- Home
- Politics
- விஜய் அண்ணா நான் பேசியதெல்லாம் தப்பு.. என்னை மன்னிச்சிருங்க..! திடீரென தவெக பக்கம் சாய்ந்த வீரலட்சுமி..!
விஜய் அண்ணா நான் பேசியதெல்லாம் தப்பு.. என்னை மன்னிச்சிருங்க..! திடீரென தவெக பக்கம் சாய்ந்த வீரலட்சுமி..!
அந்த விமர்சனத்துல உங்களை வந்து நான் தனிப்பட்ட முறையில உரிமையில் பேசினதுக்கும், உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒரு மேல பேசுனதுக்கும் இந்த நேரத்துல அண்ணன் விஜய் அவர்கள் கிட்ட நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கூறுகிறேன்.

தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் நிறுவனரும், தலைவருமான கி,வீரலட்சுமி சமீபகலாமக தவெகவை பற்றியும் அக்கட்சியின் தலவர் விஜய் குறித்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை வீரலட்சுமி கடுமையாக விமர்சித்துள்ளார். வீரலட்சுமி, தமிழர் முன்னேற்றப்படை தலைவராக, இச்சம்பவத்தின் மீது காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். விஜய் மீது யாரும் அவதூறு பரப்பவில்லை. நடந்ததைதான் விமர்சிக்கிறார்கள் எனக் கூறினார்.
"ஒரு பெண்ணான நானே போராடிய நிலையில் விஜய் ஏன் அங்கிருந்து ஓடி ஒளிந்தார்? கரூர் சம்பவம் அவரால்தான் நடந்தது. விஜய் ஓடி ஒளிவதாக விமர்சித்தார். விஜய் ரசிகர்களை குறிப்பாக பெண்களை கடுமையாக எச்சரித்து, "விஜய் ரசிகர்களுக்கு பொண்ணு கொடுக்காதீங்க காதலிக்காதீங்க" என்று அறிவுரை வழங்கினார். இது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மனம்மாறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வீரலட்சுமி, ‘‘உங்கள வந்து நான் அரசியல் ரீதியா கருத்தியல் ரீதியா விமர்சனம் செய்றதுல தவறு ஏதும் இல்ல. ஆனா அந்த விமர்சனத்துல உங்களை வந்து நான் தனிப்பட்ட முறையில உரிமையில் பேசினதுக்கும், உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒரு மேல பேசுனதுக்கும் இந்த நேரத்துல அண்ணன் விஜய் அவர்கள் கிட்ட நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கூறுகிறேன்.
ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம் மோவூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி சௌமியா என்ற உங்களுடைய தீவிர ரசிகை 75 சதவீதம் தீக்காயங்களோட உங்ககிட்ட உதவி கேட்டிருந்தாங்க. காணொளி வாயிலாக அந்த தங்கையின் சார்பாக நாங்கள் உங்களுக்கு எங்களுடைய அமைப்பு சார்பாக ஒரு கோரிக்கை வைத்தோம். ஆனால் உரிய நேரத்துல அந்த குழந்தைக்கு நீங்க உதவவில்லை. அதனால் அந்த தங்கை வந்து இறந்துட்டாங்க. அதுவும் என் கண் முன்னே இறந்தது இனிமே எந்த ஒரு பெண்ணுக்கும் இதுபோல ஒரு நிலைமை என்னைக்குமே வரக்கூடாது என்று அன்னைக்கே நினைச்சேன்.
இரண்டாவதாக இன்னைக்கு தற்போது சென்னை ரிப்பன் பில்டிங் எதிர்ல ஒரு அன்னசத்திரம் கட்டியிருப்பாங்க. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக கட்டி இருந்த அன்ன சத்திரத்துடைய வகையறாக்கள். இன்னைக்கு அந்த குடும்பத்தை சேர்ந்த அந்த தாயும் உங்களோட தீவிர ரசிகருமானஅந்த தாயுடைய பையன். அவரும் உங்க மேல பித்து, உங்க மேல பைத்தியம். கணவனால் கைவிடப்பட்ட குடும்பம் அது. தாயுடைய மகன் இன்னைக்கு கல்லூரியில் கல்வி கட்டண கட்ட முடியாம இன்னைக்கு அவமானப்பட்டு இன்னைக்கு தேர்வு எழுத முடியாமல் நிற்கதையா நிக்கிறாங்க.
உங்களுடைய ரசிகர். உங்களுக்கு இந்த ஒரு கோரிக்கை முன்வைக்கிறேன். உங்களுடைய ரசிகர் அந்த இளைஞனை உங்க இயக்கத்தின் சார்பாக அண்ணன் விஜய் அவர்கள் வந்து அந்த கல்வி கட்டணத்தை கட்டி. அந்த இளைஞரை படிக்க வைக்கணும். இந்த நேரத்தில் கோரிக்கை விடுகிறேன். அவங்களுடைய குடும்பத்தாருடைய எதிர்காலத்தை கருதியும். அந்த இளைஞனுக்கும் உதவ வேண்டும். இந்த காணொளியில் அவங்க சம்பந்தப்பட்ட தகவல்களை நான் சொல்ல விரும்புகிறேன். அவங்க இருக்கக்கூடிய மாவட்டத்தில் உங்களுடைய தமிழக வெற்றி கழகத்துடைய மாவட்ட செயலாளர் அவர்களை அணுக வேண்டும். அவர்கள் மூலமாக உடனடியாக அந்த இளைஞனுடைய, உங்களுடைய ரசிகருடைய அந்த கல்வி கட்டணத்தை கட்டி அவங்க தேர்வு எழுதி மேற்கொண்டு பட்டம் மேற்படிக்க உதவ வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார் வீரலட்சுமி.