- Home
- Politics
- ‘யார் மீதாவது கோபம் இருந்தால் விஜய் கூட்டத்திற்கு அனுப்பி வைத்து கொல்வேன்..!’ வன்மம் கக்கும் சீமான்..!
‘யார் மீதாவது கோபம் இருந்தால் விஜய் கூட்டத்திற்கு அனுப்பி வைத்து கொல்வேன்..!’ வன்மம் கக்கும் சீமான்..!
நாங்களெல்லாம் சின்ன பிள்ளையாக இருக்கும்போது ஆட்டுக்கார அலமேலு படம் வந்தது. அதில் நடித்த ஆடு வருகிறது என பல்லாயிரம் பேர் கூடினார்கள். அந்த ஆடு இருந்திருந்தால் அமைச்சராக்கி இருப்பார்கள்.

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து நடுநிலையாக பேசிவந்த சீமான், இப்போது அந்த விவகாரத்தை வைத்து விஜய், தொண்டர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
விருதுநகர், சிவகாசியில் பேசிய சீமான், ‘‘மக்கள் தேர்வு செய்து விட்டார்கள் என்கிறார்கள். மக்களுக்கு என்ன அறிவை கொடுத்தாய். நான் ‘‘தேர்தல் ஆணையத்தில் சின்னத்தை எடுத்து விடு. எண்ணும் முறைக்கு வா. அமெரிக்கா போல 101, 121, 151 என்ன நம்பருக்கு வா’’ என்றேன். படிக்காதவன் என்ன செய்வான்? என தேர்தல் ஆணையர் கேட்டார். உங்க அண்ணன் நான் என்ன சொல்லி இருப்பீர்கள் என நினைக்கிறீர்கள்.
75 வருடம் விடுதலை பெற்றாகிவிட்டது. அவனை படிக்க வைக்காமல் என்ன புடுங்கி கொண்டிருந்தார்கள் என கேட்டேன். 75 வருடமாக ஒன்று இரண்டு பேரைக்கூட படிக்க வைக்காமல் என்னடா புடுங்கிக் கொண்டிருந்தீர்கள்? படிக்காதவன் எப்படிடா தனக்கான நல்ல தலைவரை தேர்வு செய்வான்? பைத்தியக்காரா... இப்படிதாண்டா கூடுவான். கூட்டத்தில் போய் சிக்கிச் சாவான். எனக்கு ரொம்ப கொலவெறி வந்தால் ‘‘இரு உன்னை அடுத்த கூட்டத்தில் உள்ளே தள்ளி விடுகிறேன்’’ என்று சொல்லி இருக்கிறேன். நான் நாம ஏன் இவனை போட்டுக் கொன்று ஜெயிலுக்கு போக வேண்டும்? போடா... அந்த கூட்டத்துக்கு போடா. நசுங்கி செத்துட்டு வாடா என்று அனுப்புவேன்.
நீ என்ன மனநிலையில் இருக்கிறாய். ஆட்டக்காரன் வீதிக்கு வந்தாலும் போகிறான். நாங்களெல்லாம் சின்ன பிள்ளையாக இருக்கும்போது ஆட்டுக்கார அலமேலு படம் வந்தது. அதில் நடித்த ஆடு வருகிறது என பல்லாயிரம் பேர் கூடினார்கள். அந்த ஆடு இருந்திருந்தால் அமைச்சராக்கி இருப்பார்கள். அவ்வளவு அறிவார்ந்த சமூகமாக இப்போது போய்க் கொண்டு இருக்கிறது. ஆட்சி மாற்றத்திற்கு அல்ல, ஆட்சி முறையை மாற்றுவதற்கு, அமைப்பை மாற்றுவதற்கு, அடிப்படையை மாற்றுவதற்கு, அரசியலை மாற்றுவதற்கு நாம் வந்துள்ளோம்.
இதுவரை இந்த நிலத்தில் இருந்த அரசியலுக்கும், நமக்கும் ஆயிரம் கிலோமீட்டர் தூரம், அவர்கள் வேறு, நாம் வேறு. அவர்களுக்கு எல்லாம் பெரியார். திமுகவுக்கு, அதிமுகவுக்கு இப்போது வந்திருக்கிறார் டிவிகே அவர்களுக்கு எல்லாம் பெரியார். எங்களுக்கு எங்கள் இனத்தின் முன்னவர்கள் எல்லோரும் பெரியார. எங்களுக்கு ஓராயிரம் பெரியார், சொந்த பெரியார். எங்கிருந்தோ வந்த பெரியார் உங்களுக்கு. லஞ்சமும், ஊழலும் உங்களுக்கு. உண்மையும், நேர்மையையும் எங்களுக்கு. உங்களுக்கும், எங்களுக்கும் ரொம்ப தூரம் இருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.