- Home
- Politics
- ஓரங்கட்டப்பட்ட ஓடி ஓடி வேலை செய்த அஜிதா அஃனஸ்..! தவெகவில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் நிர்வாகி
ஓரங்கட்டப்பட்ட ஓடி ஓடி வேலை செய்த அஜிதா அஃனஸ்..! தவெகவில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் நிர்வாகி
முன்பெல்லாம் விஜய் மாவட்ட செயலாளர்களின் மிக ஆக்டிவாவும், பெரிய கூட்டத்தைக் கூட்டி பல வேலைகளை செய்து வந்தவர் இந்த பெண் அஜிதா ஆக்னல்

2024,பிப்ரவரியில் நடிகர் விஜய் தவெகவை தொடங்கி மாநாடு, மக்கள் சந்திப்பு, பொதுக்குழுவை நடத்தி வருகிறார். இதனிடையே, ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி பல மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்களை நியமித்தார். அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் நியமித்தார்.
இதில், பல மாவட்டங்களில் பதவி தொடர்பாக பிரச்சனைகள் ஏற்பட்டதால் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற எண்ணிக்கை அடிப்படையில் மொத்தம் 131 மாவட்டங்களாக உயர்த்தப்பட்டது. 120 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு மீதமுள்ள 11 மாவட்டங்களுக்கு பல மாதங்களாக மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. இதனால் கட்சிக்குள் பல சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், விடுப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர் உள்பட பதவிகளுக்கு பொறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று, பொறுப்பு வழங்கப்படுபவர்களுக்கு ஆணைகளை வழங்கவுள்ளார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என பனையூரில் உள்ள அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தி வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தே பணியாற்றி வந்த அஜிதா, கட்சி தொடங்கியபின் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மாற்று கட்சியில் இருந்து தவெகவில் இணைந்த வேறு ஒருவருக்கு பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி மோதல் ஏற்பட்டது. பல கட்டங்களாக தவெக சார்பில் நடந்து வரும் கூட்டங்களில் தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த அஜிதாவுக்கு, ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது.
இந்த நிலையில், அஜிதா தனது ஆதரவாளர்களுடன் இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்று கட்சித் தலைவர் விஜய்யை சந்தித்து முறையிட வந்துள்ளார். அவர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியதால் கட்சி அலுவலகம் முன்பு அஜிதா கண்ணீர் வடித்து கொண்டிருக்கும் நிலையில் அவரது ஆதரவாளர்களும் வெளியே காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் சில அதிருப்தியாளர்கள் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருவள்ளூர் மாவட்ட தவெகவினர் அதிருப்தியில் இருந்த நிலையில் தற்போது தூத்துக்குடி, திருச்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே ஈரோடு மோகன்ராஜ் மற்றும் சேலம் மாவட்ட செயலாளர் இடையே அடிதடி நடந்தது. முன்பெல்லாம் விஜய் மாவட்ட செயலாளர்களின் மிக ஆக்டிவாவும், பெரிய கூட்டத்தைக் கூட்டி பல வேலைகளை செய்து வந்தவர் இந்த பெண் அஜிதா ஆக்னல்
