அனைத்து குடும்ப தலைவிக்கு ரூ.1000 கொடுக்கிறேன் சொல்லிட்டு இப்படி அந்தர் பல்டி அடிக்கலாமா? இறங்கி அடிக்கும் EPS
திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை. தமிழகம் முழுவதும் ஊழல் என்ற குரல்தான் ஒலிக்கிறது. இரட்டை வேடம் போடும் ஒரே கட்சி திமுக ஒன்று தான் என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.
தமிழக தொழிற்சங்க உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய இபிஎஸ்;- திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும். திமுக ஆட்சியில் விலை உயராத பொருளே கிடையாது.
ஆனால் வருமானம் மட்டும் இன்னும் உயரவில்லை. அதிமுக ஆட்சியில் ரூ.6000 இருந்தால் குடும்பம் நடத்தலாம். திமுக ஆட்சியில் ரூ.9000 இருந்தால் தான் குடும்பம் நடத்த முடியும். அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகையை கூட விடியா அரசு முடக்கி வைத்துவிட்டது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுமான தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க;- அனைத்து குடும்ப தலைவிக்கு ரூ.1000 கொடுக்கிறேன் சொல்லிட்டு இப்படி அந்தர் பல்டி அடிக்கலாமா? இறங்கி அடிக்கும் EPS
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துவிட்டு தற்போது அந்தர் பல்டி அடிக்கிறது திமுக. ரூ.1000 உரிமைத்தொகை என அறிவித்த விடியா திமுக அரசு தற்போது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு ஆட்சிக்கு வந்ததும் அந்தர் பல்டி அடித்து வேறு பேச்சு என திமுக மக்களை ஏமாற்றிவிட்டது என இபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க;- ராகுலின் ஃப்ளைங் கிஸ் அன்பின் அடையாளம்! உங்க தலைவர்கள் ப்ளூ ப்லிம் பார்த்த போது எங்க போனீங்க! காயத்ரி ரகுராம்!
மேலும் ஏழை மக்கள் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்- திட்டம் ஜெயலலிதா பெயரில் இருந்ததால் அதனை திமுக அரசு மூடிவிட்டது. அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வினால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு கொண்டு வந்தது. திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை. தமிழகம் முழுவதும் ஊழல் என்ற குரல்தான் ஒலிக்கிறது. இரட்டை வேடம் போடும் ஒரே கட்சி திமுக ஒன்று தான் என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.