அதிவேக புல்லட் ரயிலில் ஸ்டாலின்.! ஏழை, எளிய நடுத்தர மக்களின் பயணங்கள் எளிதாக வேண்டும் - முதலமைச்சர் டுவிட்
ஜப்பான் புல்லட் ரயிலில் பயணம் செய்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
mk stalin
முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்ற ஸ்டாலின்
சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு பல்வேறு நிறுனவங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார். மேலும் அந்தநாட்டில் உள்துறை அமைச்சரை சந்தித்து உலக முதலீட்டார்கள் மாநாட்டிற்கு வரும் படி அழைப்பு விடுத்தார். இதனையடுத்து தனது இரண்டு நாள் சிங்கப்பூர் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு 25.5.2023 அன்று இரவு ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணம் வந்தடைந்தார்.
mk stalin
ஜப்பான் சென்ற ஸ்டாலின்
அதனைத் தொடர்ந்து 26.5.2023 அன்று காலை ஓசாகாவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization - JETRO) இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில்தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு. தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்து உரையாற்றினார். தொடர்ந்து, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
mk stalin
ஒசாகா கோட்டையில் ஸ்டாலின்
ஒசாகாவில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு, ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜி (Osaka Province Vice Governor Mr. Nobuhiko Yamaguchi) ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையின் சிறப்பைப் பற்றி எடுத்துக்கூறி அதனை பார்வையிடுமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினையேற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (27.5.2023) ஜப்பான் நாட்டின், ஒசாகாவில் உள்ள 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் கோட்டையான ஒசாகா கோட்டையை பார்வையிட்டார்.
புல்லட் ரயிலில் ஸ்டாலின்
பழம்பெரும் ஓசாகா கோட்டை அசுச்சி-மோமோயாமா காலத்தின் 16-ஆம் நூற்றாண்டில் ஜப்பானை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தது. இக்கோட்டை சுமார் 61,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. ஜப்பானிய அரசால் இக்கோட்டை முக்கியமான கலாச்சார சொத்தாக போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்கோட்டையானது அகழிகள், கிணறுகள், தோட்டங்கள் போன்ற இயற்கை சூழலுடன் அமைந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் 25.5.2023 அன்று அரசுப் முறை பயணமாக ஒசாகா சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்கள், ஒசாகாவில் தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டோக்கியோ மாநகரத்திற்கு புறப்படுவதற்கு முன்னர் ஒசாகாவில் தங்கியிருந்த விடுதியில் ஊழியர்கள் உற்சாகமாக முதலமைச்சரை வழியனுப்பிவைத்தனர்.
இந்தியாவிலும் புல்லட் ரயில்
ஒசாகா பயணத்தை முடித்துக்கொண்ட ஸ்டாலின், ஒசாகாவில் இருந்து இன்று புல்லட் இரயில் மூலமாகதமிழ்நாடு முதலமைச்சர் டோக்யோ புறப்பட்டார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை - எளிய - நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.