விஜய் இஸ் தி ஸ்பாய்லர்..! தவெக கூட்டணிக்கு வராததால் பியூஸ் கோயல் ஆத்திரம்..!
விஜய்க்கு தமிழகத்தில் உள்ள வாக்கு சதவிகிதம், அவருக்கு தமிழகத்தில் இளைஞர்கள், பெண்கள், மக்களிடையே உள்ள ஆதரவு, அவருடைய கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இடையே ஒன்றரை மணிநேரமாக நடந்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.
அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி பங்கேற்றனர். பாஜக தரப்பில் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் பேசி பியூஸ் கோயல், “எனது நண்பரும், சகோதரருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் மகிழ்ச்சி. 2026 தேர்தலை மோடியின் வழிகாட்டுதலுடன் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்’’ எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று ஆலோசனை செய்தோம். வரும் 2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் எனத் தெரிவித்தார்.
சென்னையில், பாஜக மையக்குழு கூட்டத்தில் பேசிய பியூஷ் கோயல் விஜய் இஸ் தி ஸ்பாய்லர் (ஆட்டத்தை குலைப்பர்) எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தவெக வாக்குகளால் தே.ஜ.கூட்டணிக்கு பாதிப்பு இல்லாத வகையில் பணியாற்ற வேண்டுமென்றும் கோயல் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
முன்னதாக காலை நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டத்தில் விஜய் குறித்து முதலாவதாக விரிவாக பேசப்பட்டு உள்ளது. விஜய் என்.டி.ஏ கூட்டணிக்கு வருவது பற்றி கேட்டறிந்துள்ளார் பியூஸ் கோயல். அப்போது, விஜய் தரப்பிடம் கூட்டணிக்கு பல வகைகளில் அழைத்ததாகவும், அவர் பாஜக கொள்கை எதிரி எனக் கூறி, திமுக, பாஜகவுடன் கூட்டணிக்கு வருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் என்கிற தகவலை மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் எடுத்துக் கூறி உள்ளனர்.
விஜய்க்கு தமிழகத்தில் உள்ள வாக்கு சதவிகிதம், அவருக்கு தமிழகத்தில் இளைஞர்கள், பெண்கள், மக்களிடையே உள்ள ஆதரவு, அவருடைய கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது. அவர் அதிமுக, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரப்பட்ட பியூஸ் கோயல், அவர் இல்லாமல், அதிமுக -பாஜக கூட்டணி வெற்றிபெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். தமிழகட்டில் நமது கூட்டணி திமுகவை வென்றே ஆக வேண்டும்’’ என அறிவுறுத்தி உள்ளார்.
