விஜயை கொடூரமாகக் குதறும் சீமான்- திருமா..! அரசியல் விமர்சகர் உடைக்கும் பகீர் பின்னணி..!
திருமாவளவனை பொருத்தவரையில் அவர் டி.கே.எஸ். இளங்கோவனை போன்று திமுகவின் அன் அஃபிசீயல் பேச்சாளர். திமுகவுக்கு வரிந்து பேசுவதில் திருமாவளவன், டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு போட்டியாளராக மாறிவிட்டார். திமுகவில் தலித் பிரிவு ஐடி விங்க் தலைவர் போலச் செயல்படுகிறார்

தீய சக்தி எனத் தீண்டுகிறார்
தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், விசிக தலைவர் திருமாவளவனும் அரசியலையும் தாண்டி விஜய் மீது வன்மம் கக்கி வருகிறார்கள் என அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சீமானின் விஜய் மீதான விமர்சனங்கள் முதலில் திராவிடம் vs தமிழ்தேசியம் கொள்கை வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டது எனக்கூறி எதிர்ப்புத் தெரிவித்தார். அதன் பிறகு ரோட்டில் அடிபட்டு சாவாய் என அவர்து எதிர்ப்பு நெறிக்கட்டியது. கரூர் நெரிசல் சம்பவத்திற்குப் பின் அது தீவிரமடைந்துள்ளது. திருமாவளவன், விஜயை "பாஜகவால் அரசியலில் களமிறக்கப்பட்டவர்" என்று கடுமையாக விமர்சித்து வருகிறார். தீய சக்தி எனத் தீண்டுகிறார். விஜய் "வழக்கமான அரசியலைத்தான் செய்கிறார். திமுக வெறுப்பு அரசியல்". "உயிர்பலிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார்" என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்.
திருமாவளவனுக்கு ஒரு நியாயம் இருந்தது
"விஜய் மீது தனிப்பட்ட வன்மமும் இல்லை, காழ்ப்புணர்வும் இல்லை. ஆனால் அவர் பாஜகவுக்கு பலியாகிவிடக் கூடாது" என விஜய் மீது கரிசன விமர்சனத்தையும் முன் வைத்தார். ருமாவளவன், சீமானின் விஜய் மீதான விமர்சனங்கள் குறித்து பேசிய அரசியல் விமர்சகர் மதியழகன், ‘‘திருமாவளவன் பாஜக விரித்த வலை என்கிறார். பாஜக கூட்டணிக்கு போகிறார் என்றெல்லாம் பேசுகிறார். கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கிறது தவெக. அவர் பாஜகவுக்கு செல்கிறார் என்றால் திருமாவின் பேச்சில் உள்ள அதன் அளவுகோல் என்ன? வேங்கை வயல் பிரச்சனைக்கு திருமாவளவனே சிபிஐ விசாரணை கேட்டார். அவர் திமுக கூட்டணியில் இருக்கிறார். அவர் ஆதரிக்கிற அரசாங்கம் தான் மாநிலத்தில் ஆட்சி செய்கிறது. அந்த மாநில போலீஸின் சிபிசிஐடி தான் இந்த வேங்கைவயல் வந்து வருட கணக்கில் இழுத்துக் கொண்டு இருந்தது.
அதில் திருமாவளவனுக்கு ஒரு நியாயம் இருந்தது. அதை தவென்று சொல்லவில்லை. வேங்கை வயல் விவகாரத்தில் சிபிஐ கேட்டார். சரியாக நடக்கவில்லை, தாமதப்படுத்துகிறார்கள் காரணம் சொன்னார். அதேபோல கரூர் விவகாரத்தில் தமிழக போலீஸ் நடுநிலைமையாக இருக்காது. அது அரசியல் உள்நோக்கத்தோடு இந்த விசாரணையை கெடுக்கும் என விஜய் யோசிக்கிறார். இங்கே தவெக வைக்கிற குற்றச்சாட்டு, தமிழ்நாடு காவல்துறை ஒரு தலை பட்சமாக செயல்படுகிறது. எங்களுக்கு கேட்ட இடத்தை கொடுக்கவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமான அளவுக்கு செய்யவில்லை. காவல்துறை ஒத்துழைத்து இருந்தால் இந்த அசம்பாவிதங்களை தவிர்த்து இருக்கலாம் என சொல்கிறார்கள்.
சிபிஐயே கூடாது என ஏன் தடுக்கிறீர்கள்?
காவல்துறை மீது முக்கியக் குற்றச்சாட்டுகள் வருவதால் அதை திமுக அரசாங்கமே விசாரித்தால் சரியாக இருக்காது என நினைக்கிறது தவெக. காலங்களில் நாம் பார்த்து இருக்கிறோம். யாரும் காவல் துறையை விட்டுக் கொடுத்துவிட்டு ஆட்சி செய்ய மாட்டார்கள். அப்படி இருக்கும்போது இப்போது சிபிஐ விசாரணை வேண்டும் என விஜய் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? வேங்கை வயல் விஷயத்தில் திருமாவளவன் கேட்டதும் தவறு இல்லை. கரூர் விவகாரத்தில் விஜய் கேட்டதும் தவறு இல்லை.
தமிழக அரசு மடப்புரம் காவலாளி அஜித் குமார் வழக்கில் யாரும் கேட்காமலே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதும் தவறு இல்லை. சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பால் இருக்க வேண்டும் என்பது போல் ஒரு மாநில போலீஸ் கஸ்டடியில் விசாரிக்காமல் ஒன்றிய அரசின் கீழே இருக்கிற சிபிஐ விசாரிக்க கொடுத்தது என்பது ஒரு நல்ல முடிவு தான். ஆனால், திருமாவளவனோ திமுக ஆட்சியாளர்களோ, ஆளுங்கட்சியோ, அவர்கள் சிபிஐக்கு போனால் அது நீதியை நிலை நாட்ட, நியாயத்தை நிலை நாட்ட... வேறு ஒருவர் வந்து சிபிஐ கேட்டால் பாஜக விரித்த வலையில விழுந்து விட்டார் எனச் சொல்வடு சந்தர்ப்பவாத பேச்சாகத்தான் இருக்கிறது. இதில் ஒரு லாஜிக் இல்லை. காரணம் இல்லை. சிபிஐயே கூடாது என நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?
அந்த வயிற்றெரிச்சல் தான் காரணமா..?
ஒட்டுமொத்தமாக விஜயினுடைய அரசியல் வரவால் தங்களுக்கு, தங்கள் அரசியல் எதிர்காலம் சூன்யமாகிவிடுமோ என்கிற பயம். சீமான் பேசுவதெல்லாம் பாருங்கள் அவரது பேச்சில் ஒரு நிலைப்பாடே இருக்காது. காலையில் ஒன்று பேசுகிறார். மாலையில் ஒன்று பேசுகிறார். நடுவில்= மதியவேலையில் வேறு மாதிரி பேசுகிறார். தம்பிக்கு நான் இருக்கிறேன். கரூரில் தப்பு நடக்கவில்லை எனச் சொன்னார். அதன் பிறகு கடுமையாக விமர்சனம் செய்கிறார். அதற்கு காரணம் அரசியல் பாதுகாப்பை அவர்கள் கையில் எடுக்கிறார்கள். இந்த இரண்டு கட்சி தலைவர்களுக்கும் பயம் வந்து விட்டது. அதன் காரணமாகத்தான் இப்படி பேசுகிறார்கள்.
இல்லையென்றால் திமுக தலைமையை மகிழ்விக்க அதன் மூலம் ஆளுங்கட்சியிடம் நெருக்கமாக நினைக்கிறார்கள். இப்போதே நெருக்கமாத்தான் இருக்கிறார்கள். இன்னும் நெருக்கமாகப் பார்க்கிறார்கள். திருமாவளவனை பொருத்தவரையில் அவர் டி.கே.எஸ். இளங்கோவனை போன்று திமுகவின் அன் அஃபிசீயல் பேச்சாளர். திமுகவுக்கு வரிந்து பேசுவதில் திருமாவளவன், டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு போட்டியாளராக மாறிவிட்டார். திருமாவளவனைப் பொறுத்தவரை திமுகவில் தலித் பிரிவு ஐடி விங்க் தலைவர் போலச் செயல்படுகிறார்.
சீமான், திருமாவளவன் கட்சியில் இருந்தவர்கள் எல்லாம் கொத்துக் கொத்தாக தவெகவுக்கு தாவி வருகிறார்கள். அந்த வயிற்றெரிச்சலில் தான் இருவரும் விஜயை அரசியலைக் கடந்து கொடூரமாக விமர்சித்து வருகிறார்கள்’’ என்கிறார்.