- Home
- Politics
- வயிற்றெரிச்சல்... பெரியாரை விட 1000 மடங்கு பங்களித்தவர் மோடி..! புள்ளி விவரம் அடுக்கிய பாண்டே..!
வயிற்றெரிச்சல்... பெரியாரை விட 1000 மடங்கு பங்களித்தவர் மோடி..! புள்ளி விவரம் அடுக்கிய பாண்டே..!
வாரணாசியில் கிட்டத்தட்ட 17 லட்சம் பேர் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அங்கு போட்டியிட்ட மோடி எப்படி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார் என்று யோசிக்க வேண்டாமா? யாராவது இஸ்லாமியர்களுடைய வாக்குகளை பெறாமல் வெற்றி பெற முடியுமா?

பெண்கள் விடுதலைக்கு பெரியார் செய்தது என்ன?
“2014-க்குப் பிறகு இந்தியாவில் கலவரங்களே இல்லையே.. அது ஏன் என ஏன் யாரும் யோசிப்பதில்லை? இஸ்லாமிய பெண்களுக்காக பிரதமர் செய்தவை...” எனப்ம் பேசிய ரங்கராஜ் பாண்டே பெண்கள் விடுதலைக்கு பெரியார் செய்தது என்ன?பிரதமர் மோடி செய்தது என ஒப்பீடு செய்து பேசினார்.
பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், ‘‘இதே நாளில் தான் பெரியார் என்று அழைக்கப்படக்கூடிய ஈ.வெ.ராமசாமி பிறந்தார். அவர் பெண்கள் விடுதலைக்கு என்ன செய்தார்? என்ன சொன்னார்? என்பதை பார்க்க வேண்டும். இந்த நல்ல நாளில் நான் அவரைப் பற்றி பேச விரும்பவில்லை. பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு என்ன செய்தார் என்பதை பார்க்க வேண்டும். அவர் குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்தபோது பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் 100% வரிவிலக்கு என்றார். ஊராட்சி தலைவிலாக பெண்களைத் தேர்ந்தெடுத்தால் தேர்தலே கிடையாது, கோடி கணக்கில் மாநில அரசு நிதி கொடுக்கும் என்றார்.
இந்தியாவில் எங்குமே மதக் கலவரம் இல்லை
இதுதான் பெண்களுக்கான முன்னுரிமை. இன்னைக்கு நாம் பார்க்கிறோம் தமிழ்நாட்டில், இந்தியாவில் அப்படி என்று ஒரு அரசியல் தலைவர் வந்தால் அது யாரோ ஒரு அரசியல் தலைவரின் மனைவியாகவோ, மகளாகவோ தான் இருக்க முடியும். சுயம்புவாக வரக்கூடிய அரசியல் தலைவர் இல்லாமல் போய் விட்டார்கள். ஆகையால் பெண்கள் சுதந்திரம் என்பதை நடைமுறையில் செய்து காட்டியவர் மோடி. சிறுபான்மையினர் மக்களுக்கு எதிரானவர் என்று மோடியைச் சொல்கிறார்கள். யோசித்துப் பாருங்கள் 2014க்கு முன்னாடி வரை எல்லா இடங்களிலும் கலவரம் இருந்தது.
இந்தியா முழுவதும் கலவரம் 2014 க்கு பிறகு ஏன் இந்தியாவில் எங்குமே மதக் கலவரம் இல்லை . இதையே யாரும் யோசிக்க மாட்டேன் என்கிறார்கள். நான் 26 வருடங்களாக ஊடகத்துறையில் இருக்கிறேன். இந்த ஊடகத்தால் வஞ்சிக்கப்பட்ட தலைவர்களில் ஜெயலலிதா, மோடியை போல் வேறு ஒருவர் யாரும் இல்லை. கொஞ்ச நஞ்ச அநியாயம் இல்லை. மோடி சரியில்லை என்பதை விமர்சனப் பொருளாக வைத்தால் பரவாயில்லை. வயிற்றெரிச்சலாக வைத்தால்..? எவ்வளவு நடந்து இருக்கிறது. இந்த 11 வருடத்தில் மோடி இந்தியாவை எங்கே நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறார் பாருங்கள்.
இந்தியாவிலிருந்து வரக்கூடியவர்களுக்கு மரியாதை அதிகம்
வெளிநாடுகளில் வாழக்கூடிய இந்தியர்கள் தங்களை பெருமமையோடு பேசுகிறார்கள். அண்ணாமலை பல வெளிநாடுகளுக்கு டிராவல் செய்திருக்கிறார். எவ்வளவு பெருமையாக அவர்களை வரவேற்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.போகிற வருகின்ற இடமெல்லாம் முன்பு இருந்த நிலைமை வேறு, இப்போது உள்ள நிலைமை வேறு. முன்பு பிழைக்க வந்தவர்கள் என்று நினைத்தார்கள். இப்போது இந்தியர்கள் என்றால் பெருமைப்படுகிறார்கள். அந்த விசா, பாஸ்போர்ட் இருக்கக்கூடிய மரியாதை இந்தியாவிலிருந்து வரக்கூடியவர்களுக்கு அதிகம்.
மோடி இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவதாக சொல்கிறார்கள். 2016 க்கு முன்பு வரை ஒண்ணேகால் லட்சம் பேர் தான் ஹஜ் யாத்திரை போய் கொண்டு இருந்தார்கள். இப்போது ஒன்றே முக்கால் லட்சம் பேர் செல்கிறார்கள். ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் அதிகம். அதற்கான அனுமதியை பிரதமர் மோடி வாங்கி கொடுத்திருக்கிறார். ஹஜ் யாத்திரைக்கு முன்பு பெண்கள் தனியாக செல்ல முடியாது. பெண்கள் யாராவது ஒரு ஆண் துணையோடு தான் செல்ல வேண்டும். இப்போது பெண்கள் தனியாகவும் போகலாம் என்கிற இஸ்லாமிய பெண் பெண்களுக்கு நல்வாய்ப்பை வழங்கி கொடுத்திருக்கிறார் மோடி.
இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறாமல் வெற்றி பெற முடியுமா?
ஒரு கலவரம் இல்லை. ஹஜ் யாத்திரை எண்ணிக்கை இப்போது கூடிக்கொண்டே போகிறது. பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை போகலாம். என்ன ஆச்சரியம்..! முத்தலாக் சட்டம் கொண்டு வந்த பிறகு அந்த பெண்ணின் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் வழக்குப் போட முடியாது. இதை யாராவது வெளியில் சொல்கிறார்களா? அந்த மனைவிக்கு வழக்கு போடக்கூடிய சுதந்திரம் யார் வாங்கி கொடுத்தார்? வாரணாசியில் கிட்டத்தட்ட 17 லட்சம் பேர் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அங்கு போட்டியிட்ட மோடி எப்படி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார் என்று யோசிக்க வேண்டாமா? யாராவது இஸ்லாமியர்களுடைய வாக்குகளை பெறாமல் வெற்றி பெற முடியுமா? மோடி ஒவ்வொன்றிலும் எவ்வளவு பெரிய இடத்தில் போய் நிற்கிறார் பாருங்கள்’’ எனத் தெரிவித்தார்.