- Home
- Politics
- புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா நேரில் ஆஜர்..! CBI கிடுக்கிப்பிடி விசாரணை..! கரூரில் பரபரப்பு
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா நேரில் ஆஜர்..! CBI கிடுக்கிப்பிடி விசாரணை..! கரூரில் பரபரப்பு
விசாரணைக்கு ஆஜராகியுள்ள தவெக இரண்டாம்கட்ட தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோரிடம் பரப்புரைப் பயண வாகனத்தில் இருந்த சிசிடிவி காட்சி விவரங்கள், பொதுக்கூட்ட ஏற்பாடுகள், குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கின் விசாரணைக்கு தவெக பொதுச் செயலாளர் என் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் சிபிஐ விசாரணைக்கு தான் தோன்றிமலை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தின் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐயின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, தவெக முக்கிய நிர்வாகிகளான பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சிபிஐ அதிகாரிகளிடம் ஆஜராகினர். இது விசாரணையின் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.
ஆரம்பத்தில் தமிழக போலீஸின் சிறப்புப் புலனாய்வுக் குழு, ஒருநபர் ஆணையம் விசாரித்தது. ஆனால், அரசியல் தலையீடு மற்றும் நம்பிக்கை இல்லாமை காரணமாக, பாஜக நிர்வாகி உமா ஆனந்தன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்று, அக்டோபர் 7, 2025 அன்று வழக்கை சிபிஐயின் கையில் ஒப்படைத்தது.
தவெக தலைவர் விஜய், பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களையும் மாமல்லபுரத்தில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவர் பெயர் எஃப்ஐஆரில் இடம்பெறவில்லை. ஆனால் அரசியல் வட்டாரத்தில் அவரது பொறுப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழுவினர் கரூர் பகுதிக்கு வந்து நேரில் ஆய்வு செய்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் எனப் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகியுள்ள தவெக இரண்டாம்கட்ட தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோரிடம்பரப்புரைப் பயண வாகனத்தில் இருந்த சிசிடிவி காட்சி விவரங்கள், பொதுக்கூட்ட ஏற்பாடுகள், கூட்டத்தைக் கட்டுப்படுத்தியதற்கான முன்னெச்சரிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து சிபிஐ அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
