- Home
- Career
- 8th Pay Commission : தேர்வே இல்லை, ₹1.80 லட்சம் சம்பளம்.! மாசம் 6 நாள் மட்டுமே வேலை.! உடனே விண்ணப்பியுங்க.!
8th Pay Commission : தேர்வே இல்லை, ₹1.80 லட்சம் சம்பளம்.! மாசம் 6 நாள் மட்டுமே வேலை.! உடனே விண்ணப்பியுங்க.!
8th Pay Commission Jobs : 8வது ஊதிய குழுவில் தற்காலிக பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தகுதிகள், சம்பள விவரம், எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் விரவாகப் பார்க்கலாம்.

8வது ஊதியக்குழுவில் வேலைவாய்ப்பு
அரசு வேலை தேடிட்டு இருக்கீங்களா? நல்ல சம்பளமும் வேணுமா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான். 8வது சம்பள கமிஷன்ல ஒரு சூப்பரான வேலைவாய்ப்பு வந்திருக்கு. மாசத்துக்கு வெறும் 6 நாள் வேலை பார்த்தா கூட போதும், கை நிறைய சம்பாதிக்கலாம். எப்படி அப்ளை பண்றதுன்னு இந்த பதிவில் தெரிஞ்சுக்கோங்க.
யார் விண்ணப்பிக்கலாம்?
8வது சம்பள கமிஷன் வேலைக்கு யார் விண்ணப்பிக்கலாம்? ஏப்ரல் 10, 2026 தேதியிட்ட அரசாணைப்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், பென்ஷன், படிகள் பற்றி ஆய்வு செய்ய நிபுணர்கள் தேவை. அனுபவம் மற்றும் வயதின் அடிப்படையில் மூன்று பிரிவுகளில் ஆட்கள் எடுக்கப்படுகிறார்கள். உங்கள் வயது 32 முதல் 45க்குள் இருந்தால், தகுதிக்கேற்ப விண்ணப்பிக்கலாம்.
என்ன பதவிகள் காலியாக இருக்கு?
8வது சம்பள கமிஷனில் என்னென்ன பதவிகள் இருக்கு? சீனியர் கன்சல்டன்ட் (Senior Consultant): 10 வருட அனுபவம், அதிகபட்ச வயது 45. கன்சல்டன்ட் (Consultant): 6 வருட அனுபவம், அதிகபட்ச வயது 40. யங் புரொஃபஷனல் (Young Professional): 4 வருட அனுபவம், அதிகபட்ச வயது 32. குறிப்பு: வயது மற்றும் அனுபவம் ஏப்ரல் 1, 2026 தேதியின்படி கணக்கிடப்படும்.
சம்பளம் எவ்வளவு?
இந்த வேலையோட பெரிய ப்ளஸ்ஸே சம்பளம்தான். நீங்க ஃபுல்-டைம் அல்லது பார்ட்-டைம் வேலையை தேர்ந்தெடுக்கலாம். சீனியர் கன்சல்டன்ட் பதவிக்கு ஃபுல்-டைம் வேலைக்கு மாதம் ₹1,80,000 சம்பளம். மாசத்துல 12 நாள் வேலை செய்றவங்களுக்கு ₹90,000, வெறும் 6 நாள் வேலை செய்றவங்களுக்கு ₹45,000 கிடைக்கும். அதேபோல, கன்சல்டன்ட் பதவிக்கு ஃபுல்-டைம் சம்பளம் ₹1,20,000. பார்ட்-டைம்க்கு முறையே ₹60,000 (12 நாட்கள்), ₹30,000 (6 நாட்கள்). யங் புரொஃபஷனல்ஸுக்கு ஃபுல்-டைம் வேலைக்கு ₹90,000, 12 நாள் வேலைக்கு ₹45,000, 6 நாள் வேலைக்கு ₹22,500 வழங்கப்படும்.
நிரந்தரம் இல்லை, தற்காலிகமானது
இந்த வேலைக்கு நீங்க எந்த எழுத்துத் தேர்வும் எழுத வேண்டாம். கமிஷனின் சீனியர் அதிகாரிகள் கொண்ட ஒரு குழு உங்க விண்ணப்பத்தை ஆய்வு செய்யும். தகுதியானவங்கள நேரா இன்டர்வியூக்கு கூப்பிடுவாங்க. இந்த குழுவின் முடிவுதான் இறுதியானது. இது ஒரு கான்ட்ராக்ட் வேலை, நிரந்தரமானது இல்லை, தற்காலிகமானது என்பதை நினைவில் கொள்ளவும்.
உங்கள் பணி என்ன?
தேர்ந்தெடுக்கப்பட்ட புரொஃபஷனல்ஸ் 8வது சம்பள கமிஷனுக்கு உதவ வேண்டும். ஊழியர்களின் சம்பள கட்டமைப்பை பகுப்பாய்வு செய்வது, பழைய டேட்டாவை படிப்பது, சட்டரீதியான ஆய்வுகள் செய்வது, அமைச்சகங்களிடமிருந்து டேட்டாவை சேகரிப்பது போன்ற பணிகள் இதில் அடங்கும். அதாவது, எதிர்காலத்தில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயர வேண்டும் என்பதை தீர்மானிக்க நீங்க உதவ வேண்டும்.
பிற சலுகைகள் என்ன?
வேறு படிகள் கிடையாது: உங்களுக்கு சம்பளம் மட்டும்தான். DA, வீட்டு வாடகைப்படி (HRA), மருத்துவச் செலவு, போன் பில் எதுவும் தர மாட்டாங்க.
லேப்டாப்/போன்: கமிஷன் ஆபீஸில் வேலை செய்ய இடம் மட்டும் கொடுக்கும், லேப்டாப், போன் போன்ற வசதிகள் நீங்களே பார்த்துக்கணும். வேலை
நிபந்தனைகள்: உங்க வேலை பிடிக்கவில்லை என்றாலோ, ஒழுங்குக்குறைபாடு இருந்தாலோ, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கமிஷன் உங்களை வேலையை விட்டு நீக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி: உங்களுக்கு ரிசர்ச் மற்றும் டேட்டா அனாலிசிஸ் அனுபவம் இருந்தால், தாமதிக்க வேண்டாம். அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.

