டெல்லிக்கு சென்ற எடப்பாடி... அமித் ஷா போட்டு வைத்திருக்கும் பகீர் ப்ளான்..!
அமித் ஷாவை எடப்பாடி சந்திப்பது ரொம்ப முக்கியம். முக்கியத்துவம் வாய்ந்த இந்த காலகட்டத்தில் அவர் அமித் ஷாவை சந்திக்க வரவில்லை என்பது ரொம்பவே பாஜகவை சங்கடப்படுத்தி இருக்கிறது.

அமித் ஷாவை சங்கடப்படுத்திய இபிஎஸ்
தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாஜக- அதிமுக எடப்பாடி பழனிசாமி பிரிவுகளுக்குள் பெரும் பிரளயம் ஏற்பட்டிருக்கிறது. அவசரமாக டில்லியின் அழைப்பை ஏற்று அமித் ஷாவை சந்திக்க டெல்லிக்கு புறப்பட்டு டெல்லிக்கு சென்று கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
பாமக கட்சியின் டாக்டர் அன்புமணி, கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி வீட்டுக்கு சென்றார். அங்கு கூட்டணி விஷயமாக பேசி ஒரு தீர்வு எட்டப்பட்டு அன்புமணி தலைமையிலான பாமகவோடு கூட்டணி முடிவாகி இருக்கிறது. ஆகையால் ராமதாஸ் தலைமையிலான பாமக இனி எந்த வகையிலும் அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்பில்லை. அவர் அனேகமாக திமுகவை பலப்படுத்துவார். இதுகுறித்து திருமாவளன் மூலம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டுடிருப்பதாக கூறப்படுகிறது. ராமதாஸ் அணிக்கு ஏழு இடங்களை திமுகவிடம் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை எடப்பாடி டெல்லிக்கு அழைக்கப்பட்டார். டெல்லிக்கு அவர் அழைக்கப்பட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார். அமித் ஷா கலந்து கொண்ட புதுக்கோட்டை நிகழ்ச்சியை எடப்பாடி பழனிசாமி ஒட்டுமொத்த புறக்கணித்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் குறித்து பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகி கூறும்போது, ‘‘பாஜக ஆட்சியில் மோடியின் ஆட்சியில் அதற்கு சவால் விடும் வகையில், ‘‘எந்த கொம்பனாரும் அதிமுகவின் ஆட்சி தடுக்க முடியாது’’ என்றார் எடப்பாடி. ஆரம்பத்தில் நயினார் நாகேந்திரனின் அந்த பிரச்சாரத்தில் துவக்கி வைத்து பங்கு பெற்ற எடப்பாடி பழனிசாமி, நிறைவு விழாவுக்கு அவர் வரவில்லை. அமித் ஷாவை எடப்பாடி சந்திப்பது ரொம்ப முக்கியம். முக்கியத்துவம் இந்த காலகட்டத்தில் அவர் அமித் ஷாவை சந்திக்க வரவில்லை என்பது ரொம்பவே பாஜகவை சங்கடப்படுத்தி இருக்கிறது.
மெகா கூட்டணியை விரும்பும் பாஜக
இன்றைக்கு ஜனவரி 7, 8ஆம் தேதி ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில் கூட்டணிக்குள் சமரசம் ஏற்படாதது பெரும் சிக்கலை ஏற்படுத்தும். எல்லாவற்றிலும் உதாசீனப்படுத்திய எடப்பாடி பழனிச்சாமி அழைப்பின் பேரில் அவசர கதியில் டெல்லி புறப்பட்டு இருக்கிறார். இதற்குள்ள பல விஷயங்கள் இருக்கிறது. எடப்பாடியிடம் டெல்லி சந்திப்பில் ‘‘நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என அமித் ஷா கேள்வி கேட்கக் கூடும். மற்றொரு தகவல், இந்த தேர்தல் முடியும் வரை எடப்பாடியை விட்டு வைக்கப் போவதாகவும், அதற்கு பின்பு அவருக்கு மிக ஒரு கடுமையான சக்கையை, ஒரு மாற்றுதலை உருவாக்க அதிமுக தலைமைக்கு எதிராக பாஜக சில முடிவுகளை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி தான் மட்டுமே கட்சியாக, தான் மட்டுமே தலைவராக, தான் எடுக்கும் முடிவுகள் மட்டும்தான் எல்லாம், தனக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்பட வேண்டும் என ஒரு குதிரைக்கு லாயத்தை போட்ட ஒற்றைப்பார்வையில் அவர் பயணிப்பது அந்த கட்சியை மிக மோசமாக வந்து வலுவிழக்க செய்திருக்கிறது. குறிப்பாக பாஜக, ஓபிஎஸ், டிடிவி.தினகரனை சேர்த்துக் கொள்ள வேண்டும். பாமகவை இணைக்க வேண்டும். மற்ற உதிரி கட்சிகளை எல்லாரையும் சேர்த்துக் கொண்டால் மட்டும் தான் பலம். தேமுதிகவிலிருந்து, ஜான்பாண்டியிலிருந்து, கிருஷ்ணசாமியிலிருந்து, நூறு ஓட்டுகள், ஆயிரம் ஓட்டுகள், 2000 ஓட்டுகள், ஐஜேகே எல்லாத்தையும் இணைத்து கூட்டணியை வலுப்படுத்த மத்திய தலைமை விரும்புகிறபோது.
விடாப்பிடி காட்டும் எடப்பாடி பழனிசாமி
அதற்கு ஒரு விதத்திலும் பிடி கொடுக்காமல் எடப்பாடி பழனிசாமி பயணித்துக் கொண்டே இருக்கிறார். அது மட்டுமின்றி முதலில் 85 தொகுதிகளை கேட்டது. பிறகு அதிமுகவுக்கு 150, பிறகட்சிகளுக்கு 74 கொடுங்கள் நாங்கள் பிரித்துக் கொள்கிறோம் என்று தான் பாஜக கேட்டது. அதற்கு பிறகும் எதற்குமே பதிலளிக்காத ஒரு சூழ்நிலையில் பாஜக 50 தொகுதிகளை கேட்டது. மதுரை, தூத்துக்குடி, அதேபோன்று விருதுநகர், கன்னியாகுமரி, கோயமுத்தூர், சென்னை மத்திய, கிழக்கு என நாங்கள் கேட்கிற 30 தொகுதிகளை கொடுங்கள். மீதி 20 தொகுதிகள் நீங்கள் கொடுப்பதை நாங்கள் வாங்கிக்கிறோம் எனக் கேட்டது. ஆனால் அதிமுக பிடிகொடுக்கவில்லை. அமித் ஷாவை கண்டால் ஆட்டம் போடுகிற இந்திய அரசியல் தலைவர்களில் அவருக்கே ஆட்டம் கொடுக்கிற அளவுக்கு இங்கிருந்து விளையாட்டு காட்டிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில் அவசரமாக அழைக்கப்பட்டு அவர் தற்போது டெல்லிக்கு சென்று இருக்கிறார். இந்த சந்திப்பு உணர்வுபூர்வமாக மட்டுமல்ல உணர்ச்சிப்பூர்வமாகவும் இருக்கும். அமித் ஷா கடுமையான எச்சரிக்கை விடுப்பார் என்று சொல்லப்படுகிறது. அவர் ஒரு விதமான சாணக்கியர். காட்ட வேண்டிய இடத்தில் காட்டுவார். ஆனால், இது சரியான நேரம் இல்லை என்பதை கூட அவர் மறைபொருளாக மறைத்து, பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் விட்டுக் கொடுத்துப் போய் கதையை முடிப்பதற்கும் அவர் திட்டமிடலாம். ஏனென்றால் நாட்கள் அவ்வளவு இல்லை. ஆக எடப்பாடி பழனிசாமி அங்கு சென்று ஓபிஎஸ், டிடிடி.தினகரனை சேர்ப்பதற்கு மறுத்தால் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. ஏனென்றால் 11 முறை தோல்வி கண்ட பிறகும், அனைத்து திட்டமும் தோல்வி அடைந்த பிறகும், உலக வரலாற்றில் ஒரு கட்சியில் சேர வருபவர்களை எல்லாம் மறுத்து அனுப்பக்கூடிய ஒரு தலைவனாக மாறி இருக்கிறார் எடப்பாடி.
இந்த நேரத்தில் அமித் ஷா சொல்வதை எடப்பாடி பழனிசாமி எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பது தெரியவில்லை. அதிமுக ஒற்றுமையாக இருந்திருந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி இருந்திருக்காது. சசிகலாவை சேர்த்திருந்தாலே அந்த கட்சிக்கு வலிமை மிக மிக அதிகரித்திருக்கும். அதற்கு பின் எல்லா தலைவர்களும் இவர்களுக்கு கீழ் வந்திருப்பார்கள் என்பதே எதார்த்தமான உண்மை. இதை அதிமுக காரர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். எதிர்க்கட்சியில் இருப்பவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். ஏனைய தலைவர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். எடப்பாடியைத் தவிர இதை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள்.
டெல்லியில் காத்திருக்கும் அதிர்ச்சி
அவர் மட்டும் இந்த கட்சிக்கு வந்துவிட்டால் இந்த கட்சி மிகப்பெரிய வலு பெற்றுவிடும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி என்ன நினைக்கிறார் என்றால் கட்சி நமது கையில் கடைசி வரை இருக்க வேண்டும். வெற்றி தோல்வியை பற்றி பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒரு கட்சியினுடைய தலைவராக, பொதுச்செயலாளராக, எல்லா இடத்திலும் தன் பெயரை போட்டு கழகத்தினுடைய பொதுச் செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் என்றே பயணிக்கலாம் என அவர் நினைக்கிறார். அதற்காக திட்டம் போட்டு ஆட்டை கடித்து, மாட்டை கடித்த கதையாக இப்போது தம்மையும் எடப்பாடி பழனிசாமி கடித்து விட்டடாக அமித் ஷா நினைக்கிறார். நமது கூட்டத்திற்கு வரவில்லை. நம்மை உதாசீனப்படுத்துகிறார் என அமித் ஷா நினைக்கிறார்.
தாம் கலந்து கொண்ட கூட்டத்தில் எல்லோருமே கலந்து கொண்டார்கள். எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. இது பொதுக்களத்தில் எந்த அளவுக்கு உதாசீனப்படுத்தினாரோ அதை டெல்லி சந்திப்பில் அமித் ஷா வெளிப்படுத்துவார். எடப்பாடி பழனிசாமி அமித் ஷா சந்திப்பு இன்று மாலைக்குள் முடிந்து விடும். பிறகு வெளியேறி எடப்பாடி பழனிசாமி பேட்டி வெளியாகும்போது இது வெளிப்படும். எடப்பாடி பழனிசாமியால் அமித் ஷா சொல்வதை தவிப்பதற்கான இடமில்லை. ஏனென்றால் தவெகவின் கதவுகள் மூடப்பட்டு விட்டது’’ என்கிறார்.