- Home
- Politics
- எவனாவது இனி அதிமுக பலவீனம் ஆகிவிட்டது என்று சொன்னால் வெட்டி போடுங்கள்..! நிர்மலா பெரியசாமி அதிர்ச்சி பேச்சு
எவனாவது இனி அதிமுக பலவீனம் ஆகிவிட்டது என்று சொன்னால் வெட்டி போடுங்கள்..! நிர்மலா பெரியசாமி அதிர்ச்சி பேச்சு
‘’எவனாவது வெளியில் அண்ணா திமுக பலவீனமாக இருக்கிறது என்று எவனாவது சொன்னார்கள் என்றால் சகோதரிகளே, வெட்டியே போடுங்கள் அத்தனை பேரையும்''

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வாழவந்தான்குப்பம் எல்லையில் சேலம் - சென்னை புறவழிச்சாலையில் நடைபெற்ற அதிமுக மகளிரணி எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய அதிமுக கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, ‘‘இந்தக் கூட்டத்தை பார்த்ததற்கு பிறகும் எவனாவது வெளியில் அண்ணா திமுக பலவீனமாக இருக்கிறது என்று எவனாவது சொன்னார்கள் என்றால் சகோதரிகளே, வெட்டியே போடுங்கள் அத்தனை பேரையும்.
தொலைக்காட்சியில் உட்கார்ந்து கொண்டு அண்ணா திமுக அப்படி ஆகிவிட்டது. அண்ணா திமுக எப்படி ஆகிவிட்டது? அண்ணா திமுக பலவீனமாகிவிட்டது. அவன் அங்கே போய்விட்டான். இவன் இங்கே போய்விட்டான். அவன் ஓடிப் போய்விட்டான் என்று வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி அண்ணா திமுக பலவீனமாக இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் அந்த மடையர்களுக்கெல்லாம் சொல்லுங்கள், நாங்கள் இருக்கிறோம். அம்மாவின் தங்கைகள், அம்மாவின் பிள்ளைகள் நாங்கள் இருக்கிறோம்.
எங்கள் சகோதரர் இருக்கிறார். அம்மா சும்மா விட்டுப் போகவில்லை. அம்மா அருமையான ஒரு தம்பியை, தன்னைப் போலவே ஒரு தம்பியை அருமையாக உருவாக்கிவிட்டு இரும்பு மனமும், கரும்பு இதயமும் கொண்ட ஒரு அண்ணனை உருவாக்கி விட்டுத்தான் போயிருக்கிறார். அண்ணா திமுக சோடை போகாது. அனைத்தந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அடுத்த ஆட்சி அமைக்க இருக்கிறது. இனி என்றும் ஆட்சி அமைக்கும். உங்கள் அத்தனை பேருடைய ஆதரவோடு’’ எனப்பேச்சினார்.
