- Home
- Politics
- ‘இங்க எல்லாமே நான்தான்..! ஜெயலலிதா பாணியில் எடப்பாடியார்..! அதிகார கனவை உடைக்கும் செங்கோட்டையன்..!
‘இங்க எல்லாமே நான்தான்..! ஜெயலலிதா பாணியில் எடப்பாடியார்..! அதிகார கனவை உடைக்கும் செங்கோட்டையன்..!
இப்படியே போனால் அதிமுக செல்வாக்கை இழந்து நிற்கும். எடப்பாடியார் சீனியர்களை ஓரங்கட்டி கட்சிக்குள் அதிகாரங்கள் அனைத்தும் அவர் கையில் வைத்துக்கொள்ள நினைக்கின்றார். சீனியர்கள் எடப்பாடியாரின் ஆட்சிக்கனவை நொறுக்குகிறார்கள் அவ்வளவுதான்.

செங்கோட்டையன் மனம் திறந்து பேசப்போகிறேன் என அறிவித்தும் எடப்பாடி பழனிசாமி தரப்பு சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை. காரணம் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் ஜெயலலிதா பாணியை பின்பற்றி அரசியல் செய்ய நினைக்கிறார். அதனால்தான் இந்த முட்டல், மோதல்கள் எல்லாம் நடக்கிறது என்கிறார்கள் அதிமுக பிரமுகர்கள். அதனால் சமாதானத்துக்கு வழியில்லை என்றும் கூறுகிறார்கள்.
பலகட்ட அரசியல் மோதல்களை கடந்து, அதிமுகவை கைப்பற்றிய ஜெயலலிதா, கட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், எம்.ஜி.ஆருடன் அரசியலில் பயணித்த அமைச்சர்கள், சீனியர்களை ஓரம்கட்டி செல்லாக்காசு ஆக்கினார். தனக்கு நம்பிக்கையானவர்களை மட்டும் அருகில் வைத்துக்கொண்டு, அனைத்து அதிகாரங்களையும் தன்னிடமே குவித்து வைத்துக் கொண்டு அதிரடி அரசியல் செய்தார். அமைச்சர்கள் தலையாட்டி பொம்மைகள் ஆக்கப்பட்டனர். எந்த அமைச்சரும் தனிப்பட்ட முறையில், நிர்வாகத்திலும் சரி.. கட்சி விஷயமானாலும் சரி.. முடிவெடுக்க அதிகாரம் கிடையாது. போயஸ் கார்டனில் இருந்து உத்தரவு வரவேண்டும்.
அதே பாணியைத்தான் எடப்பாடியார் கையில் எடுத்திருக்கிறார். சீனியர்களை ஓரம்கட்டுவது, அவர்களுடைய எதிரிகளை கட்சிக்குள் வளர்த்து விடுவது, கட்சிக்குள் உரிய மரியாதை கொடுக்காமல் புறக்கணிப்பது, இது தான் அந்த பாணி. செங்கோட்டையன் விவகாரத்திலும் இதே தான் நடந்தது. பொருத்துப் பொருத்து பார்த்த செங்கோட்டையன் பொங்கி எழுந்து விட்டார். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சியில் இருப்பவர். சொந்த தொகுதியில் செல்வாக்கான மனிதர். அதிக்கடவு – அவிநாசி திட்டத்தில் ஆரம்பித்த பிரச்னை. சொந்த தொகுயில் ஒரு சீனியரை அவமானப்படுத்தினால் கோபம் வரத்தானே செய்யும்.
எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்த வேண்டும் என்று நினைத்து இருந்தால் எப்பொழுதோ சமாதானப்படுத்தி இருப்பார். மார்ச் மாதம் நடந்த பேரவைக் கூட்டத்தொடரில் கூட செங்கோட்டையன் தனித்தே இயங்கினார். எடப்பாடியார் தலைமையிலான எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் புறக்கணித்தார். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி போன்ற சீனியர்கள், அவரைச் சமாதானப்படுத்த முயன்றும், அது பலனளிக்கவில்லை. அப்போதாவது எடப்பாடியார் நேரடியாக செங்கோட்டையனை சமாதானப்படுத்தி இருக்கலாம். ஆனால் அவர் அதை விரும்ப மாட்டார். மாறாக, கட்சிக்குள் செங்கோட்டையன் குழப்பத்தை விளைவிப்பதாகவே பரப்பப்பட்டு வருகிறது.
சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் இவர்களை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்பதே இன்று அவர் கூறப்போகும் அஜான்டாவாக இருக்கும். கொங்கு பெல்டில் எடப்பாடியாரின் செல்வாக்கை சிதறடிக்கும் விதமாகவும் இருக்கும்.. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை கேள்விக் குறியாக்கும் முயற்சியாகவே அவரது செயல்பாடுகள் இருக்கும். ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பால் அவரது சமுதாய வாக்குகள் சிதறியது. இப்போ கொங்கு மண்டலதில் செங்கோட்டையனால் எடப்பாடியாரின் சமுதாய வாக்குகள் சிதறடிக்கப்படும்.
செங்கோட்டையனும், எடப்பாடியாரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், மிஸ்டர் க்ளீன் இமேஜ் செங்கோட்டையனுக்கு இருக்கிறது. அதிமுக சீனியர் நிர்வாகிகள், சீனியர் தொண்டர்களின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. கட்டாயம் அதிமுகவின் வாக்குகள் கொங்கு மண்டலத்தில் சிதறும்.
அதேபோல, இராமநாதபுரம் மாவட்ட அரசியலில் செல்வாக்கான அன்வர்ராஜா மாவட்டத்தில் உள்ள சிறும்பான்மையினர் பெல்ட்டில் செல்வாக்கானவர். ஏற்கனவே அன்வர்ராஜா விலகல் சிறும்பான்மையினர் வாக்குககளை கேள்விக்குறியாக்கி விட்டது. இன்னும் சில அதிமுக முக்கிய புள்ளிகளும் விலகுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படியே போனால் அதிமுக செல்வாக்கை இழந்து நிற்கும். எடப்பாடியார் சீனியர்களை ஓரங்கட்டி கட்சிக்குள் அதிகாரங்கள் அனைத்தும் அவர் கையில் வைத்துக்கொள்ள நினைக்கின்றார். சீனியர்கள் எடப்பாடியாரின் ஆட்சிக்கனவை நொறுக்குகிறார்கள் அவ்வளவுதான்.