- Home
- Politics
- நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுகவினரே முதுகில் குத்தியதால் கோபம் அடைந்த பரிதா நவாப் கடும் விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், முன்னாள் நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுகவினரே முதுகில் குத்தியதால் கோபமடைந்த கிருஷ்ணகிரி முன்னாள் நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் அதிமுகவில் இணைந்தது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி முன்னாள் நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப், மற்றும் முன்னாள் நகர கழக செயலாளர் நவாப் ஆகியோர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், திமுகவினரே அவரை தோற்கடித்ததால், கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், திமுகவில் இருந்து விலகிய பரிதா நவாப் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கருணாநிதி காலத்தில் இருந்து திமுகவில் இருக்கும் அவர் விலகியது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
கிருஷ்ணகிரி நகராட்சி 33 வார்டுகளைக் கொண்டது. இதில், திமுக கவுன்சிலர்கள் 22 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 5 பேரும் இருந்தனர். காங்கிரஸ், பா.ஜ.க கவுன்சிலர்கள் தலா ஒருவர் உள்ளனர். திமுக ஆதரவு சுயேட்சைக் கவுன்சிலர்கள் 4 பேர். நகராட்சித் தலைவராக திமுகவை சேர்ந்த பரிதா நவாப் என்பவரும், துணைத் தலைவராக திமுக-வைச் சேர்ந்த சாவித்திரி கடலரசுமூர்த்தி என்பவரும் இருந்தனர்.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி, திமுக ஆதரவு கவுன்சிலர்கள் 23 பேர் கூட்டாகச் சேர்ந்து, ‘ ‘நகராட்சித் தலைவர் பரிதா நவாப்பின் செயல்பாடுகள் நகரமன்றத்துக்கும், அரசுக்கும் எதிராக இருக்கிறது. அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர விரும்புகிறோம்’’ எனக்கூறி, நகராட்சி ஆணையர் சதீஷ்குமாரிடம் புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து, ‘‘நகராட்சித் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நவம்பர் 9ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும்’’ என அறிவித்தார். இதனைத் தொட்ர்ந்து, சமாதான பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பதற்காக திமுக கவுன்சிலர்கள் 20 பேர் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து, திட்டமிட்டபடி நவம்பர் 9ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நகராட்சி அலுவலக அறையில் கதவுகள் மூடப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டன. கவுன்சிலர்கள் வாக்குச்சீட்டை அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்தினர். முடிவாக, தலைவர் பரிதா நவாப்புக்கு எதிராக 27 கவுன்சிலர்கள் வாக்குகளைச் செலுத்தியிருந்தனர்.
இதனால், நகராட்சித் தலைவர் பதவியை இழந்தார் பரிதா நவாப். இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுகவினரே முதுகில் குத்தியதால் கோபம் அடைந்த பரிதா நவாப் கடும் விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், முன்னாள் நகர்மன்றத் தலைவர் பரிதா நவாபும், அவரது கணவரான முன்னாள் நகர கழக செயலாளர் நவாபும் திமுகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். கிருஷ்ணகிரியில் திமுகவில் மக்களிடையே செல்வாக்காக இருந்து வந்த நவாப் குடும்பத்தினர் அதிமுகவில் இணைந்தது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏறப்டுத்தி உள்ளது.
