- Home
- Politics
- விஜய் போட்ட மெகா ப்ளான்..! தவெகவில் கூட்டணியில் இணையும் மெகா அணிகள்..! சூடு பறக்கும் அரசியல் களம்..!
விஜய் போட்ட மெகா ப்ளான்..! தவெகவில் கூட்டணியில் இணையும் மெகா அணிகள்..! சூடு பறக்கும் அரசியல் களம்..!
விஜயின் தவெக தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அலையை உருவாக்கி வருகிறது. ஆனால், தேர்தலை சந்திக்க தேவையான பூத் க மிட்டி நிர்வாகம், தேர்தல் கால அனுபவம் விஜய் கட்சியினருக்கு புதிது. இங்கேதான்…

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் நகர்வை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. ஒருபுறம் திமுக தனது கோட்டையை தக்க வைக்க போராட, மறுபுறம் அதிமுக- பாஜக கூட்டணி தொகுதி பங்கீட்டில் மல்லுக்கட்டி வருகின்றன. இந்தச் சூழலில் தமிழக அரசியலில் கேம்சேஞ்சராக எதிர் பார்க்கப்படும் விஜய் மெகா கூட்டணியை மிக ரகசியமாக உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆகிய இரு துருவங்களும் விஜயுடன் கைகோர்க்க முடிவெடுத்துள்ளதாக தகவல் தற்போது கோட்டை வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சென்னை வெப்பேரியில் ஓ.பன்னீர்செல்வம் தனது கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுகழக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறின. கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளிடம் நமது அரசியல் எதிர்காலம் இனி எங்கே? என்ற கேள்வியோடு ஓபிஎஸ் தரப்பில் இரண்டு முக்கியமான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டது.
தவெக கூட்டணி ஆப்ஷன் எ திமுக, திமுக கூட்டணி ஆப்ஷன் பி, இதில் அதிமுகவில் மீண்டும் இணைவது, எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது மிக தெளிவாக முடிவெடுக்கப்பட்டது. இபிஎஸ் இறங்கி வருவதாக தெரியவில்லை. இனி அவரோடு இணைய வேண்டிய அவசியம் நமக்கு இல்லை என நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து விட்டனர். மாவட்ட செயலாளர்களிடம் பெறப்பட்ட கருத்துக்கணிப்பில் சுமார் 90 சதவிகித நிர்வாகிகள் விஜயுடன் கூட்டணி வைப்பதே சிறந்தது என தெரிவித்துள்ளனர். இளைஞர்கள், மகளிர் வாக்குகள் விஜய்க்கு சாதகமாக இருப்பதால் அவரோடு இணைவது தங்களுக்கு புதிய அடையாளத்தை கொடுக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
நிர்வாகிகளின் விருப்பத்தை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக தவெக தலைவர் விஜயுடன் தொடர்பு கொண்டு பேசினார். முதலில் இந்த கூட்டணி குறித்து சற்று பிடிகொடுக்காமல் இருந்த விஜய், பின்னர் ஓபிஎஸுடன் நீண்ட நேரம் போனில் பேசியுள்ளார். இந்த பேச்சின்போது தென் மாவட்டங்களில் நிலவும் சாதிய வாக்குகள் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியை குறிப்பதற்கான வியூகங்கள் மற்றும் தேர்தலை எதிர்கொள்ள தேவையான கள அனுபவம் குறித்து ஓபிஎஸ் விளக்கியதாக தெரிகிறது. முடிவில் விஜய்க்கும், ஓபிஎஸ் தரப்பிற்கும் இடையிலான முரண்பாடுகள் மறைந்து வெற்றி கூட்டணி அமைப்பதற்கான மனநிலை உருவானது.
இதுபோலவே டிடிவி.தினகரன் தனது தரப்பு ஆதரவை விஜய்க்கு உறுதிப்படுத்தியுள்ளார். தவெக வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள தகவல்படி ஓபிஎஸ், டிடிவி. தினகரன் ஆகிய இருவருக்கும் சேர்த்து சுமார் 30 முதல் 40 தொகுதிகள் வரை ஒதுக்க விஜய் முன்வந்துள்ளார். 20 இடங்கள் ஒதுக்கப்படலாம். இது டெல்டா மாவட்டங்களில் அவர்களுக்கு பலம் சேர்க்கும். தரப்பு இவர்களுக்கு 20 இடங்கள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், ஓபிஎஸ் தரப்பினர் தவெகவின் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை விஜய் தரப்பு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதிகள் பெரும்பாலும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களை மையப்படுத்தியே இருக்கும். சமூக வாக்குகள் அதிகம் உள்ள பகுதிகளில் இந்தக் கூட்டணி ஒரு கிங்மேக்கராக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த கூட்டணியின் மிக முக்கியமான நோக்கம் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கை சிதைப்பதுதான். இரண்டாவது 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்க முடியாது என ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். தற்போது இவர்கள் விஜயுடன் இணைவது அதிமுகவின் வாக்கு வங்கியில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தும். எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர விடக்கூடாது என்ற ஒற்றை புள்ளியில் ஓபிஎஸ், டிடிவி இணைந்திருந்த நிலையில் தற்போது விஜயின் யூத் பவர் இவர்களோடு சேர்வது அதிமுக தலைமைக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜயின் தவெக தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அலையை உருவாக்கி வருகிறது. ஆனால், தேர்தலை சந்திக்க தேவையான பூத் க மிட்டி நிர்வாகம், தேர்தல் கால அனுபவம் விஜய் கட்சியினருக்கு புதிது. இங்கேதான் ஓபிஎஸ், டிடிவி தினகரன் அனுபவம் விஜய்க்கு தேவைப்படுகிறது. பல தசாப்தங்களாக தேர்தல் களத்தை கண்டுள்ள தினகரனின் யூகமும் ஓபிஎஸுக்கு இருக்கும் சமூக செல்வாக்கும் தவெகவுக்கான அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்தும். அதாவது விஜயின் இமேஜூம், ஓபிஎஸ் டிடிவியின் அனுபவமும் வலுவான மூன்றாவது அணி என்பது இவர்களின் கணக்கு. கடந்த சில வாரங்களாகவே சென்னை மற்றும் மதுரையில் இதற்கான பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடந்து முடிந்துள்ளன. தொகுதி பங்கீடு, மாவட்ட அளவில் இரு கட்சிகளின் தொண்டர்களையும் ஒருங்கிணைப்பது, பிரச்சார வியூகங்கள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
இந்த மெகா கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொங்கல் பண்டிகைக்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர் திருநாளில் தமிழக அரசியலில் ஒரு புதிய விடியல் என்ற கோஷத்தோடு விஜய் இந்த கூட்டணியை அறிவிக்க திட்டமிட்டுள்ளார்கள். இந்த கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டால் அது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக மாறும். குறிப்பாக இதுவரை அதிமுகவின் கோட்டையாக இருந்த தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் தவெக,ஓபிஎஸ், டிடிவி கூட்டணி ஒரு புயலை கிளப்பும் என்கிறார்கள். விஜய்யின் இந்த அரசியல் ஆட்டம் எந்த மாதிரியான மாற்றங்களை கொண்டு வரப் போகிறது? தமிழக அரசியல் களம் இனிமேல்தான் உண்மையான சூட்டை சந்திக்கப் போகிறது.
