MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • சுதந்திரத்திற்க்குப் பின் 8 முதலமைச்சர்களை மட்டுமே கண்ட மாநிலம் எது தெரியுமா? அரசியல் நிலைத்தன்மை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.!

சுதந்திரத்திற்க்குப் பின் 8 முதலமைச்சர்களை மட்டுமே கண்ட மாநிலம் எது தெரியுமா? அரசியல் நிலைத்தன்மை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.!

West Bengal CM List in Tamil : இந்தியா சுதந்திரம் அடைந்த 79 ஆண்டுகளில் ஒரு மாநிலம் வெறும் எட்டு முதலமைச்சர்களை மட்டுமே பெற்றுள்ளது. அந்த மாநிலம் குறித்தும், அதன் அரசியல் நிலைத்தன்மை குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம். 

3 Min read
Author : Ramprasath S
Published : Apr 19 2026, 06:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
அரசியல் நிலைத்தன்மை கொண்ட ஒரே மாநிலம்
Image Credit : Getty

அரசியல் நிலைத்தன்மை கொண்ட ஒரே மாநிலம்

இந்தியாவின் அரசியல் என்பது விசித்திரமானது. தற்போதைய காலத்தில் அரசியலில் நிலைத்தன்மை என்பது துளியும் இல்லாமல் இருந்து வருகிறது. எம்.எல்.ஏக்கள் கட்சி தாவுவது, ஒரு கூட்டணியிலிருந்து மற்றொரு கூட்டணிக்கு சென்று ஆட்சி அமைப்பது, ஒரு சின்னத்தில் நின்று வெற்றி பெற்று பின்னர் இன்னொரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து அந்த கட்சியை ஆட்சி கட்டிலில் அமர வைப்பது போன்ற பல அரசியில் கேலி கூத்துக்கள் அரங்கேறி வருகின்றன. ஆனால் 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து தற்போது வரை ஒரு மாநிலம் வெறும் 8 முதல் முதலமைச்சர்களை மட்டுமே சந்தித்துள்ளது. அந்த மாநிலம் குறித்தும் அதன் சுவாரஸ்ய பின்னணி குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

28
8 முதலமைச்சர்களை மட்டுமே பெற்ற மேற்கு வங்கம்
Image Credit : Gemini AI

8 முதலமைச்சர்களை மட்டுமே பெற்ற மேற்கு வங்கம்

இந்தியாவின் கிழக்கு நுழைவாயிலாக கருதப்படும் மேற்கு வங்காள மாநிலம் அரசியல் ரீதியாக மிகவும் தனித்துவம் வாய்ந்த மாநிலம் ஆகும். 1947 ஆம் ஆண்டு தொடங்கி 2026 ஆம் ஆண்டு வரை வெறும் 8 முதல் அமைச்சர்களை மட்டுமே இந்த மாநிலம் சந்தித்துள்ளது. இது அந்த மாநிலத்தின் அரசியல் நிலைத் தன்மையையும், நீண்ட கால தலைமைத்துவத்தையும் காட்டுகிறது. மேற்கு வங்காளத்தின் அரசியல் பயணம் குறித்தும், அதன் முதலமைச்சர்கள் குறித்தும் இங்கு காணலாம். மேற்கு வங்காள அரசியலை மூன்று முக்கிய காலகட்டங்களாக பிரிக்கலாம். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி, இடதுசாரிகளின் ஆட்சி மற்றும் திருணாமூல் காங்கிரஸின் ஆட்சி என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.

Related Articles

Related image1
Asha Bhosle : ஆஷா போஸ்லே - லதா மங்கேஷ்கர் மரணத்தில் 4 விசித்திர ஒற்றுமைகள்.! இறப்பிலும் கூட ஒற்றுமையை கடைபிடித்த அக்கா தங்கை.!
Related image2
அம்பானி வீட்டில் சப்பாத்தி சுடுபவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.! சாப்ட்வேர் என்ஜினீயர் விட அதிகமாம்.!
38
காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்கள்
Image Credit : Asianet News

காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்கள்

  • 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபுல் சந்திர கோஷ் முதலமைச்சராக பதவியேற்றார். இவர் 1948 ஆம் ஆண்டு வரை இந்த பதிவியில் இருந்தார். 
  • 1948 ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. பிதான் சந்திர ராய் முதலமைச்சராக பதவி ஏற்றார். இவர் 1962 வரை மேற்குவங்க முதலமைச்சராக பணியாற்றினார். 
  • அதன் பின்னர் 1962-1967 வரை காங்கிரஸ் கட்சியின் பிரபுல் சந்திர சென் ஆட்சி புரிந்தார். 
  • 1967 முதல் 1971 வரை அஜய் குமார் முகர்ஜியும் (வங்காள காங்கிரஸ்), 1972 முதல் 1977 வரை காங்கிரஸ் கட்சியின் சித்தார்த் சங்கர் ரே ஆகியோரும் மேற்குவங்க முதலமைச்சராக பணியாற்றினர்.
48
கம்யூனிஸ்ட் கோட்டையாக மாறிய மேற்கு வங்காளம்
Image Credit : Getty

கம்யூனிஸ்ட் கோட்டையாக மாறிய மேற்கு வங்காளம்

அதன் பின்னர் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் மாற்றங்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கைப்பற்றியது. 1977 ஆம் ஆண்டு தொடங்கி 2000 ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜோதிபாசு முதலமைச்சராக பதவி வகித்தார். 2000 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை புத்ததேவ் பட்டாச்சாரியா மேற்கு வங்கத்தை ஆட்சி செய்தார். கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்காளத்தை காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய மம்தா பானர்ஜி கைப்பற்றினார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அவர், தற்போது வரை (2026) தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

58
மேற்கு வங்கத்தை வடிவமைத்த முக்கிய முதல்வர்கள்
Image Credit : Getty

மேற்கு வங்கத்தை வடிவமைத்த முக்கிய முதல்வர்கள்

சுதந்திரத்திற்குப் பின்னர் வங்காளத்தை வடிவமைத்ததில் டாக்டர் பி.சி ராய் (பிதான் சந்திர ராய்) முக்கிய பங்கு வகிக்கிறார். 14 ஆண்டுகள் (1948-1962) முதலமைச்சராக இருந்த இவர், கல்கத்தாவை ஒரு நவீன நகரமாக மாற்றினார். இவரது பிறந்த நாளான ஜூலை ஒன்றாம் தேதி இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர்களில் ஜோதிபாசு முக்கியமானவர். தொடர்ச்சியாக 23 ஆண்டுகாலம் மேற்கு வங்காளத்தை ஆட்சி செய்தார். இவரது ஆட்சி காலத்தில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் நிலச் சீர்த்திருத்தங்கள் கிராமபுற வங்காளத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின.

68
கம்யூனிஸ்ட்களின் கோட்டையை தகர்த்த மம்தா பானர்ஜி
Image Credit : Getty

கம்யூனிஸ்ட்களின் கோட்டையை தகர்த்த மம்தா பானர்ஜி

1977 முதல் 2011 வரை உலகிலேயே ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நீண்ட கால கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்கிற பெருமையை மேற்கு வங்காளம் பெற்றது. இந்த காலகட்டத்தில் மேற்கு வங்காளத்தில் கல்வி, விவசாயம் ஆகியவற்றில் முன்னேற்றம் காணப்பட்டது. இருப்பினும் தொழில் யமயமாக்கலில் தொய்வு ஏற்பட்டதாக விமர்சனங்களும் எழுந்தன. 2011 ஆம் ஆண்டு சிங்கூர் மற்றும் நந்திகிராம் போராட்டங்கள் மூலம் இடதுசாரிகளின் 34 ஆண்டு கால ஆட்சியை வீழ்த்தி, மம்தா பானர்ஜி ஆட்சியைப் பிடித்தார். மேற்குவங்க மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையும் இவரையேச் சேரும். தற்போது மூன்றாவது முறையாக ஆட்சியில் நீடித்து வருகிறார்.

78
அரசியல் அறிவு அதிகம் கொண்ட வங்காளிகள்
Image Credit : Getty

அரசியல் அறிவு அதிகம் கொண்ட வங்காளிகள்

மேற்கு வங்காளம் சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் போன்ற மாபெரும் தலைவர்களை தந்த மண்ணாகும். சணல் உற்பத்தி மற்றும் தேயிலை உற்பத்தியில் மேற்கு வங்காளம் முன்னணியில் உள்ளது. இந்தியாவின் கலாச்சார தலைநகரமாகவும் கொல்கத்தா திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் அதிக அரசியல் விழிப்புணர்வு கொண்ட மக்களில் வங்காள மக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இங்கு தேர்தல் வாக்கு சதவீதம் எப்போதும் மிக அதிகமாக இருக்கும். மேற்கு வங்காளத்தின் இந்த எட்டு முதலமைச்சர்களும் அந்த மாநிலத்தின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சியை வெவ்வேறு காலகட்டத்தில் வடிவமைத்துள்ளனர்.

88
மம்தா நான்காவது முறையாக ஜெயிப்பாரா?
Image Credit : X Handle

மம்தா நான்காவது முறையாக ஜெயிப்பாரா?

வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் கருத்து கணிப்புகளில் மம்தா பானர்ஜி முன்னணியில் இருந்து வருகிறார். இவருக்கு எதிராக பாஜக தீவிரமாக வேலை செய்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் சதியை முறியடித்து மம்தா பானர்ஜி நான்காவது முறையாக வெற்றி பெற்று மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக வருவாரா? அல்லது மேற்கு வங்க அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல் சுவாரஸ்யம்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Women's Reservation Bill: தமிழகத்தில் திமுக சிறுபிள்ளைத்தனமாக அரசியல் செய்கிறது.. மோடி குற்றச்சாட்டு
Recommended image2
டெப்பாசிட் வாங்குவாரா? சுந்தர் சி-யை டம்மியாக்கிய PTR பழனிவேல் தியாகராஜன்!
Recommended image3
Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!
Related Stories
Recommended image1
Asha Bhosle : ஆஷா போஸ்லே - லதா மங்கேஷ்கர் மரணத்தில் 4 விசித்திர ஒற்றுமைகள்.! இறப்பிலும் கூட ஒற்றுமையை கடைபிடித்த அக்கா தங்கை.!
Recommended image2
அம்பானி வீட்டில் சப்பாத்தி சுடுபவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.! சாப்ட்வேர் என்ஜினீயர் விட அதிகமாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved