- Home
- Politics
- சர்வேயால் நொந்துபோன திமுக..! இந்த 60 எம்எல்ஏக்கள் 13 அமைச்சர்களுக்கு சீட் இல்லை..? ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!
சர்வேயால் நொந்துபோன திமுக..! இந்த 60 எம்எல்ஏக்கள் 13 அமைச்சர்களுக்கு சீட் இல்லை..? ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!
இப்போது எம்எல்ஏக்களாக இருப்பவர்கள் மட்டுமல்லாமல், சீட் எதிர்பார்த்து காத்திருக்கும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், திமுக வின் அதிகார மையங்களை சுற்றி வர ஆரம்பித்து இருக்கிறார்கள்"

2021 தேர்தலில் திமுக 133 இடங்களைப் பெற்றது. இந்நிலையில் 200 தொகுதிகளில் இந்த முறை வெல்ல வேண்டும் என்கிற இலக்கை நிர்ணயித்டுள்ளது திமுக தலைமை. புதியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் உத்தியை கையில் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மூன்று முறை எம்எல்ஏ-வாக பதவி வகித்தவர்களுக்கு இந்த முறை சீட் இல்லை எனிற முடிவை திமுக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2021ல் ஆட்சியை பிடித்த திமுக நான்கரை ஆண்டுகளை கடந்துள்ளது. ஆட்சி நிறைவடைய உள்ள நிலையில் அமலாக்கத் துறை சோதனை, நிதி பற்றாக்குறை, சட்டம் - ஒழுங்கு பிரச்னை என பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. அதே நேரத்தில், 2026 சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான பணிகளையும், திமுக தலைமை முழுவீச்சாக தொடங்கி விட்டது. தேர்தல் வியூகம் வகுப்பதற்கு ஒரு நிறுவனம், தொகுதி அரசியல் நிலவரங்களை ஆராய்ந்து சொல்வதற்கு ஒரு நிறுவனம், சமூக வலைதளங்களில் பிரசாரங்களை முன்னெடுக்க, ஒரு நிறுவனம் என மூன்று நிறுவனங்கள் திமுகவுக்கு வேலை செய்து வருகின்றன. இதில், 2021 சட்டசபை தேர்தலில் பணியாற்றிய நிறுவனத்திற்கும், சமீபத்தில் இணைந்துள்ள இந்நிறுவனத்திற்கும், சென்னை அண்ணா சாலையில் அலுவலகம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அரசியல் நிலவரங்களை ஆராய்ந்து சொல்லும் நிறுவனம் வழியாக, தொகுதி வாரியாக பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
அதில், தற்போதைய அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் செயல்பாடுகள், தனிப்பட்ட செல்வாக்கு, சமுதாய ரீதியான ஓட்டு வங்கி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அலசி ஆராயப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டு முறை வெற்றி பெற்ற பல எம்எல்ஏக்களின் செல்வாக்கு, தொகுதியில் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், வசூலிப்பில் மட்டுமே கவனம் செலுத்திய, சில அமைச்சர்கள் மீது அதிருப்தி அதிகரித்திருப்பதும் அம்பலமாகி உள்ளது. இதன் அடிப்படையில் திமுக தேர்தல் பணி நிறுவனங்கள் எடுத்த சர்வேயில், தனிப்பட்ட காரணங்களால், 60 எம்.எல்.ஏ.,க்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது.
இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர்களுக்கு 'சீட்' வழங்கக் கூடாது என்ற முடிவை திமுக தலைமை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு ஐந்து அமைச்சர்களுக்கு, 'சீட்' இல்லை என்ற முடிவை, ஏற்கனவே கட்சி தலைமை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, அவர்களது வாரிசுகள் அல்லது தொகுதியில் செல்வாக்குள்ள மற்ற நபர்களை களமிறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, வட மாவட்டங்களை சேர்ந்த இருவர், டெல்டாவை சேர்ந்த இருவர், சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், தென் மாவட்டத்தை சேர்ந்த மூவர் உள்பட 13 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
திமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் தொடர்பாக, தமிழக உளவுத் துறை கொடுத்த அறிக்கையும் அவர்களது செயல்பாடுகளை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருந்தபோது, 133 இடங்களில் திமுக வென்றது. 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்து விட்டு, தேர்தலை சந்திக்கும் நிலையில், வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்துகிறதாம் திமுக தலைமை. எனவே, புகாருக்குள்ளான தொகுதி பக்கமே செல்லாத எம்எல்ஏக்களுக்கு சீட் கிடைப்பது மிக சிரமம் என்று சொல்லப்படுகிறது.
இதனால், இப்போது எம்எல்ஏக்களாக இருப்பவர்கள் மட்டுமல்லாமல், சீட் எதிர்பார்த்து காத்திருக்கும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், திமுக வின் அதிகார மையங்களை சுற்றி வர ஆரம்பித்து இருக்கிறார்கள்" என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.