- Home
- Politics
- Breaking: செந்தில் பாலாஜிக்கு தொடர்பு... குண்டர்கள் அறங்கேற்றிய கொடூரம்: உயர்நீதிமன்றத்தில் பகீர் கிளப்பிய ஆதவ் அர்ஜுனா..!
Breaking: செந்தில் பாலாஜிக்கு தொடர்பு... குண்டர்கள் அறங்கேற்றிய கொடூரம்: உயர்நீதிமன்றத்தில் பகீர் கிளப்பிய ஆதவ் அர்ஜுனா..!
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை, தவெக சார்பில் அக்கட்சியின் சந்திக்க அனுமதி கொடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார் ஆதவ் அர்ஜுனா.

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தவெக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தவெக சார்பில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்க செய்த முனுவில், ‘‘ கூட்ட நெரிசலில் உள்ளூர் அரசியல்வாதிக்கு தொடர்பு உள்ளது. கூட்டத்தில் மின்தடை ஏற்பட்டதாகவும், சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே மருத்துவமனைகள் தயார் நிலையில் இருந்ததாகவும் ஆதவ் அர்ஜுனா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
CCTV காட்சிகளை பாதுகாக்க வேண்டும். உள்ளூர் அரசியல்வாதிகள், குண்டர்கள் சேர்ந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். CBI விசாரணைக்கு மாற்ற வேண்டும். மேலும் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்க தனக்கோ, விஜய்க்கோ தடை விதிக்க கூடாது. கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் திமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜிக்கு தொடர்பு உள்ளது. சம்பவத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளின் தொடர்பு, மின்தடை ஏற்பாடு, முன்கூட்டியே மருத்துவமனைகள் தயார் ஆகிய விவரங்கள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை, தவெக சார்பில் அக்கட்சியின் சந்திக்க அனுமதி கொடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்க தனக்கோ, விஜய்க்கோ தடை விதிக்க கூடாது எனவும் கோரியுள்ளார் ஆதவ் அர்ஜுனா. பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட உடன் கரூர் அவர் செல்வார் என சொல்லப்படுகிறது.