- Home
- Politics
- திருமாவளவனின் வெறியாட்டம்..! இதுதான் ஒரு நல்ல தலைவருக்கான பண்பா..? தாக்கப்பட வழக்கறிஞரின் குமுறல் வீடியோ..!
திருமாவளவனின் வெறியாட்டம்..! இதுதான் ஒரு நல்ல தலைவருக்கான பண்பா..? தாக்கப்பட வழக்கறிஞரின் குமுறல் வீடியோ..!
ஒரு தலைவர் தவறு செய்து விட்டால் பொது வெளியில் வந்து பகிரங்கமாக வருந்துவது, மன்னிப்பு கேட்பதையும் எல்லோரும் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த விஷயத்தில் தொல். திருமாவளவன் இப்படி நடந்து கொண்டது வருத்தமாக இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் விசிக கட்சியினரால் கடந்த மாதம் 7ம் தேதி தாக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, திருமாவளவனின் செயல்பாடுகளை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘நான் ராஜீவ் காந்தி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறேன். அக்டோபர் 7-ம் தேதி தாக்கப்பட்ட வழக்கறிஞர் நான் தான். விசிக கட்சியினர் என்னைப் பற்றி சோசியல் மீடியாக்களில் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். அதற்கு விளக்கம் கொடுக்கத்தான் இந்த வீடியோ. அக்டோபர் 7ஆம் தேதி எனது அடையாள அட்டையை வாங்குவதற்காக பார் கவுன்சிலிற்கு வந்தேன். நான் ஓட்டிக்கொண்டு வந்த வண்டி ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கும்போது எனக்கு பின்னாடி வந்த வண்டி ஒன்று இடித்தது.
ஏன் இடித்தீர்கள் பார்த்து வர மாட்டீர்களா? என்று கேட்டபோது அவர்கள் பதில் சொல்லவில்லை. நான் வண்டியை நிறுத்திவிட்டு சென்று கேட்கும் போது உள்ளே திருமாவளவன் இருந்ததால் நான் திருப்பி விட்டேன். இறங்கி வந்து என்னை தாக்க ஆரம்பித்தார்கள். என் வண்டியை தள்ளிவிட்டு சாலையில் போட்டு தாக்கினார்கள். கும்பலாக சேர்ந்து என்னையும் தாக்கினார்கள். அங்கிருந்த காவல்துறையினர் பாதுகாப்பிற்காக என்னை பார் கவுன்சிலர்கள் போகுமாறு சொன்னார்கள். நான் பார் கவுன்சிலுக்குள் ஓடி விட்டேன். பார் கவுன்சிலுக்கு உள்ளேயும், வெளியேயும் என்னை தாக்கினார்கள்.
பொதுமக்கள் மத்தியில் அடிப்பதற்கு சட்டத்தில் இடம் கிடையாது. தனிநபரான என்னை கூட்டமாக சேர்ந்து தாக்கினீர்கள். ஒரு கட்சியின் தலைவர், எம்.பி அவர். கொடுக்கப்பட்ட பாதுகாப்பின்படி நீங்கள் பின்னால்தான் வந்திருக்க வேண்டும். முன்னாடி வந்தது உங்கள் தப்பு. இந்த தவறை மறைத்து எனது வாகனத்தை இடித்து எளிதாக முடிய வேண்டிய ஒரு விஷயத்தை வன்முறையை தூண்டும் விதமாக பேசி அரசியல் ஆதாயம் தேடுகிறீர்கள். என் மீது அவதூறு பரப்புகிறீர்கள். சங்கி என்று கூறுகிறீர்கள். பிஜேபி, ஆர்எஸ்எஸின் கைக்கூலி என்கிறீர்கள். சாதி வெறியன் என்கிறீர்கள். பாலியல் குற்றவாளி என்கிறீர்கள்.
அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் என் மீது அவதூறு கிளப்புகிறீர்கள். நான் சட்டப்படி சந்திப்பேன். ஒரு மாத காலமாக இந்த சம்பவம் தொடர்பாக சோசியல் மீடியாக்களில் நான் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தேன். ஒரு கட்சியின் தலைவர் தவறு செய்து விட்டார் என்று இவ்வளவு நாட்களாக நான் காத்திருந்தேன். ஆனால் இந்த விபத்தை திசை திருப்புவது போல் அவரும் அதை அவரது பேசிக் கொள்வது ரொம்ப வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக வரலாற்றில் பார்த்தீர்கள் என்றால் ஒரு தலைவர் தவறு செய்து விட்டால் பொது வெளியில் வந்து பகிரங்கமாக வருந்துவது, மன்னிப்பு கேட்பதையும் எல்லோரும் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த விஷயத்தில் தொல். திருமாவளவன் இப்படி நடந்து கொண்டது வருத்தமாக இருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் பண்ணும் போது ஒரு ஆம்புலன்ஸ் குறுக்கே வந்தபோது அங்கே இருந்து பொதுமக்கள் அவரை அடிக்க முற்படும் போது, ‘‘ அடிக்காதீங்க. கொண்டு போய் போலீஸ் ஸ்டேசனில் விட்டு விடுங்கள்’’ என்று கூறினார். ஒரு காவலாளி அஜித்குமார் லாக் அப் மரணத்தில் காவல்துறை விசாரணையின் போது இறந்து விட்டார். அந்த குடும்பத்திற்கு ஒரு ஆறுதல் சொல்லும் போது முதல்வர் சொன்ன வார்த்தை அம்மாவிடம், தவறு நடந்து விட்டது மன்னியுங்கள் என்றார்.
கரூரில் 41 பேர் இறந்தார்கள். தவெக தலைவர் விஜய் நேரடியாக அந்த பொதுமக்களை வரவைத்து அவர்களிடம், “நடந்த தவறுதான். என்னை மன்னித்து விடுங்கள்’’ எனக் கேட்டார். தலைவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் நடந்துகொண்டது தலைவர் தகுதிக்கான பண்புகளும், மாண்புகளும் அவரிடம் இல்லை என்பது தான். சோசியல் மீடியாக்களில் வன்முறை துண்டு விதமாக அவர்கள் கட்சியினர் நடந்து கொள்கிறார்கள். அவரும் பேசுவது நல்ல தலைவருக்கான பண்பல்ல. இந்த இக்கட்டான சூழ்நிலையில் உண்மையின் பக்கம் நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்காக போராடிய, எனக்காக சோசியல் மீடியாக்களில் பேசிய அனைத்து மனிதர்களுக்கும் நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார்.