- Home
- Politics
- என்னை கழுத்தை நெறித்து கொல்லத் தூண்டியவருக்கு பதவி.. அன்புமணி மீது ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு..!
என்னை கழுத்தை நெறித்து கொல்லத் தூண்டியவருக்கு பதவி.. அன்புமணி மீது ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு..!
ஒரு கட்சியில் பொறுப்பினை நான் விரும்பி கொடுக்கிறேன் என்றால் தமிழ்குமரனை ஏற்றுகொள்ளவில்லை. முகநூலில் ராமதாஸை கழுத்தை நெறுத்து, தலையை வைத்து கொலை செய்ய வேண்டுமென மாற்று கட்சியில் இளைஞரணி பதவியில் உள்ள நபர் கேவலமாக எழுதுகிறார்.

முகநூலில் ராமதாஸை கழுத்தை நெறுத்து, தலையை வைத்து கொலை செய்ய வேண்டுமென மாற்று கட்சியில் இளைஞரணி பதவியில் உள்ள நபர் கேவலமாக எழுதுகிறார் என ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ‘‘இன்றைய தினம் மகிழ்ச்சியான நாள் நீண்ட நாள் ஆசை நிறை வேறப்போகும் நாளாகவும், தான் அதிகம் நேசிக்கும் பிள்ளைகளில் தமிழ் குமரனுக்கு பாமக மாநில இளைஞசங்க தலைவராக நியமனம் செய்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சியினர் தமிழ்குமரனுக்கு பேராதரவு தரவேண்டும்’’ என கூறிய அவர் நியமன கடிதத்தினை தமிழ் குமரனிடம் ராமதாசின் மூத்த மகள் காந்திமதி மற்றும் ராமதாஸ் வழங்கினர். அதன் பிறகு பேசிய அவர் தமிழ் குமரனுக்கு ஏற்கனவே பாமக இளைஞரணி சங்க தலைவர் கடிதம் கொடுக்கப்பட்டது.
மேலும் பேசிய ராமதாஸ், ‘‘அப்போது வானூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட இருந்த வேலையில் பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழ் குமரன் வர கூடாதென தொலைபேசியில் அழைப்பு வந்ததின் பேரில் வர வேண்டாம் என மனவருத்தத்தோடு தமிழ்குமரனிடம் கூறினேன். பின்னர் கடிதத்தினை கிழித்து போட கூறிவிட்டேன். மீண்டும் ஒரு பொதுக்குழு வானூர் அருகே கூடியபோது அன்புமணியின் சகோதரியின் மகன் முகுந்தனுக்கு இளைஞரணி சங்க தலைவராக அறிவித்தபோது மைக் தன்மீது பாய்ந்தார்.
ஒரு கட்சியில் பொறுப்பினை நான் விரும்பி கொடுக்கிறேன் என்றால் தமிழ்குமரனை ஏற்றுகொள்ளவில்லை. சொந்த அக்கா மகனையும் ஏற்று கொள்ளாத நிலையில் மீண்டும் தமிழ் குமரனுக்கு இளைஞரணி சங்க தலைவராக நியமிக்கபட்டுள்ளார். முகநூலில் கேவலமாகவும் மிக கேவலமாகவும் எழுதுகின்றனர்.
முகநூலில் ராமதாஸை கழுத்தை நெறுத்து, தலையை வைத்து கொலை செய்ய வேண்டுமென மாற்று கட்சியில் இளைஞரணி பதவியில் உள்ள நபர் கேவலமாக எழுதுகிறார். முகநூலில் இப்படி எழுதுபவர்களை பார்த்து அதனை கண்டுபிடித்தவர்கள் பார்த்தால் வெட்கி தலைகுணிவார்கள். சமூக வலைதளங்களில் தவறாக எழுதுபவர்களை ஊடக நண்பர்கள் கண்டிக்க வேண்டும். தூங்கும்போது தலையணை வைத்து அமுக்குமாறும், துண்டைப் போட்டு என் கழுத்தை இறுக்குமாறும், முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு கட்சியில் அன்புமணி பதவி வழங்கியுள்ளார்’’ என ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.