- Home
- இந்தியா
- சிந்து பகுதியை மீண்டும் சேர்த்துக் கொள்வீர்களா..? இந்தியாவின் சைக்கோ மனநிலை! பாகிஸ்தான் ஆத்திரம்..!
சிந்து பகுதியை மீண்டும் சேர்த்துக் கொள்வீர்களா..? இந்தியாவின் சைக்கோ மனநிலை! பாகிஸ்தான் ஆத்திரம்..!
இந்தியா தனது சொந்த குடிமக்களின், குறிப்பாக அங்குள்ள சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். இந்த சமூகங்களுக்கு எதிராக வன்முறையைச் செய்பவர்கள், தூண்டுபவர்கள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாகிஸ்தானை சீண்டிய ராஜ்நாத் சிங்
பாகிஸ்தானின் சிந்துவை இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது பாகி்ஸ்தானை கோபப்படுத்தி உள்ளது.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், ‘‘சிந்து பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாகரிகத்தின் படி, சிந்து எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். நிலத்தைப் பொறுத்தவரை, எல்லைகள் மாறக்கூடும். யாருக்குத் தெரியும்? சிந்து நாளை மீண்டும் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறக்கூடும்’’ எனப் பேசி இருந்தார். அவரது பேச்சு பாகிஸ்தானை கோபப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் இதற்கு பதிலடி கொடுத்துள்ளது,
ராஜ்நாத் சிங்கின் பேச்சுக்கு பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘மாற்றங்களைக் கோரும் பாகிஸ்தானின் சிந்து மாகாணம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சரின் மாயையான. ஆபத்தான கருத்துக்களை பாகிஸ்தான் கடுமையாக கண்டிக்கிறது.
ராஜ்நாத் சிங்கில் இந்துத்துவா மனநிலை
ராஜ்நாத் சிங்கின் பேச்சு குறைபாடுள்ள மனநிலையை அடிப்படையாகக் கொண்டது. இதுபோன்ற பேச்சுக்கள் யதார்த்தங்களை சரி செய்ய முயற்சிக்கும் விரிவாக்கவாத இந்துத்துவா மனநிலையை பிரதிபலிக்கின்றன. அவை சர்வதேச சட்டம், வரையறுக்கப்பட்ட எல்லைகள், நாடுகளின் இறையாண்மைக்கு எதிரானவை. இது போன்ற சொல்லாடல்களில் இருந்து ராஜ்நாத் சிங், பிற இந்தியத் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும். ஏனென்றால் இது இரு நாடுகளுக்கு இடையில் பதட்டங்களை அதிகரிக்கக்கூடும். இந்தியா தனது சொந்த குடிமக்களின், குறிப்பாக அங்குள்ள சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த சமூகங்களுக்கு எதிராக வன்முறையைச் செய்பவர்கள், தூண்டுபவர்கள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மக்களின் பிரச்சினைகளை இந்தியா தீர்க்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் புறக்கணிப்பு, வன்முறையை எதிர்கொள்கின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை இந்தியா தீர்க்க வேண்டும்
அதே நேரத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்கள், அங்குள்ள மக்களின் விருப்பங்களுக்கு இணங்க ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை இந்தியா தீர்க்க வேண்டும். இந்தியாவுடனான அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான முறையில் தீர்க்க விரும்புகிறோம். தேவைப்பட்டால் அதன் பாதுகாப்பு, இறையாண்மையை பாதுகாக்க முழுமையாக தயாராக இருக்கிறோம்’’ என பாகிஸ்தான் கூறியுள்ளது.
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் விஸ்வ சிந்தி இந்து அறக்கட்டளை சங்கம் (VSHFA) ஏற்பாடு செய்த நிகழ்வில் பேசிய ராஜ்நாத் சிங், ‘‘1947 ஆம் ஆண்டு பிரிவினைக்குப் பிறகு, சிந்து நதிக்கு அருகிலுள்ள ஒரு பகுதியான சிந்து மாகாணம் பாகிஸ்தானுக்குச் சென்றது. அந்தப் பகுதியில் வசிக்கும் சிந்தி மக்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர். சிந்து இந்துக்கள், குறிப்பாக லால் கிருஷ்ண அத்வானி போன்ற தலைவர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். சிந்து பகுதியை இந்தியாவிலிருந்து பிரிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
சிந்து நதி இந்துக்களின் புனிதமான நீர்
சிந்து இந்தியாவில் இருந்து பிரிந்ததை லால் கிருஷ்ண அத்வானி தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். சிந்துவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் சிந்து நதியை புனிதமாகக் கருதினர். சிந்து மாகாணத்தில் உள்ள பல முஸ்லிம்கள், சிந்து நதியின் நீர் மெக்காவின் ஜம்ஜம் தண்ணீரை விட புனிதமானது என்று நம்புகிறோம்’’ எனத் தெரிவித்து இருந்தார்.
