திமுக -அதிமுக என்று சொல்லி எந்த பக்கத்தில் உனக்கு பிரிவு கிடைக்குதோ? ஆதாயம் கிடைக்கிறதோ அங்கே ஒட்டிக் கொள்பவர் நீ. நீ வந்து தேசிய தலைவரை இவ்வளவு மட்டமாக பேசுகிறாய்.
உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். அப்போது விடுதலைப்புலிகள் காட்டுக்குள் இருக்கிறார். இந்திய ராணுவம் தமிழ் ஈழத்திற்குள் வந்தபோது பிரபாகரனும் காட்டுக்குள் இருக்கிறார். தனது மனைவியை யாழ்ப்பாணத்தில் இருந்து வல்வெட்டிதுறையில் இருந்து காட்டுக்குள் தரை வழியாக அழைத்து வரச்சொல்லி ஒரு அணியை அனுப்புகிறார். அதில் தமிழ்ச்செல்வன், நான் உட்படச் சென்றோம். அப்போது ஏற்கனவே மதிவதனி அண்ணிக்கு இரட்டை குப்பி சாயனைடு கொடுக்கப்பட்டிருந்தது. வரும் வழியில் இந்திய ராணுவம் உங்களை சுற்றிவளைத்து அவரை கைது செய்தால் குப்பியை அருந்தி அவர் உயிரை மாய்க்க வேண்டும் என்று மதிவதனி அவர்களுக்கு சொல்லப்பட்டது.
அதே சமகாலத் தேசிய தலைவர் தமிழ்ச்செல்வனிடம் குப்பியை கொடுக்கிறார். துப்பாக்கியை கொடுக்கிறார். ஒருவேளை
மதிவதனி குப்பியை கடிக்க தாமதப்பட்டாலோ, பயந்தாலோ இந்த துப்பாக்கியால் மதிவதினையை சுட்டுக் கொன்று விட்டு வாருங்கள் என்று சொல்கிறார். இதில் என்ன விளங்கிறது என்று உனக்கு தெரியுமா? மக்களுக்காகவும், கொண்ட கொள்ளகைக்காகவும் அந்த உயரிய இயக்கத்தின் கொள்கைக்காகவும், தனது மனைவியைக்கூட சுட்டுக் கொன்றுவிட்டு வா என்பதுதான் இயக்கம். அந்தக் கொள்கை, அந்த பிரதிபலிப்பு. மக்களுக்காக தனது மனைவியை இழக்க தயாராக இருக்கிறவன் ஒரு காதலிக்காக 14 பேரை கொலை செய்துவிட்டு அடம்பிடித்தார் என்று நீ சொல்லி இருக்கிறாய்.
திருமாவளவனே நீ லண்டனுக்கு வரும்போது எவ்வளவு அசிங்கப்பட்டு விட்டுப் போனாய் என்று உனக்கு தெரியும். அதேபோல மலேசியாவுக்கு சென்று விட்டு அங்கே மலேசியா தமிழர்கள் உன்னை அசிங்கமாக திட்டினார்கள். ‘குப்பைகளை கொண்டு வந்து இந்த இடத்தில் கொட்டாதே’ என்று சொன்னார்கள். நீ அவ்வளவு தரம் தாழ்ந்த மனிதன். இனிவரும் காலங்களில் நீ ஒரு அரசியல் அனாதை. உன்னை யாருமே சேர்க்கப் போவது கிடையாது. ஒரு ஜாதி கட்சியை உருவாக்கி, அங்குள்ள மக்களை சிந்திக்க தெரியாதவர்களாக வைத்துக்கொண்டு, அவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிற ஒரு அரசியல்வாதி. நீ எப்போது வல்வெட்டிதுறையில் வைத்து தலைவர் அந்த 14 பேரை கொன்றதாக சொன்னாயோ, அப்போதே நீ ஒரு மகா மட்டமான ஆள்.
அந்த மண்ணின் பெருமை பற்றி உனக்கு என்ன தெரியும்? ஏழு வயதில் இருந்து போரைத் தவிர நாங்கள் எதையுமே பார்த்ததில்லை. எவ்வளவு தியாகங்கள், சோகங்கள்? இதைத் தவிர நாங்கள் எதையுமே பார்த்ததில்லை. பிரபாகரனை பற்றி பேசுவதற்கு உனக்கு என்ன துணிச்சல்? இந்த கதையை பிரபாகரன் உன்னிடம் தனிமையில் சொன்னாரா? அதை நீ மேடையில் மைக்கை பிடித்து சொல்கிறாய். திமுக சொல்லிக் கொடுப்பதை நீ மேடையில் பேசுகிறாய். அதற்கு எங்கள் பிரபாகரன் தான் கிடைத்தாரா? எனக் கொந்தளித்துள்ளார்.
