- Home
- Politics
- அமித் ஷாவுக்கு போன நேரடி ரிப்போர்ட்..! 5 திமுக அமைச்சர்களுக்கு டார்க்கெட்..! களத்தில் இறக்கிய பாஜக..!
அமித் ஷாவுக்கு போன நேரடி ரிப்போர்ட்..! 5 திமுக அமைச்சர்களுக்கு டார்க்கெட்..! களத்தில் இறக்கிய பாஜக..!
திமுக அமைச்சர்களுக்கு எதிராக குடைச்சல்களை ஏற்படுத்தும்போது நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற அந்த மிகப்பெரிய வெற்றி கனிந்து கைகூடும் என ஸ்கெட்ச் போட்டு இந்த வேலைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது என்.டி.ஏ கூட்டணி

திமுக மீது அட்டாக்... மோடி போட்ட பிள்ளையார் சுழி..!
பீகார் பிரம்மாண்ட வெற்றியை போல தமிழ்நாட்டிலும் என்.டி. கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, கோவைக்கு சமீபத்தில் வந்து, விவசாயிகளுக்கான நலத்திட்டநிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். கோவை வந்த அவர் இன்னொரு புறம் தமிழகத்தில் பூத் கமிட்டிகளை வலுவாக்குங்கள். நமக்கு தோதான தொகுதிகளில் இறங்கி வேலை பாருங்கள், தொடர்ச்சியாக ஆளும் திமுகவை அட்டாக் செய்யுங்கள் என சில விஷயங்களை அறிவுறுத்தி இருக்கிறார். அதற்கேற்றாற்போல தமிழ்நாடு பாஜக தலைவர் நாகேந்திரன் சட்டம் -ஒழுங்கு சரியில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது என ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களை அடுக்கி வருகிறார்.
இவை எல்லாவற்றையும் கடந்து, இன்னொரு புறம் திமுகவை மொத்தமாக முடக்க வேண்டும். முக்கிய அமைச்சர்களின் வேகத்தை, செயல்பாடுகளை முடக்க வேண்டும் என ஸ்கெட்ச் போட்டு சில வேலைகளிலும் இறங்கி இருக்கிறது பாஜக டெல்லி தலைமை. திமுகவில் 1டூ1 நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒவ்வொரு தொகுதி வாரியாக ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார்.
தமிழகத்தில் அமித் ஷா இறங்கிய டீம்..!
ஏற்கனவே 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என அமைச்சர்கள் பலரை மண்டல பொறுப்பாளர்களாக நியமித்து அவர்களுக்கு டார்கெட் கொடுத்திருந்தார். முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு கிட்டத்தட்ட மேற்கு மண்டலத்தில் மட்டுமே 38 தொகுதிகள் வரை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் சீனியர் அமைச்சர்களான கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மூர்த்தி, சென்னை சுற்று வட்டாரங்களுக்கு சேகர்பாபு, மா.சுப்ரமணியன் என பலருக்கு சில தொகுதிகளை ஒதுக்கி, இந்த தொகுதிகளில் வெற்றி பெற்றுத்தர வேண்டும் என ஏற்கனவே அவர்களுக்கு அசைன்மென்ட்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படி திமுக பொறுப்பு கொடுத்துள்ள மண்டல பொறுப்பாளர்கள் எல்லோரையும் டார்கெட் செய்ய பாஜக தரப்பில் சில டீம்களுக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு மண்டல பொறுப்பாளருக்கும் ஒவ்வொருத்தர் என பாஜகவில் ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்களது முதன்மையான வேலை என்னவென்றால் திமுகவில் முக்கியமான முகங்களாக மண்டல பொறுப்பாளர்களின் நகர்வுகள் எல்லாவற்றையும் தகவல்களாகத் திரட்டி டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நேரடி கண்காணிப்பில் தேர்தல் நெருங்குகிற நேரத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தனியார் ஏஜென்சிகள் சீக்ரெட்டாக சில வேலைகளை செய்வார்கள். சர்வேக்கள் எடுத்துக் கொடுப்பது, அங்கு இருக்கக்கூடிய சூழல்களை படம் பிடித்து காட்டுவதுதான் அவர்களது வேலை. அதே போல தமிழகத்தில் ஒரு டீம் ஏற்கனவே களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறது. இவர்களது தனி ரிப்போர்ட் அமித் ஷாவின் டேபிளுக்கும் போய் விட்டதாகச் சொல்கிறார்கள்.
டார்க்கெட்டில் 5 திமுக அமைச்சர்கள்
திமுகவில் உள்ள பல்வேறு அமைச்சர்கள் மீதான வழக்குகள், பல புகார்கள் என எல்லாம் மறுபடியும் தூசி தட்டப்பட இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பாஜகவிடம் சில விஷயங்களை வலியுறுத்தி இருக்கிறார். அதாவது அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்களான பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கிறது. இவர்கள் மீது வருமான வரித்துறையினர், அமலாக்கத் துறையினர் விசாரணை எல்லாம் ஏற்கனவே நடந்திருக்கிறது. ஆனால் சமீப காலமாக அந்த விசாரணைகள் எல்லாமே தொய்வாகி இருக்கிறது. அவை எல்லாமே மறுபடியும் வேகம் எடுக்க வேண்டும்.
டாஸ்மாக், மணல் வியாபாரம் உள்ளிட்ட பலவற்றிலும் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை எல்லாம் செய்தது. அது கொஞ்சம் அப்படியே டல்லாகி இருக்கிறது. இவை எல்லாவற்றையும் மறுபடியும் நாம் தூசி தட்டி ஒரு ஸ்பார்க்கை உருவாக்க வேண்டும் என சில விஷயங்களை முன் வைத்திருக்கிறார். அதில், குறிப்பாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை கூறு போட்டு கட்டட அனுமதி கொடுத்தது திமுக அரசாங்கம். பேரழிவுகளை உருவாக்கும் இயற்கைக்கு எதிரானது எனக்கூறி சட்ட ரீதியாகவும், சில நடவடிக்கைகளை முன்னெடுத்தது அதிமுக. இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்தால் திமுக மேலிடத்துக்கு, பெரிய குடும்பத்திற்கே சிக்கல்கள் ஏழலாம். நெருக்கடி வரும். இதை ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவித்து இருக்கிறேன். நீங்களுமே இதில் தனிக் கவனம் எடுக்க வேண்டும் என எடப்பாடி மோடி பிரதமர் மோயிடம் வலியுறுத்தி இருக்கிறார்.
ஆட்சி மாற்றத்துக்கு வழி
ஆகையால், திமுக அமைச்சர்களை தேர்தல் நேரத்தில் மொத்தமாக முடக்குவதுதான் பாஜக டெல்லி தலைமையின் ஒரே அஜெண்டாவாக இருக்கிறது. இவர்களை மொத்தமாக கவனித்து அவர்கள் மீது அடுத்தடுத்து விசாரணை போன்ற விஷயங்களை தூசி தட்டி நெருக்கடிகள் கொடுக்க வேண்டும். அதன் மூலமாக திமுக மண்டலப் பொருப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட மற்ற தொகுதிகளில் அவர்களது கவனம் சிதறும். அந்த நிலையில் அவர்களுடைய சொந்த தொகுதிக்குள், சொந்த மாவட்டத்துக்குள் மட்டுமே அவர்களது கவனம் இருக்கும். அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு தொகுதிகளில் கவனம் சிதறும். அப்போது இன்னும் இறங்கி அதிமுகவும், பாஜகவும் திமுகவை அட்டாக் செய்யலாம். ஏற்கெனவே மக்களிடம் திமுக மீது இருக்கக்கூடிய எதிர்ப்புணர்வு, சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் எல்லாமே அவர்களுக்கு தலைவலியாக மாறி ஆட்சி மாற்றத்துக்கும் வழிவகை செய்யும்.
நாம் இறங்கி, இப்படி திமுக அமைச்சர்களுக்கு எதிராக குடைச்சல்களை ஏற்படுத்தும்போது நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற அந்த மிகப்பெரிய வெற்றி கனிந்து கைகூடும் என ஸ்கெட்ச் போட்டு இந்த வேலைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது என்.டி.ஏ கூட்டணி’’ என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்.
