விஜய்க்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி..! தவெக மாநாடு தொடங்கும் நேரம் திடீர் மாற்றம்..!
தவெக மாநாட்டில் 224 பேர் வரை மயக்கம், தலைசுற்றல் காரணமாக முதலுதவி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாநாடு நடக்கும் இடத்தில் வெயில் வாட்டி வதைப்பதால் தரை விரிப்புகளை எடுத்து நிழலுக்கு தொண்டர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2வது மாநில மாநாடு, மதுரையில் உள்ள தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பாரபத்தியில் நடக்கிறது. சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டதோடு, மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முடிவடைந்து விட்டன. ஆகஸ்ட் 21ஆம் தேதியான இன்று, மதியம் 3.30 மணியளவில் மாநாடு தொடங்குகிறது. மாநாட்டு திடலில், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்று குறிப்பிட்டு, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அண்ணா மற்றும் கட்சித்தலைவர் விஜய் ஆகியோரது படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சக்கணக்கானோர் வந்திருக்கின்றனர்.
விஜய், மாநாடு ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே வர இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த முறை விஜய் கட்சிக்கூட்டம் நடத்திய போது தடுப்புக்கு போடப்பட்டிருந்த கம்பிகளை தாண்டி தொண்டர்கள் ஏறி வர ஆரம்பித்தனர். இதில் பலருக்கு அடிப்பட்டது. இதை தடுக்க, அந்த கம்பிகளில் க்ரீஸ் பூசப்பட்டு இருக்கிறது. அதே போல, இந்த முறை தண்ணீர் குடிப்பதற்காக நேரடியாக நிலத்தில் பைப் போட்டு கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ வசதிக்கு ஆம்புலன்ஸ், பாதுகாப்புக்கு காவல்துறை என்று பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தவெக மாநாட்டில் 224 பேர் வரை மயக்கம், தலைசுற்றல் காரணமாக முதலுதவி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாநாடு நடக்கும் இடத்தில் வெயில் வாட்டி வதைப்பதால் தரை விரிப்புகளை எடுத்து நிழலுக்கு தொண்டர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பலர் வாகனங்களுக்கு அடியில் அமர்ந்துள்ளனர், தற்போதைய நிலவரப்படி 200க்கும் மேற்பட்டோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ORS வாட்டர், மாத்திரை கொடுத்து மருத்துவக்குழுவினர் முதலுதவி செய்து வருகின்றனர்.
குடி தண்ணீர் இல்லாமல் வெயிலின் தாக்கத்தால் மயங்கிய 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலுதவி அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் 12 பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தவெக மாநாட்டு திடலில் வெயிலின் சூட்டைத் தணிக்க ட்ரோன் மூலம் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. தவெக மாநாடு நடைபெறும் பாரபத்தியில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பம் பதிவாகி உள்ளது. கொளுத்தும் வெயிலிலும் விஜய்யை காண தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தொண்டர்கள் வெயிலில் துவண்டு விழும் நெருக்கடிகளால் விஜய் திட்டமிடப்பட்டு இருந்த நேரத்திற்கு முன்பே 3 மணிக்கே விழாவில் கலண்நு கொண்டு 7 மணிக்கு நிகழ்ச்சியை முடிக்கத் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.