- Home
- Politics
- 41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!
41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!
ஏன் பாதிரியாரே திமுகவிற்கு ஆதரவாக மத ரீதியா மக்களை ஒன்று சேர்த்து ஓட்டு போடச் சொல்கிறீர்கள். உங்கள் மக்களுக்கு சுய அறிவு இல்லையா? யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரியாதா?

தவெக தலைவர் விஜய் கிறிஸ்தவ பின்னணியைச் சேர்ந்தவர் என்பது பல ஆண்டுகளாக அறியப்பட்டதே. அவரது அரசியல் கட்சியான தவெக தொடங்கப்பட்ட பிறகு, சில இந்து அமைப்புகளும், வலதுசாரிகளும் அவரை கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆதரவுடன் இயங்குபவர் என்று வெளிப்படையாகவே குற்றம்சாட்டி வருகின்றன. சிறுபான்மையினரான கிறிஸ்தவ வாக்குகள் விஜய்க்கு அப்படியே மொத்தமாகச் செல்லும் என திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் பீதியில் இருந்து வருகின்றன.
நேற்று தவெக ஏற்பாடு செய்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் விஜய் கலந்துகொண்டு, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேசினார். அங்கு சில கிறிஸ்தவ மதத்தவர்கள் கலந்து கொண்டு விஜயை புகழ்ந்து பேசினர். சில கிறிஸ்தவ போதகர்கள் திமுக ஆட்சியில் கிறிஸ்தவர்களின் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றும் ஓட்டுக்காக சிறுபான்மையினர் நலனில் திமுக போலி வேஷம் போடுவதாகவும் விமர்சித்து வருகின்றனர்.விஜய் ஆட்சிக்கு வந்தால் மாற்றம் வரும் என்று நம்பிக்கையோடு இருந்து வருகின்றனர். விஜய் நம்மில் ஒருவர். அவர் தமிழகத்தை ஆள வேண்டும் என பல வகைகளில் கிறிஸ்தவ அமைப்புகள் அணிலாகவும் உதவி வருவதாகக் கூறப்படுகிறது.
விஜய் கிறிஸ்தவ சமூகத்துடன் நெருக்கமாக இருப்பதாகவும், தவெக கிறிஸ்தவ வாக்குகளை குறிவைப்பதாகவும் கூறப்படும் நிலையில், சென்னை லயோலா, செயிண்ட் ஜோசப் போன்று முன்பு தமிழகத்தின் டாப் கிறிஸ்தவ கல்லூரிகளில் ஒன்றான பாளையங்கோட்டை, புனித சவேரியார் கல்லூரியைச் சேர்ந்த முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அக்கல்லூரியின் முதல்வர் காட்வின் ரூபஸ்,தேவாலயத்தில் நிகழ்த்திய உரையில், ‘‘நான் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் எடுத்து படிக்கப்போகிறேன் என்று குட்டிப்பையன் சொல்கிறான். நம்ம புள்ளைங்கைகிட்ட கேட்டுப்பாருங்க.. விஜய் ரசிகராகப்போறேன் 41 பேரை கொன்று குவித்தவனுக்கு எல்லோரும் இப்படி கையை தூக்கி காட்டணும் (விஜய் தலைவா படத்தில் கையை தூக்கிக் காட்டுவது போல கைகளை தூக்கி காட்டி பேசுகிறார்) நாமெல்லாம் விலங்கி போட்டால்தான் கையை இப்படி வைப்போம். இல்லையா? இந்தத் தலைவர் கையை இப்படிப்போட்டுக் கொள்கிறார். நான் ஏற்கெனவே விலங்கு போட்டு இருக்கிறேன் என்று காட்டுகின்ற அவர் பின்னால் செல்லுகின்ற கூட்டம் அதிகமாய் போய்க்கொண்டு இருக்கிறது.
நான் விஜய்க்கு எதிரி இல்லை. ஆனால், சினிமா நடிகர்கள் மீது நமது இளைஞர்கள், நடிகர்கள் எல்லாம் ஏன் போய்க் கொண்டிருக்கிறார்கள்? கேள்விகளைக் கேட்க வேண்டும். பாரம்பரியம் என்பது நேற்றோடு, இன்றோடு, நாளையோடு முடிவது அல்ல. அது ரிலே ரேஸ் மாதிரி போய்க்கொண்டே இருக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸின் இந்த பேச்சை பலரும் விமர்சித்து வருகின்றனர். ‘‘பிறகு ஏன் பாதிரியாரே திமுகவிற்கு ஆதரவாக மத ரீதியா மக்களை ஒன்று சேர்த்து ஓட்டு போடச் சொல்கிறீர்கள். உங்கள் மக்களுக்கு சுய அறிவு இல்லையா? யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரியாதா? நாங்களும் கிறிஸ்தவர் தான். ஒரு பிரச்சனையின் அடிப்படை தன்மையை பற்றி புரியாமல் இப்படி அவதூறுவாக பேசுவது மிகத் தவறு.கிறிஸ்தவர் எனும் அடையாளத்தின் மானத்தையே வாங்குகிறீர்கள்.
அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு,அவதூறு பரப்புவது தான் திமுக விசுவாசமாக இருக்கும் பாதிரியார் காட்வின் ரூபஸ் வேலையா? சர்ச்சுக்கு வந்தால் பிரேயர் மட்டும் நடத்துங்கள். அதை விட்டுவிட்டு ஒரு கட்சி சார்ந்து பேசுவதெல்லாம் இழிவான செயல். பாளையங்கோட்டையில் உள்ள அந்த ஆலயத்திற்கு வரும் மக்களே இதை ஏற்றுக்கொள்ள
மாட்டார்கள். புனிதமான இடத்தில் இருந்து கொண்டு ஏன் இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறீர்கள். கிறிஸ்தவ மக்களுக்கே
நீங்கள் ஒரு களங்கம்’’ என கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
