- Home
- Politics
- ஐயா அரசியல் மேதைகளே... மக்களுக்கு இதைத்தான் செய்யப்போகிறேன்... நாமக்கல்லில் லிஸ்ட் போட்ட விஜய்..!
ஐயா அரசியல் மேதைகளே... மக்களுக்கு இதைத்தான் செய்யப்போகிறேன்... நாமக்கல்லில் லிஸ்ட் போட்ட விஜய்..!
நான் தெரியாமல் தான் கேட்கிறேன் இந்த பாஜக அரசு தமிழகத்திற்கு என்னதான் செய்தது? நீட்டை ஒழிச்சிட்டாங்களா? கல்விக்கு தேவையான நிதியின் முழுமையாக கொடுத்துட்டாங்களா? இல்லை தமிழ்நாட்டுக்கு தேவையான எல்லா விஷயம் செஞ்சுட்டாங்களா?

நாமக்கல்லில் மக்களைச் சந்தித்த விஜய் சரியாக 8 நிமிடங்கள் பேசினார். அப்போது ஆளும் திமுகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். கிட்னி திருட்டு குறித்தும் திமுக மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இது குறித்து அவர், ‘‘திமுகவுக்கு சொந்தமான ஒரு மருத்துவ கல்லூரியில் நடக்கிற கிட்னி திருட்டு. அதுதான் நாடறிந்த விஷயம் ஆச்சே... அதைப்பற்றி நான் பேசி இருந்தேன். அதில் நாமக்கல் பகுதியை சேர்ந்த மக்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அதிலும் குறிப்பாக விசைத்தறையில் வேலை செய்யும் பெண்களை குறி வைத்து நடந்திருப்பதாக சொல்கிறார்கள். இதில் ஈடுபட்டவங்க யாராயிருந்தாலும் நம்ம ஆட்சி அமைந்ததும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இந்த கிட்னி திருட்டுக்கு ஆரம்பம் எங்கிருக்கிறது என்று பார்த்தீர்கள் என்றால் கந்துவட்டி கொடுமையில் இருக்கிறது.
அதாவது விசைத்தறி தொழிலாளர்களை வாழ்க்கை தரத்தை, பொருளாதாரத்தை ஏமாற்றும் இந்த திமுக அரசு அவர்களை கிட்னியை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இது எவ்வளவு பெரிய ஒரு கொடுமை. விசைத்தொழிலார்களின் வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும். ஒரே விஷயத்தை தான் மக்கள் ரிப்பீட்டாக நம்மிடம் சொல்கிறார்கள். அடிப்படை சாலை வசதி, குடிக்க நல்ல குடிநீர், ஒரு நல்ல மருத்துவ வசதி இல்லை. நல்ல டாக்டர் இல்லை. பெண்கள் பாதுகாப்பு இதைத்தான் அவர்கள் கேட்கிற இந்த அடிப்படை விஷயங்கள். அவர்கள் பெரிதாக எதையும் கேட்கவில்லை. என்னப்பா, இந்த விஷயத்தை எங்கே போனாலும் கேள்வியாக கேட்கிறார்கள். இவர் வந்தால் என்ன செய்வார் என்று கேட்டபோது அதற்கான விளக்கத்தை சொல்லும் சொல்கிறேன்.
கல்வி, ரேஷன் அடிப்படை, மின்சாரம், போக்குவரத்து, பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு என்று இந்த மாதிரி அடிப்படை விஷயங்களை எந்த சமரசம் செய்யாமல் சரியாக செய்யப்படும் என்று சொன்னோம். இதைத்தானே எல்லோரும் சொன்னார்கள். அதை தான் அனைவரும் சொல்கிறார்கள். இவர் என்ன புதுசா சொல்லி விட்டார்? புதிதாக ஏதும் சொல்லவில்லையே என்கிறார்கள். ஐயா அரசியல் மேதைகளே... பெரியவர்களே ஒரு மனிதனுக்கு சாப்பிடுவதற்கு நல்ல சோறு, படிக்கிறதுக்கு நல்ல கல்வி, குடிக்கிறதுக்கு நல்லது குடிநீர். அவனைப் பார்த்துக் கொள்வதற்கு மருத்துவ வசதி வேண்டும்.
மற்ற இடத்திற்கு சென்று வர நல்ல போக்குவரத்து, அதற்கான சாலை, பாதுகாப்பான வாழ்க்கை. இதுதானே ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை. இன்னைக்கும் இதை நாம் நமக்கு எல்லோருக்கும் தேவைதானே. அப்புறம் அதை சரியாக செய்வோம் என்று சொல்வது தானே சரி. அதனால்தான் சொன்னோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ, அதை மட்டும் தான் சொல்லுவோம். எது உண்மையோ அதைத்தான் சொல்வோம், செய்வோம். இந்த திமுக மாதிரி பொய்யான வாக்குறுதிகளை எப்போதும் கொடுக்க மாட்டோம்.
புதுசா சொல்லுங்க எனக் கேட்கிறார்கள். புதுசா என்ன புதுசா..? தப்பா சொல்லவா? செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும், காற்றில் கல்வீடு கட்டுப்படும். அமெரிக்காவுக்கு ஒற்றையடி பாதை போடப்படும். வீட்டுக்கு உள்ளேயே ஏரோபிளேன் ஓட்டப்படும் இந்த மாதிரி அடிச்சு விடுவோமா? நம்ம சிஎம் அளவிற்கு அதிகமா அடிச்சு விடுவார். அதே மாதிரி அடித்து விடுவோமா? நம்ம அம்மான்னு சொல்லிக்கிட்டு ஜெயலலிதா சொன்ன அந்த விஷயத்தை மறந்து விட்டு ஒரு பொருந்தா கூட்டணியாக ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு, தமிழ்நாட்டோட நலனுக்காக இந்த பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாக சொல்லும் அவர்களைப் போலவும் நாம் இருக்க மாட்டோம்.
நான் தெரியாமல் தான் கேட்கிறேன் இந்த பாஜக அரசு தமிழகத்திற்கு என்னதான் செய்தது? நீட்டை ஒழிச்சிட்டாங்களா? கல்விக்கு தேவையான நிதியின் முழுமையாக கொடுத்துட்டாங்களா? இல்லை தமிழ்நாட்டுக்கு தேவையான எல்லா விஷயம் செஞ்சுட்டாங்களா? அப்புறம் எதுக்காக இந்த சந்தர்ப்பவாத கூட்டணி? என நான் கேட்கவில்லை, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் உண்மையான தொண்டர்கள் அவர்கள் கேட்கிறார்கள்.
சரிப்பா அவங்க கூட்டு, பொரியல், அப்பளம் என எது வேண்டுமானலும் விற்கட்டும். நமக்கு எதற்கு மக்களே. இன்னொரு ஒரு முக்கியமான விஷயம், கவனமாக கேளுங்கள். அதிமுக பாஜக நேரடி உறவுக்காரர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அவங்களோட கூட்டணி மேல மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதும் மக்களுக்கு தெரியும். ஆனால், அடுத்த சேம் டைம் இந்த திமுக குடும்பம், இந்த பாஜகவுடன் மறைமுக உறவுக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை தயவு செய்து மறக்காதீர்கள்.
வரப்போற தேர்தலில் நீங்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டீர்கள் என்றால் அது பாஜகவுக்கு ஓட்டு போட்டது போல். வெளியில் அடித்துக் கொள்ற மாதிரி அடித்துக் கொள்வார்கள். ஆனால் உள்ளுக்குள் வேணாம் மக்களே... ஜாக்கிரதை. யோசிங்க. அதனால் திரும்ப சொல்கிறேன் 2026-ல் ஒன்று மாபெரும் மக்கள் சக்தி கொண்ட டிவிகேவுக்கும், கொள்கை என்ற பெயரில் மக்கள் ஏமாற்றிக் கொண்டு மக்களை ஏமாற்றுகிற இந்த திமுக இந்த ரெண்டே ரெண்டு பேருக்கும் தான் போட்டி.
இப்படி ஒரு மோசமான ஒரு ஆட்சியை கொடுக்கிறார்களே, இந்த திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? மறுபடியும் ஆட்சி அமைக்கணுமா? இப்ப ஆட்சி அமைக்க வேண்டுமா? என கேட்கிறேன். நண்பா, நண்பி, தோழா, தோழி... என் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? என்னை இவ்வளவு நம்புகிறீர்களா? பார்த்திடலாம்... ஒரு கை பார்த்து விடலாம். சத்தியமாக சொல்கிறேன் நான் ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி என்னமோ ஏதோ என்று நினைத்தேன். பார்த்துவிடலாம் சத்தியமாக பார்த்துவிடலாம். நம்பிக்கையாக இருங்கள் மக்களே நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்’’ எனத் தெரிவித்தார்.
