- Home
- Politics
- திமுகவிடம் சில தலைவர்கள் வாங்கி தின்கிறார்கள்..! ஸ்டாலினை தொடர்ந்து மிரட்டும் காங்கிரஸ்..!
திமுகவிடம் சில தலைவர்கள் வாங்கி தின்கிறார்கள்..! ஸ்டாலினை தொடர்ந்து மிரட்டும் காங்கிரஸ்..!
சில எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுக்கு சில காரணங்கள் இருக்கலாம். அதாவது ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். "Don't bite the hands which feeds" ஊட்டி விடுகிற கையை யாராவது கிள்ளுவார்களா? காங்கிரசில் சிலபேர் திமுகவிடம் வாங்கி திண்கிறார்கள்.

‘‘மக்கள் அவரை நடிகராக பார்க்க வரவில்லை. ஒரு அரசியல்வாதியாகத்தான் பார்க்க வருகிறார்கள். விஜய் ஒரு சக்திதான். அதை யாரும் மறுக்கவே முடியாது. விஜய் ஒரு அரசியல் சக்தியாக தமிழ்நாட்டில் உருவாகி விட்டார்’’ என காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்குமா? தவெகவுடன் கூட்டணி அமைக்குமா? என்பது தமிழக அரசியல்களத்தில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில், திமுகவுடன் கூட்டணியை தொடர வேண்டுமானால், அதிக சீட்டுகள், அதிகாரத்தில் பங்கு கேட்டு வருகிறது காங்கிரஸ். இந்நிலையில் இதுகுறித்து பிரவீன் சக்கரவர்த்தி, ‘‘60 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததில்லை. காங்கிரஸ் தொண்டர்களுடைய கோரிக்கை அதிக சீட்டு, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு. இது காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கை. எதுக்கு இந்த கோரிக்கை வைக்கிறார்கள் என்றால் காங்கிரஸ் கட்சி 60 வருடங்களாக பலவீனமாகவே போய்க்கொண்டு இருக்கிறது.
இதைப்பலப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்துக்காக இந்த கோரிக்கை எழுந்துள்ளது’’ என்றார். தொண்டர்களும், நிர்வாகிகளும் இந்த கோரிக்கையை வைத்து வரும் நிலையில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மாறுபட்ட கருத்தைக் கூறி இருக்கிறாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரவீன் சர்க்கரவர்த்தி, ‘‘சில எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுக்கு சில காரணங்கள் இருக்கலாம். அதாவது ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். "Don't bite the hands which feeds" ஊட்டி விடுகிற கையை யாராவது கிள்ளுவார்களா? காங்கிரசில் சிலபேர் திமுகவிடம் வாங்கி திண்கிறார்கள்.
யாருக்கு என்ன கட்டுப்பாடு இருக்கிறது? என்ன இல்லை, அவரவர்கள் தொகுதியில் வேலை நடக்கணும். வழக்குகள் இருக்கலாம். அதற்காக அப்படி பேசலாம். ஆனால் இது காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு இது தேவையா? இல்லையா? காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கு இது தேவையா இல்லையா? காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்துக்கு இது தேவையா? இல்லையா? காங்கிரஸ் கட்சியின் நலனுக்கு இது தேவையா? இல்லையா? அதில் யாரிடமும் மாற்றுக் கருத்து யாரிடமும் இல்லை.
கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி தலைமைதான் முடிவெடுக்கும். காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களது கோரிக்கையை வைக்கலாம். எங்கள் கட்சியினர் யார் வேண்டுமானாலும், எந்த கோரிக்கையையும் வைக்கலாம். அதில் பிரச்சினையே கிடையாது. ஆனால் கடைசி முடிவை காங்கிரஸ் கட்சி தலைமைதான் எடுக்கும். நான் விஜயை சந்தித்தேன் அவ்வளவுதான். இரண்டு பேர் சந்திக்கக்கூடாதா? ப்ரவீண் சர்க்கரவர்த்தி காங்கிரஸ் கட்சிக்காரன் என்கிற அடையாளம் மட்டும் கிடையாது. நிறைய அடையாளங்கள் எனக்கு இருக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் சந்தித்ததில் என்ன பெரிய பிரச்சினை? நான் டெல்லியில் நிறைய பேரை சந்திக்கிறேனே? அங்கெல்லாம் யாரும் இதைப்போல கேள்வி கேட்பது இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இப்படி கேள்வி கேட்கிறீர்கள்?
நான் விஜய் கட்சியை மிகைப்படுத்தி சொல்லவில்லை. களத்தில் என்ன நடக்கிறது என்பதை நீங்களே பார்க்கலாம். என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிகிறது. அவரது பேரணிக்கு உற்சாகமாக மக்கள் வருகிறார்கள். அதெல்லாம் வெளிப்படையாக எல்லோருக்குமே தெரிகிறது. அதில், ஒண்ணும் பெரிய சந்தேகம் யாருக்கும் கிடையாது. அது ஓட்டாக மாறுமா? மாறாதா? என்கிற கேள்விகளும் எழுப்பப்படுகிறது. ஆனால், மக்கள் அவரை பார்க்க வருகிறார்கள். மக்கள் அவரை நடிகராக பார்க்க வரவில்லை. ஒரு அரசியல்வாதியாகத்தான் பார்க்க வருகிறார்கள். விஜய் ஒரு சக்திதான். அதை யாரும் மறுக்கவே முடியாது. விஜய் ஒரு அரசியல் சக்தியாக தமிழ்நாட்டில் உருவாகி விட்டார்’’ எனத் தெரிவித்துள்ளார்.
