- Home
- Politics
- குடும்பத்தாரே விரும்பாத ஜாதி பெயர்..! சொந்தக் கட்டடத்திற்கு G.D ஆடிட்டோரியம் என்று மட்டுமே பெயர் வைப்பு
குடும்பத்தாரே விரும்பாத ஜாதி பெயர்..! சொந்தக் கட்டடத்திற்கு G.D ஆடிட்டோரியம் என்று மட்டுமே பெயர் வைப்பு
அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் கோவையில் ‘ஜி.டி அருங்காட்சியகம்’ இன்றும் இயக்குகிறது, அங்கு "நாயுடு" என்ற சாதிப்பெயரைத் தவிர்த்துள்ளனர். அவரது குடும்பமே அருங்காட்சியகத்தில் சாதிப்பெயரைத் தவிர்க்கிறது.

‘நாயுடு’ என்று வைப்பது முரண்பாடு
கோவை அவினாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலத்தை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தப் பாலத்திற்கு ‘இந்தியாவின் எடிசன்’ என்று புகழப்படும் கோவை விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயரை சாதிப்பெயருடன் சூட்டியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. காரணம், தமிழ்நாடு அரசின் 2021 வழிகாட்டுதல்கள், சாலைகள், கட்டிடங்கள், பாலங்களுக்குச் சாதி சார்ந்த பெயர்களை அகற்ற வேண்டும் என்று கூறுகின்றன.
தமிழக அரசு சாதி ஒழிப்பை வலியுறுத்தும் போது, ‘நாயுடு’ என்று வைப்பது முரண்பாடு என எதிர்கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள ஊர், தெரு பெயர்களில் உள்ள சாதி பெயர்கள் நீக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் ஜி.டி.நாயுடு என எப்படி பெயர் வைக்கலாம் என தமிழக அரசின் முரண்பாட்டை எதிர்த்து வருகின்றன.
சாதி சார்ந்தது அல்ல, கௌரவமளிப்பது...
சிலர் ‘ஜி.டி பாலம்’ என்று மட்டும் வைக்கலாம். சாதிப்பெயர் இன்று அவரது பங்களிப்பை அறிய உதவாது என்றும் கூறி வருகின்றன. ஆனால், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "ஜி.டி. என்றால் யார் என்பது தெரியாது. 'நாயுடு' உடன் சேர்த்தால் மட்டுமே அவரது பங்களிப்பு அறியப்படும். இது சாதி சார்ந்தது அல்ல, கௌரவமளிப்பது.
அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது?
கோவையில் முதல்வர் திறந்த மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டதை தவறாக புரிந்து, அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என வேண்டுமென்றே பொய் பிரசாரம் செய்கின்றனர். நீதியின் பயணமாக இருக்கக்கூடிய இந்த திட்டத்தை, அரசியல் லாபமாக பார்க்க வேண்டாம். அரசு பட்டியலில் இருந்துதான் பெயர் சூட்ட வேண்டும் என கட்டாயம் இல்லை. அந்த பகுதி மக்களே பெயரை தேர்வு செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட சமுதாய மக்கள் இழி நிலை படுத்தப்படுவதை தவிர்க்க இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 21 நாட்களில் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படும்’’ எனத் தெரிவித்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.
குடும்பத்தாரே விரும்பாத சாதி பெயர்
அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் கோவையில் ‘ஜி.டி அருங்காட்சியகம்’ இன்றும் இயக்குகிறது, அங்கு "நாயுடு" என்ற சாதிப்பெயரைத் தவிர்த்துள்ளனர். அவரது குடும்பமே அருங்காட்சியகத்தில் சாதிப்பெயரைத் தவிர்க்கிறது. ஏன் அரசு ஜி.டி பாலம் என பெயர் வைப்பதை தவிர்க்கிறது என கேள்வி எழுப்பப்படுகிறது. இந்நிலையில், ‘‘அவரது குடும்பத்தாரே சாதி பெயரை விரும்பவில்லை. ஆனால், அரசு சாதி பெயரை சேர்த்து வைக்கிறது. இது ஓட்டரசியல் இல்லாம வேறு என்ன? குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு பிடிவாதத்தை தளர்த்தி ஜி.டி பாலம் என பெயர் மாற்றம் செய்யாதவரை இந்த சர்ச்சை ஓய்வதாக தெரியவில்லை.