MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • அம்பானி வீட்டில் சப்பாத்தி சுடுபவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.! சாப்ட்வேர் என்ஜினீயர் விட அதிகமாம்.!

அம்பானி வீட்டில் சப்பாத்தி சுடுபவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.! சாப்ட்வேர் என்ஜினீயர் விட அதிகமாம்.!

Mukesh Ambani House Workers Salary : அம்பானி வீட்டில் பணிபுரியும் சமையல் கலைஞர்கள் மற்றும் பிற பணியாளர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தற்போது விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 13 2026, 05:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
அம்பானி வீட்டு சமையல் கலைஞர்களுக்கு எவ்வளவு சம்பளம்?
Image Credit : Gamini AI

அம்பானி வீட்டு சமையல் கலைஞர்களுக்கு எவ்வளவு சம்பளம்?

உலக அளவில் அறியப்பட்ட தொழிலதிபராக முகேஷ் அம்பானி விளங்கி வருகிறார். இவர் வீட்டில் சப்பாத்தி தயாரிக்கும் மற்றும் உணவு சமைக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். இந்த ரொட்டிகளை தயாரிக்கும் நபர் ஒரு அரசு அதிகாரியின் சம்பளத்தை விட அதிகமாக சம்பாதிக்கிறார். இந்தியாவில் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியருக்கு இணையான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அம்பானி தனது வீட்டில் பணிபுரியும் சமையல் கலைஞர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்குகிறார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

26
வீட்டு உணவுகளை விரும்பும் முகேஷ் அம்பானி
Image Credit : Gamini AI

வீட்டு உணவுகளை விரும்பும் முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் குடும்பத்தினர் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அசைவ உணவுகளை சாப்பிடுவதில்லை. முழுமையான சைவ உணவு உண்பவர்கள். அவர்கள் பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளையே உண்கின்றனர். உணவு விஷயத்தில் அவர்கள் மிகவும் கண்டிப்பாக இருக்கின்றனர். 

ஒரு நேர்காணலில் முகேஷ் அம்பானி, தனக்கு வீட்டில் சமைத்த உணவுகளை மிகவும் பிடிக்கும் என்றும், வீட்டில் சமைத்த ரொட்டி, சாதம், பருப்பு ஆகியவற்றை விரும்பி சாப்பிடுவதாகவும் கூறியிருக்கிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இட்லி, சாம்பார் சாப்பிட பிடிக்கும் என்றும், தாய்லாந்து உணவுகளும் தனக்கு விருப்பமானது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Related Articles

Related image1
Post Office Scheme: 10 வருடத்தில் ரூ.15 லட்சம் சம்பாதிக்கணுமா? தினமும் இவ்வளவு சேமித்தால் போதும்.! போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்.!
Related image2
8th Pay Commission : தேர்வே இல்லை, ₹1.80 லட்சம் சம்பளம்.! மாசம் 6 நாள் மட்டுமே வேலை.! உடனே விண்ணப்பியுங்க.!
36
தினமும் 4000 ரொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன
Image Credit : Gamini AI

தினமும் 4000 ரொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன

அம்பானி இல்லத்தில் தினமும் 4000 ரொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு ரொட்டி தயாரிப்பவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. இதை கேட்டு பலரும் ஆச்சரியப்படுகின்றனர். ஆனால் இது உண்மைதான். கடந்த ஆண்டு ரொட்டி தயாரிப்பாளர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இது இன்னும் அதிகமாக இருக்கலாம். அம்பானி வீட்டில் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகின்றனர். 

மேலும் அங்கு மூன்று ஹெலிப்பேடுகள், 168 கார் நிறுத்துமிடங்கள் உட்பட ஆடம்பர வசதிகள் பல உள்ளன. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. அனைவருக்கும் சமைக்க ஒரு சிறப்பு சமையல் குழுவே உள்ளது. ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் அல்லது நிகழ்ச்சிக்கு வரும் அத்தனை பேருக்கும் அவர்கள் உணவு சமைக்கின்றனர்.

46
மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் பெறும் ஊழியர்கள்
Image Credit : stockPhoto

மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் பெறும் ஊழியர்கள்

அனைவருக்கும் உணவு தயாரிப்பதற்காக ஊழியர்களுக்கு தனியாக சமையலறை வழங்கப்பட்டுள்ளது. சமையல் ஊழியர்களுக்காக ஒரு தளத்தையே அம்பானி ஒதுக்கியிருக்கிறார். அனைவரும் ஒரே தளத்தில் திருவிழாவைப் போல அமர்ந்து உணவருந்துகிறார்கள். அம்பானியின் 27 மாடி கட்டிடத்தின் மதிப்பு சுமார் ரூ.15,000 கோடி. இங்கு தயாரிக்கப்படும் ரொட்டிகள் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் பணிபுரியும் பிற ஊழியர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. 

ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்யாவில் பணிபுரியும் தலைமை சமையல் கலைஞர்களுக்கு மாதத்திற்கு ரூ.2 லட்சத் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு சுமார் ரூ.24 லட்சம் சம்பளம் பெறுகிறார்கள். சம்பளத்தைத் தாண்டி இவர்களுக்கு மருத்துவ காப்பீடு, குழந்தைகளின் கல்விச் செலவு போன்ற கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகிறது.

56
சமையல் கலை நிபுணர்களை பணியில் அமர்த்திய அம்பானி
Image Credit : Gemini AI

சமையல் கலை நிபுணர்களை பணியில் அமர்த்திய அம்பானி

அம்பானியின் வீட்டில் பணிபுரிபவர்கள் வெறும் சமையல் ஊழியர்கள் மட்டுமல்ல. இவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் பட்டம் பெற்ற அனுபவம் வாய்ந்த தொழில் முறை சமையல் கலைஞர்கள். அவர் உலகத்தரம் வாய்ந்த ஹோட்டல்களில் பணிபுரிபவர்களுக்கு இணையான தரம், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டியதை இவர்களின் கடமை. 

இவ்வளவு பெரிய இல்லத்தின் சமையல் தேவைகளை நிர்ணயிப்பது ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தை நிர்வகிப்பதற்கு சமமாகும். தலைமை சமையல்காரருக்கு கீழ் பணி புரியும் பணியாளர்களுக்கு அவர்களின் அனுபவம் மற்றும் பொறுப்புகளின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த ஊழியர்கள் நம்மை போல் கையால் ரொட்டிகளை தயாரிப்பதில்லை. நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் ரொட்டி தயாரிக்கும் இயந்திரங்களின் உதவியுடனே அவர்கள் ரொட்டிகளை தயாரிக்கின்றனர்.

66
சாஃப்ட்வேர் இன்ஜினியருக்கு இணையான சம்பளம்
Image Credit : Gemini AI

சாஃப்ட்வேர் இன்ஜினியருக்கு இணையான சம்பளம்

இந்த செய்தி ஒரு கட்டுக்கதை அல்ல. 27 மாடிகளை கொண்ட அன்டில்யா போன்ற மிகப்பெரிய இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் அவர்கள் கையாளும் பொறுப்புகளின் அடிப்படையில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்யும் அதிகாரிகளுக்கு இணையான ஊதியம் வழங்கப்படுவது உண்மைதான். இந்தியாவில் அரசு அதிகாரிகள் அல்லது சாப்ட்வேர் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இணையான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்
வாழ்க்கை முறை
முகேஷ் அம்பானி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hemoglobin Levels: ஹீமோகுளோபின் அதிகரிக்க 7 நாட்கள் போதும்.. ஆண்களுக்கு? பெண்களுக்கு? எவ்வளவு இருக்கணும்?
Recommended image2
Fragrant Flowers: தூக்கமே வரலையா? இந்த 5 வாசனை பூச்செடிகளை வீட்ல வைங்க, நிம்மதியா தூங்கலாம்!
Recommended image3
Fridge Safety: கோடையில் இந்த தப்பை செஞ்சா உங்க ஃபிரிட்ஜ் வெடிகுண்டு மாதிரி வெடிக்கலாம்! ஜாக்கிரதை
Related Stories
Recommended image1
Post Office Scheme: 10 வருடத்தில் ரூ.15 லட்சம் சம்பாதிக்கணுமா? தினமும் இவ்வளவு சேமித்தால் போதும்.! போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்.!
Recommended image2
8th Pay Commission : தேர்வே இல்லை, ₹1.80 லட்சம் சம்பளம்.! மாசம் 6 நாள் மட்டுமே வேலை.! உடனே விண்ணப்பியுங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved