- Home
- Politics
- அவமானம்..! ஒண்டிக்கட்டை விஜய்க்கு திமுகவுடன் போட்டி போட என்ன தகுதி இருக்கிறது..? கொதித்தெழுந்த தனியரசு..!
அவமானம்..! ஒண்டிக்கட்டை விஜய்க்கு திமுகவுடன் போட்டி போட என்ன தகுதி இருக்கிறது..? கொதித்தெழுந்த தனியரசு..!
இதுவரை ஊடகத்தையே சந்திக்காத, சந்திப்பதற்கு அஞ்சுகிற உலகத்திலேயே ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது என்றால் அது தமிழக வெற்றிக்கழகம் மட்டும்தான்.

சுதந்திரத்திற்காக போராடிக்கூட 41 பேர் ஒரே இடத்தில் பலியானதாக தமிழ்நாட்டில் வரலாறு இல்லை. ஒரு சாதாரண விஜயின் முகத்தை பார்ப்பதற்காக அப்பாவி மக்கள் கொத்துக்கொத்தாய் 41 பேர் உயிரிழந்தது அவமானம் என கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு விமர்சித்துள்ளார்.
இதுகுறித்துப்பேசிய அவர், ‘‘பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 41 பேர் தன்னுடைய கண் எதிரே துடிதுடித்து இறந்த பொழுது இரக்கப்படாத அல்லது அந்த மக்களை காக்க வேண்டும் என்ற அக்கறை இல்லாத தன்னுடைய ரசிகர்களை தன்னுடைய தொண்டர்களை நாட்டு மக்களை நேசிக்காத விஜய் 35 நாட்களுக்கு பிறகு நேற்று சிறப்பு பொதுக்குழு என்கின்ற அளவில் ஒரு கூட்டத்தைக் கூட்டி அதிலும் வன்மத்தை, அவதூறை அரசின் மீதும், காவல்துறை மீதும் முதலமைச்சர் மீதும் அவதூறு கருத்துக்களை தொடர்ந்து அச்சமில்லாமல், கூச்சம் இல்லாமல் விஜய் பரப்புவது கண்டனத்துக்குரியது.
தமிழக வெற்றி கழகம், அதனுடைய தலைவர் விஜய், ஒரு அரசியல் கட்சியை தலைமை ஏற்று நடத்துகிற பக்குவத்தை இழந்து, மதி இழந்து தன்னுடைய கருத்து அல்லது கொள்கை அல்லது தத்துவம் எதையும் தொண்டர்களுக்கு கடத்தாமல், வெறும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசை வீழ்த்துவது மட்டும்தான் ஒரே நோக்கம் என்று சொல்லுகிற விஜய், திராவிட முன்னேற்ற கழகத்தை ஏன் வீழ்த்த வேண்டும்? என்று கூறாமல் தமிழக வெற்றி கழகத்துக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்கிறார். தமிழக வெற்றி கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் போட்டி என்றால் இன்று தமிழக வெற்றிகள் விஜயும் பொறுப்புக்கு வந்தால், ஆட்சிக்கு வந்தால், நாட்டில் என்ன மாறுதலை தரப்போகிறேன் என்று சொல்லவில்லை.
இதுவரை ஊடகத்தையே சந்திக்காத, சந்திப்பதற்கு அஞ்சுகிற உலகத்திலேயே ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது என்றால் அது தமிழக வெற்றிக்கழகம் மட்டும்தான். அறிவு சார்ந்த அரசியல் ஆய்வாளர்களோடு, விமர்சிகர்களோடு உரையாடலையே நடத்தாத, குடும்ப உறுப்பினர்களுடைய உறவை துண்டித்துக் கொண்டிருக்கிற விஜய், கட்சியினுடைய நிர்வாகிகளுடன் உறவாடாத விஜய், தனித்து வாழ்க்கையை வாழ்ந்து வாழ்வதில் சுகப்பட்டு கிடக்கிற விஜய், வெகுஜன மக்களை அரவணைத்து நாட்டில் மாற்றத்தை கொண்டு வந்து, இந்த ஜனநாயகம் சுதந்திரம், மக்களாட்சி தத்துவத்தின் மணிமகுடமாக இருக்கிற தமிழ்நாட்டில் தன்னுடைய அரசியலை, தன்னுடைய அதிகாரத்தை நிறுவுவதற்கு முயற்சிக்கிறேன் என்று சொல்லுவது பிழையானது.
ஒரு பால்வாடி குழந்தை போல, அங்கன்வாடி குழந்தை போல, எல்கேஜி- யுகேஜி குழந்தையை போல அந்த குழந்தைகளுக்கு இருக்கிற பொறுப்புணர்வு கூட இல்லாத விஜயால் தமிழக வெற்றிக்காக வருகின்ற கட்சிக்கு தலைமை ஏற்று வழிநடத்தவோ, அது தேர்தலில் வாக்குகளை பெற்று அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தில் இந்த மக்களை பாதுகாப்பாக வழி நடத்த முடியும் என்கின்ற அந்த நம்பிக்கை தமிழ்நாட்டில் இருக்கிற எட்டு கோடி மக்களுக்கும் எவரொருவருக்கும் இல்லை. திரையில் தலைவனை தேடுவது தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. நடிகர்கள் அரசியல் கட்சிக்கு வந்தால் நாட்டை ஆள வந்தால், நாட்டில் எவ்வளவு பெரிய நெருக்கடி ஏற்படும் என்பதற்கு சான்று விஜய்.
சுதந்திரத்திற்காக போராடிக்கூட 41 பேர் ஒரே இடத்தில் பலியானதாக தமிழ்நாட்டில் வரலாறு இல்லை. ஒரு சாதாரண விஜயின் முகத்தை பார்ப்பதற்காக அப்பாவி மக்கள் கொத்துக்கொத்தாய் 41 பேர் உயிரிழப்பு அவமானம். ஒரு அறியாமை, மூடத்தனம். ஒரு ஆதிவாசிகள் காட்டுவாசிகளுக்கு இருக்கிற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாத அளவுக்கு இந்த மக்கள் திரையில் இருக்கிற நடிகர்களை நம்புகிற போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என அவர் தெரிவித்தார்.