- Home
- Politics
- வாட்ஸ்அப்பை டெலிட் செய்து எஸ்கேப் ஆன தவெக நிர்வாகிகள்.. மக்களின் சாபத்தை வாங்கிய விஜய்..
வாட்ஸ்அப்பை டெலிட் செய்து எஸ்கேப் ஆன தவெக நிர்வாகிகள்.. மக்களின் சாபத்தை வாங்கிய விஜய்..
கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். விஜய் நிவாரணம் அறிவித்த போதிலும், உள்ளூர் தவெக நிர்வாகிகள் தலைமறைவானது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக நிர்வாகிகள் தலைமறைவு
கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தவெக தலைவர் விஜய், ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் மற்றும் காயமடைந்தோருக்கு ரூ. 2 லட்சம் வழங்கும் என்று உத்தரவு அறிவித்தார். "இந்தத் தொகை இத்தனை பெரிய இழப்புக்கு சிறியது என்பது எனக்குத் தெரியும். ஆனால் மனதின்மேல் நிற்க என் கடமை" என்று அவர் கூறினார்.
விஜய் கரூர் பேரணி
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்திக்காமல் தவெக உள்ளூர் தலைவர்கள் காணாமல் போன சம்பவம் உள்ளூர் மக்களிடம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. தவெக நிர்வாகிகள் பலர் பயந்துபோய் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வாட்ஸ் அப் குழுவை விட்டு வெளியேறி தப்பி ஓடியுள்ளனர் என்று கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தவெக கட்சியின் நிலை குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
கரூர் மாவட்ட செயலாளர்
கரூர் மாவட்ட அலுவலகம் சனிக்கிழமை இரவு முதலே பூட்டப்பட்ட நிலையில், மாவட்ட செயலாளர் வி.பி. மதியழகன் உட்பட முக்கிய நிர்வாகிகள் தொலைபேசிக்கு பதில் அளிக்கவில்லை. மதியழகனின் மனைவி சம்பவத்தில் காயமடைந்தார். பல கட்சியினர் போலீஸ் வழக்குகளுக்கு பயந்து, திமுக ஆதரவாளர்களின் கோபத்தையும் எதிர்கொள்ளும் பயம் காரணமாக, கட்சி தலைவர்கள் மறைந்தனர். கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். இதில் 17 பெண்கள், 9 குழந்தைகள் உள்ளனர். மக்கள் இடம் பிடிக்க முடியாமல் தள்ளப்பட்டனர். சிலர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். மரக்கிளைகள் உடைந்து விழுந்தாலும் சிலர் காயமடைந்தனர்.
தவெக மீது மக்கள் அதிருப்தி
உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைகளில் உறவினர்கள் கதறி அழுத காட்சிகள் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின. விஜயை பார்க்க வந்து இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குடும்பத்தினர் விஜயின் மீதும், தவெக கட்சி மீதும் மிகவும் கோபமாகவும், அதிருப்தியாகவும் இருக்கின்றனர் என்று அவர்களது பேட்டி வாயிலாக தெரிகிறது.
விஜய்க்கு எதிராக குவியும் குற்றச்சாட்டுகள்
உங்களை பார்க்க வந்த நபர்கள் மருத்துவமனையில் இருக்கும் போது, நீங்களோ அல்லது 2ம் கட்ட தலைவர்களோ அல்லது மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளோ யாருமே மருத்துமனை சென்று பார்க்கவில்லை. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக என அனைத்து கட்சி தலைவர்களும் பாதித்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். ஆனால் விஜயோ சென்னை சென்று பனையூர் வீட்டில் பதுங்கி கொண்டாரே? என்று பல கேள்விகள் பொதுமக்களிடம் உள்ளது. இதற்கு பதில் சொல்வாரா? இதற்கு பொறுப்பு யார்? உங்களின் மனிதாபிமான தன்மை இதுதானா? ஒரு பிரச்னை என்றால் உடனே ஓடிவிடுவதா? பல கேள்விக்கணைகள் நடிகர் விஜயை நோக்கி உள்ளது.