- Home
- Politics
- சந்தி சிரிக்கும் அரசியல் நாகரீகம்..! விஜயை நடிகைகளுடன் இணைத்து கீழ்த்தரமாக பேசிய திமுக எம்.எல்.ஏ-க்கள்..!
சந்தி சிரிக்கும் அரசியல் நாகரீகம்..! விஜயை நடிகைகளுடன் இணைத்து கீழ்த்தரமாக பேசிய திமுக எம்.எல்.ஏ-க்கள்..!
தனக்கு எதிரியாக அவர் கட்டமைத்துள்ள தலைவரை அவர் அங்கிள் என்று அழைப்பதன் மூலம், உண்மையில் எதிரி என்ற பிம்பம் நீர்த்து போகவே வாய்ப்புண்டு. ஸ்டாலின் தனக்கு அப்பா என்ற பிம்பத்தை கட்டமைக்க பார்த்ததை உடைத்து நொறுக்கவே அவர் இப்படி முயன்றதாக சொல்லப்படுகிறது.

அரசியல் கட்சி என்றாலே, மாற்று கட்சியை மாச்சரியத்தோடு பார்ப்பதுதான் நடைமுறை என்ற காலம் இப்போது மீண்டும் தலைதூக்கி வருகிறது. காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோர் பின்பற்றிய அரசியலில், கொள்கை வேறாக இருந்தாலும், பண்பாடு மேலோங்கி இருந்து. நல்ல அரசியல் நாகரிகம் தூக்கி நின்றது. ஆனால், இப்போது முதல்வரை அங்கிள் என்று அழைப்பதும், பதிலடியாக அரசியல் தலைவரை நடிகைகளுடன் இணைத்து அநாகரிகமாக பேசுவதுமாக சந்தி சிரிக்கத் தொடங்கியுள்ளது.
மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில், பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அங்கிள் அங்கிள் என்று அழைத்தார். சென்ற முறை ஸ்டாலின் சார் என்றவர், இந்த முறை அங்கிள் என்ற வார்த்தையை பலமுறை உச்சரித்தார். ஒரு அரசியல் தலைவரை, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே என்றோ, மிஸ்டர் ஸ்டாலின் என்றோ, ஏன் ஸ்டாலின் சார் என்றோ அழைப்பதற்கு மாறாக இப்படி அங்கிள் என்று உறவு முறை வைத்து பேசுவது முறையல்ல.
தவெக தலைவர் விஜய்க்கும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அரசியல் ரீதியாகத் தான் முரண்களே ஒழிய, இது மச்சான், மாமன் இடையில் உள்ள பிரச்சினையல்ல.
ஸ்டாலின் அங்கிள்… வாட் அங்கிள்… இட்ஸ் வெரி ராங் அங்கிள்… தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அவர் கபட நாடக மு.க.ஸ்டாலின் அங்கிளாகவே இருந்தாலும் விடக் கூடாது. அங்கிள், அங்கிள் உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்… உங்கள் ஆட்சியில் நேர்மை நியாயம் இருக்கா சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கா, இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கா… சொல்லுங்க மை டியர் அங்கிள்…
பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுத்துவிட்டால் போதுமா அங்கிள்… மூடி மறைத்துவிடலாம் என்று பார்க்கிறீர்களா? படிக்கிற இடத்தில், வேலைக்கு போகிற இடத்தில் என எங்கும் அவர்களுக்கு பாதுகாப்பே இல்லை. ஒட்டுமொத்த பெண் பிள்ளைகள் எல்லாம் கதறுகிறார்கள். இதில் உங்களை அப்பா என்றுவேற சொல்வதாக சொல்கிறீர்கள்.. வாட் இஸ் திஸ் அங்கிள்… இட்ஸ் வெரி ராங் அங்கிள்… அய்யோ வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள். கேட்குதா… மை டியர் அங்கிள் கேட்குதா, மக்களின் சத்தம் கேட்குதா…’’ இத்தனை முறை அங்கிள் என விளித்தார் விஜய்.
தனக்கு எதிரியாக அவர் கட்டமைத்துள்ள தலைவரை அவர் அங்கிள் என்று அழைப்பதன் மூலம், உண்மையில் எதிரி என்ற பிம்பம் நீர்த்து போகவே வாய்ப்புண்டு. அதே சமயம் ஸ்டாலின் தனக்கு அப்பா என்ற பிம்பத்தை கட்டமைக்க பார்த்ததை உடைத்து நொறுக்கவே அவர் இப்படி முயன்றதாக சொல்லப்படுகிறது. ஸ்டாலின் அப்பா என்று தன்னை கட்டமைக்க முயன்றது அசிங்கம், தேவையற்றது. ஜெயலலிதாவை அம்மா என்று அதிமுக தொண்டர்கள் கட்டி எழுப்பிய பிம்பத்தை வைத்து ஸ்டாலினும் இப்படி முயற்சி செய்திருக்கலாம். அது ஒருபுறமிருக்கட்டும். அரசியலை அரசியலாக அணுக வேண்டும். இதில் உறவுமுறை சொல்வதெல்லாம் ஒருவித பாசாங்குத்தனம் தான்.
‘‘தமிழ் நாட்டின் அரசியல் மேடைகளில் நாகரிகத்தை முழுமையாக அழித்து, அநாகரிகத்தைப் புகுத்தி வளர்த்த கட்சி என்றால் அது திமுக’’ என்றொரு பலத்த விமர்சனம் உண்டு. அப்படிப்பட்ட திமுகவினர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்று அழைத்த விஜயை விட்டு வைப்பார்களா?
இதோ நடிகையுடன் தொடர்புபடுத்தியும் நாய் என்று விளித்தும் அநாகரித்தை விதைத்து வருகிறார்கள் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், ‘‘இன்று அணில் பிள்ளையாக வந்துள்ள விஜய் போன்றவர்களுக்கு எதுவும் தெரியாது. திரிஷாவுடன் போகலா? கீர்த்தி சுரேஷுடன் போகலாமா? என்பது தான் தெரியும் வேற எதுவும் தெரியாது. அப்பா, அம்மா, மனைவியை பார்த்துக் கொள்ள முடியாதவர் எப்படி மக்களை பார்த்துக் கொள்வார்? ஜெயலலிதா போல் ஸ்டாலின் இருண்திருந்தால் விஜயை துணியை உருவி விட்டு ஓட விட்டு இருப்பார்’’ எனப்பேசி இருக்கிறார்.
தொடர்ந்து விஜயை ஒருமையில் பேசி இருக்கிறார் திமுகவை ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சந்திரகுமார். ‘‘ஒண்ணே ஒண்ணு சொல்லட்டா. சூரியனை பார்த்து நாய் குறைக்கும். அதற்காக நாயைப்பார்த்து சூரியன் கோபப்படுவதில்லை.அது நாய் என்று தெரியும். அதை ஏன் நாம் பெரிசா எடுத்துக்கணும்? நாம சூரியன். உலகத்துக்கே வெளிச்சம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். அதைப்பார்த்து நாம ஏன் கோபப்படணும்?’’ என அநாகரிகமாக பேசி உள்ளனர். சந்தி சிரிக்கிறது அரசியல் நாகரிகம்..!