- Home
- Politics
- திருப்பரங்குன்றத்தில் முதல்வர் செய்தது சட்ட விரோதம்..! கர்நாடக முதல்வருக்கு நேர்ந்த கதி தெரியுமா..? வழக்கறிஞர் எச்சரிக்கை..!
திருப்பரங்குன்றத்தில் முதல்வர் செய்தது சட்ட விரோதம்..! கர்நாடக முதல்வருக்கு நேர்ந்த கதி தெரியுமா..? வழக்கறிஞர் எச்சரிக்கை..!
உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆணை தமிழக அரசின் ஆணையைக் கட்டுப்படுத்தாது. இந்த ஆணையை பிறப்பித்த தமிழக அரசின் தலைவர் யார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர்தான் காவல்துறையின் அமைச்சர். நிச்சயமாக அவர் நீதிமன்றத்தை அவதூறு செய்திருக்கிறார்.

‘‘நீதிமன்றத்தை அவதூறு செய்திருக்கிறார் முதல்வர். இப்போது நினைத்தால் கூட நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் நோட்டீஸ் அனுப்பி இரவோடு இரவாக ஸ்டாலினைஅவதூறு வழக்கில் ஆஜராக உத்தரவிடலாம். 100% அதற்கு அதிகாரம் இருக்கிறது’’ என எச்சரித்துள்ளார் வழக்கறிஞர் நளினி ஸ்ரீ
இது குறித்து அவர், “கார்த்திகை தீப வாழ்த்துக்கள் சொல்வதற்குக்கூட மனடு வலிக்கிறது. ஏனென்றால் மக்களுடைய வழிபாட்டு உரிமை முக்கியம் என்பதை புரிந்து கொள்ளாத ஒரு அரசு எப்படி இருக்க முடியும்? இதில் சனாதன தர்மத்தின் எதிர்ப்பை மட்டுமே வைத்துக் கொண்டு நீதிமன்றத்தின் உத்தரவையே அவமதித்து இருக்கிறார்கள். ராம ரவிக்குமார் என்பவர் திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் மலையில் காலம் தொட்டும் கார்த்திகை தீபம் ஏற்றி வருகிறோம். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எங்களுக்கு அனுமதி வேணும். பாதுகாப்பு வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தை அனுகினார். மதுரை நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து விசாரித்து அதையும் தாண்டி, அவர்கள் கொடுத்த பதில்களையும் விசாரித்து ஆராய்ந்து நீதிபதியே ஸ்பாட் ரிப்போர்ட் வாங்காமல் அவரே போய் பார்த்து தொல்பொருள் ஆராய்ச்சி, வரலாறுகளையெல்லாம் படித்து தெரிந்து கொண்டு அதன்பிறகு ஒரு ஆணையை பிறப்பித்தார்.
அது காலம் தொட்டு நடப்பதனால் சிக்கந்தர் மலை திருப்பரங்குன்றம் மலைதான். அந்த இடத்தில் தீபம் ஏற்றியதற்கான அடிப்படை சுவடுகள் எல்லாம் இருக்கிறது. மக்களுக்கு தீபம் ஏற்றுவதற்கான எல்லா முகாந்திரம் இருக்கிறது. அந்த இடட்தில் தீபம் ஏற்றலாம் என்று ஒரு ஆணையை பிறப்பித்தார். இந்த ஆணை பிறப்பித்தது நீதிமன்றம். நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை இவர்கள் நிறைவேற்றுவதுதான் ஒரு தமிழக அரசினுடைய கடமை. ஏனென்றால் அவர்களும் அதில் ஒரு மனுதாரராக வந்திருக்கிறார்கள். அவர்களது பதிலுரையை நிராகரித்தது உயர்நீதிமன்றம். எனவே அந்த ஆணையை நிறைவேற்றவேண்டியது தமிழக அரசின் கடமை.
இந்த தீர்ப்பால் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உடனே அவர்கள் இருவர் பென்சில் உடனே ஒரு மேலும் மேல்முறையீடு செய்து தடை அணை வாங்கி இருக்க வேண்டும். அதை செய்யாமல் இந்த ஆணையை பெற்றுக் கொண்ட அந்த அமைப்புகள் அந்த மலையில் வந்து தீபம் ஏற்றப்படும் போது அதை போலீஸார் தடுத்து நிறுத்துகிறார்கள். அப்போது அங்கே ஒரு தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. காவல்துறை செய்தது அவதூறு. அதற்கு தலைமை தாங்கி இருக்கிறார் தமிழக போலீஸ் டிஜிபி. எல்லாருமே இன்றைக்கு கோர்ட்டுக்கு பதில் சொல்லி ஆகவேண்டும். அந்தத்துறைக்கு பொறுப்பு அமைச்சர் யார்? முதலமைச்சர். அவரும் பதில் சொல்லியாக வேண்டும்.
உடனே இவர்கள் 144 தடை போட்டு இருக்கிறோம். அதனால் மேல போகக்கூடாது என்கிறார்கள். நான் இதில் சொல்ல விரும்புவது சட்ட ரீதியாக அரசியல் அமைப்பினால் உருவாக்கப்பட்டது நீதிமன்றங்கள். அரசியல் அமைப்பினால் உருவாக்கப்பட்டது சட்டமன்றங்கள், பாராளுமன்றங்கள். அரசியல் அமைப்பால் ஆக்குபடுவது மேதகு ஆளுநர், மேதகு குடியரசுத் தலைவர். அப்படி இருக்கும் பொழுது ஒரு உயர் நீதிமன்றத்தின் ஆணையை சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய நிர்வாகம் தடை செய்ய முடியாது. அது உயர்நீதிமன்ற ஆணையை ரத்து செய்ய முடியாது. இதுதான் முக்கியமான இறையாண்மையாக இருக்கிறது. இ இது பாமர மக்களுக்கு தெரியாது. அதனால் 144 தடையானை எந்த காலத்தில் இந்த நீதி அரசருடைய ஆணையை கட்டுப்படுத்தாது. அதுவே சட்ட விரோதமானது. அந்த ஆணை கட்டுப்படுத்தாது, இல்லீகள். அந்த ஆணையை பிறப்பித்தது நீதிமன்ற அவமதிப்பு.
இதற்கு உதாரணம் சொல்கிறேன். சில காலங்களுக்கு முன்பு மறைந்த கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்த பிறகும் அவர்கள் திறக்கவில்லை. திறக்காததற்கு காரணம் கேட்டு அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். அதற்கு விளக்கம் சோன அவர், ‘‘நாங்கள் தமிழகத்திற்கு நீர் திறந்து விட்டால் எங்களது விவசாயிகள் கிருஷ்ணராஜ சாகர் அணையில் குதிக்கிறேன் என்று காத்திருக்கிறார்கள். நான் எப்படி திறப்பது?’’ என கேட்டார். அதைக்கேட்ட நீதிமன்றம், அப்படியா? அவர்களையும் சேர்த்து கைது செய்கிறோம். ஏனென்றால் நீதிமன்ற ஆணை. உங்கள் அரசாங்க ஆணையை விட பெரியது. உங்களுக்கு அது தெரியுமா? என கேள்வி கேட்டார்கள். நாங்கள் உங்களை இப்போது கைது செய்யப் போகிறோம். கைது செய்தால் உங்கள் அரசு கவிழ்ந்து விடும். நீங்கள் குற்றவாளிகள். இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள். உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளீர்கள்’’ என கேட்டார்கள். உடனே அவர் போன் செய்து தண்ணீர் திறக்க வைத்தார். உடனே அவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தார்கள். இதே நிலைமைதான் இன்றைக்கு தமிழக அரசுக்கும் ஏற்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆணை தமிழக அரசின் ஆணையைக் கட்டுப்படுத்தாது. இந்த ஆணையை பிறப்பித்த தமிழக அரசின் தலைவர் யார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர்தான் காவல்துறையின் அமைச்சர். நிச்சயமாக அவர் நீதிமன்றத்தை அவதூறு செய்திருக்கிறார். இப்போது நினைத்தால் கூட நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் நோட்டீஸ் அனுப்பி இரவோடு இரவாக ஸ்டாலினைஅவதூறு வழக்கில் ஆஜராக உத்தரவிடலாம். 100% அதற்கு அதிகாரம் இருக்கிறது. பொது மக்களை காக்க வேண்டிய ஒரு அரசு கலவரத்தை உண்டாக்கி, சட்டம்- ஒழுங்கை சீர்குலைப்பது என்றால் இதை அவதூறாக பயன்படுத்தி, தானாகவே நீதிமன்றம் வழக்கு தொடரலாம். அதற்கு முகாந்திரம் உள்ளது’’ என எச்சரித்துள்ளார்.
