- Home
- Business
- 8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? ஃபிட்மென்ட் ஃபாக்டர் மூலம் சம்பளம் எவ்வளவு உயரும்? முழு விவரம்!
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? ஃபிட்மென்ட் ஃபாக்டர் மூலம் சம்பளம் எவ்வளவு உயரும்? முழு விவரம்!
அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் படிகளை மாற்றி அமைக்க ஃபிட்மென்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்படுகிறது. இது அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தின் அளவைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஒரு காரணியாகும்.

8-வது ஊதியக் குழு
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள உயர்வு குறித்து ஆலோசித்து வருகிறது. மத்திய அரசு ஊழியர்கள் தங்களது சம்பள உயர்வு குறித்த புதிய தகவல்களுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், 'ஃபிட்மென்ட் ஃபாக்டர்' என்பது குறித்து புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது, புதிய சம்பள கமிஷன் ஒரு ஊழியரின் புதிய அடிப்படை சம்பளத்தைக் கணக்கிடப் பயன்படுத்தும் ஒரு பெருக்கல் எண் (multiplier) ஆகும். 8வது சம்பள கமிஷன், பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த ஃபிட்மென்ட் ஃபாக்டரை முடிவு செய்யும்.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் ஏன் முக்கியம்?
அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் படிகளை மாற்றி அமைக்க ஃபிட்மென்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்படுகிறது. இது அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தின் அளவைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஒரு காரணியாகும். பணவீக்கம், ஊழியர்களின் தேவைகள் மற்றும் அரசின் நிதி நிலைமை போன்ற பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டே ஃபிட்மென்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்படுகிறது.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் உங்கள் சம்பளத்தை எப்படி பாதிக்கும்?
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பு தற்போது 7வது சம்பள கமிஷனின் ஃபிட்மென்ட் ஃபாக்டரை அடிப்படையாகக் கொண்டது. இது 2016-ல் அமலுக்கு வந்தது. அப்போது, கமிஷன் 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரைப் பயன்படுத்தியது. ஆனால், இதன் அர்த்தம் சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்தது என்பதல்ல; மாறாக, இந்த எண்ணை அடிப்படை சம்பளத்துடன் பெருக்கி, குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இதற்கிடையில், ஒவ்வொரு புதிய சம்பள கமிஷன் தொடங்கும்போதும், அகவிலைப்படி (DA) பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். ஏனெனில், அடிப்படை குறியீடு மீண்டும் கணக்கிடப்படும். எனவே, 7வது சம்பள கமிஷனின் கீழ் உண்மையான சம்பள உயர்வு 14.3 சதவீதமாக இருந்தது.
அரசு ஊழியர்களின் 18 நிலைகள் என்னென்ன?
லெவல் 1: தொடக்க நிலை/குரூப் டி ஊழியர்கள்
லெவல் 2-9: குரூப் சி ஊழியர்கள்
லெவல் 10-12: குரூப் பி ஊழியர்கள்
லெவல் 13-18: குரூப் ஏ ஊழியர்கள்
குரூப் ஏ ஊழியர்களில் கேபினட் செயலாளர் உள்ளிட்ட உயர் மட்ட அரசு அதிகாரிகள் அடங்குவர்.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் கணக்கிடப்படுவது எப்படி?
8வது சம்பள கமிஷனின் சம்பள உயர்வைத் தீர்மானிப்பதில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இதுதான் மொத்த சம்பள உயர்வையும் தீர்மானிக்கும். இருந்த போதிலும் கடந்த சில மாதங்களாக ஃபிட்மென்ட் ஃபாக்டர் உயர்வு குறித்து உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. அரசு ஊழியர்கள், இது தொடர்பான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 8வது சம்பள கமிஷனின் கீழ் சம்பள உயர்வு பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படும்..
அரசு ஊழியர்களின் சம்பளம் இப்படி இருக்கலாம்
திருத்தப்பட்ட அடிப்படை சம்பளம் = தற்போதைய அடிப்படை சம்பளம் x ஃபிட்மென்ட் ஃபாக்டர்
ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்றாலும், மூன்று சாத்தியமான சூழ்நிலைகள் மற்றும் அதற்கேற்ப உங்கள் சம்பளம் எப்படி இருக்கலாம் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தால்...
லெவல் வரம்பு - அடிப்படை சம்பள வரம்பு (ரூபாயில்)
லெவல் 1 முதல் லெவல் 4 வரை: ₹46,260 முதல் ₹65,535 வரை
லெவல் 5 முதல் லெவல் 8 வரை: ₹75,044 முதல் ₹1,22,332 வரை
லெவல் 9 முதல் லெவல் 12 வரை: ₹1,36,467 முதல் ₹2,02,516 வரை
லெவல் 13 முதல் லெவல் 13A வரை: ₹3,16,367 முதல் ₹3,36,927 வரை
லெவல் 14 முதல் லெவல் 18 வரை: ₹3,70,594 முதல் ₹6,42,500 வரை
ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3 ஆக இருந்தால்...
லெவல் வரம்பு - அடிப்படை சம்பள வரம்பு (ரூபாயில்)
லெவல் 1 முதல் லெவல் 4 வரை: ₹54,000 முதல் ₹76,500 வரை
லெவல் 5 முதல் லெவல் 8 வரை: ₹87,600 முதல் ₹1,42,800 வரை
லெவல் 9 முதல் லெவல் 12 வரை: ₹1,59,300 முதல் ₹2,36,400 வரை
லெவல் 13 முதல் லெவல் 13A வரை: ₹3,69,300 முதல் ₹3,93,300 வரை
லெவல் 14 முதல் லெவல் 18 வரை: ₹4,32,600 முதல் ₹7,50,000 வரை
ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 ஆக இருந்தால்...
லெவல் வரம்பு - அடிப்படை சம்பள வரம்பு (ரூபாயில்)
லெவல் 1 முதல் லெவல் 4 வரை: ₹58,500 முதல் ₹94,900 வரை
லெவல் 5 முதல் லெவல் 8 வரை: ₹1,15,050 முதல் ₹1,82,325 வரை
லெவல் 9 முதல் லெவல் 12 வரை: ₹2,20,025 முதல் ₹2,56,100 வரை
லெவல் 13 முதல் லெவல் 13A வரை: ₹4,00,075 முதல் ₹4,26,075 வரை
லெவல் 14 முதல் லெவல் 18 வரை: ₹4,68,650 முதல் ₹8,12,500 வரை
சம்பளத்தில் என்னென்ன அடங்கும்?
ஒரு அரசு ஊழியரின் சம்பளத்தில் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA), மற்றும் பயணப்படி ஆகியவை அடங்கும். மொத்த வருமானத்தில், அடிப்படை சம்பளம் 51.5%, அகவிலைப்படி சுமார் 30.9%, வீட்டு வாடகைப்படி சுமார் 15.4% மற்றும் போக்குவரத்துப் படி சுமார் 2.2% ஆகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

